ரச்சிதா மகாலட்சுமியா இவங்க? சட்டையுடன் வந்தாரே? சின்னத்திரையின் சரோஜாதேவி எடுத்த திடீர் முடிவு இதுவே
சென்னை: சமூக விழிப்புணர்வுக்காக, குறிப்பாக இளம்பெண்களின் விழிப்புணர்ச்சிக்காகவும் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட படம் ஃபயர்.. வசூலில் சக்கை போடு போட்ட இந்த படம் பரபரப்பாக பேசப்பட காரணமே பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா.. இந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும், சற்று கிளாமராக நடித்திருப்பதாக எதிர்மறை விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில், ரச்சிதா செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரச்சிதா மகாலட்சுமி, கல்லூரியை முடித்துவிட்டு, பெங்களூரிலுள்ள சிறு சிறு டிவி ஷோவில் பங்கேற்று வந்தார்.. கடந்த 2010ம் ஆண்டு, விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் அறிமுகமாகி, பலரது கவனத்தையும் பெற்றார்.

பிறகு குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்த வாய்ப்புகளால் பிஸியான நடிகையாகிவிட்டார். குறிப்பாக, சரவணன் மீனாட்சி சீரியலானது, ரச்சிதாவை பட்டிதொட்டியெல்லாம் கொண்டுபோய் சேர்த்தது. இவருக்கென தனி ரசிகர் கூட்டம் பெருகியது.
காதல் திருமணம்
உச்சத்தில் பிஸியாக இருந்தபோதுதான், சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், அடுத்த சில வருடங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.. இறுதியில் தினேஷை விட்டு பிரிந்தார்.
டிவி சீரியல்களை தொடர்ந்து உப்பு கருவாடு உள்ளிட்ட சில படங்களில் ரச்சிதா நடித்திருந்தாலும், சமீபத்தில் அவர் நடித்திருந்த Fire படம் பரபரப்பாக பேசப்பட்டது.. ஜேஎஸ்கே சதீஷ்குமார் இயக்கி தயாரித்திருந்த இந்த படத்தில், பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாகவும், சாக்ஷி அகர்வால், சாந்தினி, உள்ளிட்டோருடன், ரச்சிதாவும் நடித்திருந்தார்.
சின்னத்திரை சரோஜாதேவி
ஆனால், உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்திருந்தார்.. அதிலும் ஒரு பாட்டில், எல்லை மீறிய கிளாமரில் நடித்திருந்தது எதிர்மறை விமர்சனங்களை ரச்சிதாவுக்கு பெற்றுத்தந்தது..
சின்னத்திரை சரோஜாதேவி என்று அனைவராலும் போற்றப்பட்டவர் ரச்சிதா மகாலட்சுமி.. காரணம் மூத்த நடிகை சரோஜாதேவி மாதிரியான தோற்றம், சரோஜாதேவி மாதிரியான குரல், கூர்மையான பார்வை கொண்டவர் என்றெல்லாம் கொண்டாடப்பட்டவர், கவர்ச்சி ரோலில் ஏன் நடிக்கிறார்? என்றெல்லாம் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேட்டனர்.
ஆபாசமாக தெரியவில்லை
எனினும் இதற்கு அப்போது பதிலளித்திருந்த ரச்சிதா , "இந்த படத்தின் கதை தெரிந்துதான் நான் நடித்தேன்.. இந்த கதைக்கு அது தேவைப்பட்டது. அதனால் அந்த காட்சிகளில் நடித்தேன்.. எனவே, எனக்கு அது ஆபாசமாக தெரியவில்லை. ஆபாசமாக தெரிந்தவர்கள், அவரவர் கண்களை பரிசோதித்து கொள்ளுங்கள்" என பதிலடி தந்திருந்தார்.
கணவரை பிரிந்த சோகத்தினால், இப்படியெல்லாம் ரச்சிதா நடிப்பதாக காரணம் கூறப்பட்டது.. அதேபோல பல நடிகைகள் ஃபயர் படத்தில் நடித்திருந்தாலும், ரச்சிதாவின் படமாகவே அது பார்க்கப்பட்டது.
ரச்சிதா எடுத்த முடிவு
இந்நிலையில், ஒரு வெப் தொடரில் ரச்சிதா நடித்து வருகிறார்.. அதேபோல சினிமாவில் நடிகர் விக்ராந்துக்கு ஜோடியாக மற்றொரு படம ஒன்றில் ரச்சிதா நடித்து வருகிறார்.. இதுகுறித்து செய்தியாளர்கள் ரச்சிதாவிடம் பேசும்போது, "இந்த படத்திலும் கவர்ச்சியான நடனம் அல்லது கதாபாத்திரம் உள்ளதா?" என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு ரச்சிதா, "இனிமேல் அது போன்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க மாட்டேன். எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்த தயாராக இருககிறேன். ஆனால், கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்கமாட்டேன் என முடிவெடுத்துள்ளேன்" என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications