Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார் ஓட்டிய ரச்சிதா.. சன்ரூபில் தலையை காட்டி சிவின் அட்ராசிட்டி.. அபராதம் விதிக்கப்படுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ரச்சிதா நேற்று (ஜூலை 8) தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக் பாஸ் சிவின் உடன் தான் காரில் பயணிக்கும் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் ரச்சிதா கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போது சிவின் சன் ரூபில் தலையை காட்டி புகைப்படம் எடுக்க, அதற்கு ரச்சிதா போஸ் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவிற்கு சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

சமீபத்தில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக சாலை விபத்துகளும் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் சாலைகளில் போகும்போது கூட பலர் ரீல்ஸ் வீடியோக்கள், செல்பி புகைப்படங்கள் எடுத்தும் சும்மா இருப்பவர்களையும் எங்களைப் போல நீங்களும் ஆபத்தை உணராமல் வாகனத்தில் பயணிகள் என்று சொல்வது போன்று தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Television Rachita Mahalakshmi Bigg Boss

ஒரு சிலர் எவ்வளவுதான் கண்ணும் கருத்துமாக சாலையில் பயணம் செய்தாலும் இன்னொருவர் செய்யும் தவறால் பல உயிர்கள் பறிபோய் கொண்டு இருக்கிறது. சாலை விபத்துகளில் பலர் தங்களுடைய இன்னுயிரை இழந்து தங்களுடைய ஆசை கனவுகள் நிறைவேறாமலே மரணம் அடைந்து இருக்கிறார்கள். அவர்கள் இறப்பால் குடும்பத்தினர் நித்தம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் சாலையில் போகும்போது பலர் அலட்சியம் காட்டி வருவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் மற்றும் சின்ன திரையில் சீரியல்களின் மூலம் பிரபலமடைந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இப்போது இணையத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அப்படி அந்த வீடியோவில் என்னதான் இருக்கிறது என்றால் ரச்சிதாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரோடு தோழியாக மாறிய சிவினும் சேர்ந்து ஒரு காட்டுப்பகுதி போன்று இருக்கும் இடத்தில் காரில் போய்க்கொண்டிருக்கின்றனர்.

அந்த காரை ரச்சிதா தான் ஓட்டிக் கொண்டிருக்கிறார். அவரோடு சிவின் சன் ரூபில் தலையைக் காட்டி செல்பி வீடியோ எடுக்க ரச்சிதா கார் ஓட்டியபடியே சிவினின் செல்ஃபிக்கு போஸ் கொடுக்கிறார். இந்த வீடியோவை ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்த நிலையில் அது அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சிலருடைய கண்டனங்களையும் பெற்று வருகிறது.

பொதுவாக காரில் சன் ரூப் வைக்கப்படுவது காரில் சென்று கொண்டிருக்கும் போது சூரிய ஒளி காருக்குள் விழ வேண்டும் என்று நினைக்கும் போது அதை திறந்து வைத்துக் கொள்ளலாம் என்பதற்காகத்தான். ஆனால் காரில் போய்க் கொண்டிருக்கும்போது சன் ரூப் வழியாக தலையை நீட்ட கூடாது என்ற விதி இருக்கிறது.

ஆனாலும் ஒரு சிலர் ரீல்ஸ் எடுப்பதற்காகவும் செல்ஃபி எடுப்பதற்காகவும் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது சென்று வெளியே தலையை நீட்டிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளும் சன் ரூப் வழியாக வெளியே பார்க்க ஆசைப்படுகிறார்கள். சமீபத்தில் கூட பெங்களூரில் ஒருவர் மாரத்தஹள்ளி மெயின் ரோட்டில் செல்லும்போது இரண்டு குழந்தைகள் ஒரு காரில் சன் ரூப் வழியாக வெளியே தலையை காட்டிக்கொண்டு வந்ததை வீடியோ எடுத்து ஒரு நபர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்த நிலையில் அலட்சியமாக வாகனம் ஓட்டியதற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

Television Rachita Mahalakshmi Bigg Boss

இதுகுறித்து நகரும் கார் அல்லது எக்ஸ்கியூவில் சன் ரூஃபிலிருந்து பாப் அவுட்டு செய்ய ஒருவரை அனுமதிப்பது பாதுகாப்பற்ற ஓட்டும் முறை என்று காவல்துறையின் இணை ஆணையர் (போக்குவரத்து) எம்.என் அனுஷத் கூறி இருக்கிறார். பொதுவாக ஓடும் காரின் சன்ரூபில் இருந்து வாகனத்தில் செல்வோர் தலையை வெளியே எடுக்க அனுமதிப்பது, பாதுகாப்பற்றது மற்றும் ஆபத்தானது.

இந்த விஷயத்தில் பெரிய விபத்துக்கள் எதுவும் இல்லை என்றாலும் அத்தகைய நடைமுறை முற்றிலும் சட்டவிரோதமானது. எனவே இதுபோன்ற கார் உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் மீது அவசர மற்றும் கவன குறைவாக வாகனம் ஓட்டியதற்காக ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் பதிவு செய்கிறோம் என்று அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் இப்போது ரச்சிதா மகாலட்சுமி சிவினுடன் காரில் சன் ரூஃப் பயணம் செய்து வீடியோ வெளியிட்டது குறித்து அவருக்கு அபராதம் விதிக்கப்படுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பொதுவாக பிரபலங்களைப் போலவே நாமும் செய்ய வேண்டும் என்ற ஆசை பல சாதாரண மக்களின் மனதிலும் இருக்கிறது. இந்த நிலையில் சின்னத்திரை நடிகையாகவும் தற்போது வெள்ளி திறையிலும் காலடி எடுத்து வைத்திருக்கும் ரச்சிதா பலருக்கும் பிரபலமாக இருக்கும் நிலையில் ரச்சிதாவை போலவே நாமும் செய்யலாம் என்று பலர் கிளம்பி விட்டால் பல ஆபத்துகள் வரும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

ரச்சிதா மலைப்பகுதியில் கார் ஓட்டியது போல தெரிகிறது. ஆனால் அது எந்த இடம் என்று அவர் அந்த வீடியோவில் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் அவர் கார் ஓட்டிக்கொண்டிருக்கும் போது செல்பி எடுப்பதற்கு திரும்பி போஸ் கொடுக்கிறார். அப்போது தன் முன்பு வரும் வாகனத்தை அவர் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் ஆபத்து ஏற்படும்.

அதே நேரத்தில் மலைப்பகுதியில் சாலைகளில் சின்ன பிரச்சனை இருந்தால் கூட அது அவருக்கும் சரி, அவரை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். அதை ஏன் ரச்சிதா கவனிக்க மறந்துட்டார் என்பது சிலருடைய கேள்வியாக இருக்கிறது. அதுபோல கார் ஓட்டிக் கொண்டிருக்கும் போது சன் ரூப் வழியாக இவர்கள் இருவரும் செல்பி எடுத்துக் கொண்டு வண்டி ஓட்டும் போது ஏதாவது பூச்சி கண்ணில் பட்டால் கூட அது மரண வேதனையை கொடுக்கும், அப்போது கூட விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் இதுபோன்ற சாகச செயல்களை வாகனம் ஓட்டும் போது யாரும் செய்யக்கூடாது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+