செல்லக்குட்டி உன்னைக் காண.. சிலிர்த்துப் போன ரட்சிதா.. கையைத் தூக்கி... ஆஹா!
சென்னை: மழையை ரசிக்காதவங்க இருப்பாங்களா.. அது மாதிரிதான் நம்ம ரட்சிதா மகாலட்சுமியும். ஆமாங்க, நாம் இருவர் நமக்கு இருவர் மகாதான்.
மழையை ரசித்ததோடு இல்லாமல் அதை வீடியோப் படமாக்கி மியூசிக்கையும் சேர்த்து மிரட்டலாக போட்டுள்ளார். அதில் அவரை ரசித்தவர்கள்தான் அதிகம்.
மகா நீங்க க்யூட், சூப்பர், வேற லெவல் என்று ரசிகர்கள் ஊற்றிய ஜொள்ளு மழையும் சேர்ந்து ரட்சிதாவை குஷிப்படுத்தி விட்டதுங்க.

நாம் இருவர் நமக்கு இருவர்
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ரட்சிதா வந்ததும் அது வேற லெவலுக்குப் போய் விட்டது. முதல் பார்ட்டை விட இந்த பார்ட் அதி வேகமாக பிரபலமாகி விட்டது .இதற்கெல்லாம் காரணம் கொரோனாதான் .கொரோனா வந்துதான் முதல் பார்ட்டை நிறுத்தியது .இதனால்தான் 2வது பாகம் எடுத்தனர் .அதில் ரட்சிதாவுக்குவாய்ப்பும் கிடைத்தது.

முண்டியடிக்கும் ரசிகர்கள்
கிடைத்த வாய்ப்பை சூப்பராக அசத்தி விட்டார் ரட்சிதா .இவருக்காகவே இந்த சீரியலைப் பார்ப்போர் அதிகமாகி விட்டனர் .அந்த அளவுக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார் ரட்சிதா .சும்மாவே இவருக்கு சரவணன் மீனாட்சி மூலம் ரசிகர்கள் அதிகம் .இப்போது சொல்ல வேண்டுமா மேலும் பல மடங்கு அதிகமாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு வஞ்சமே வைக்காமல் கலக்கலாக நடிக்கிறார் ரட்சிதா.

இன்ஸ்டாகிராமில் பிசி
இப்போது அவர் இன்ஸ்டாவிலும் பிரபலம்தான் .இப்பக் கூட பாருங்க மழை பெய்ததும் சூப்பராக அதை வீடியோவைக்கி விட்டார் .அதைவைத்து பாட்டுக்களைச் சேர்த்து அவர் போட பின்னாடியே வந்து விட்டனர் ரசிகர்களும் .ரசித்து ரசித்து உருகி உருகி அவர் வீடியோ போட அதைப் பார்த்துப் பார்த்து மருகி மருகி கமெண்ட் போட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

சூப்பர்க்கா
உங்க புன்னகை இருக்கே அக்கா சூப்பர்க்கா.. உங்களோட சிரிப்பு பிடிக்கும்.. ரொம்ப க்யூட்டுக்கா.. நீங்க கவர்ச்சிகரமாக இருக்கீங்கக்கா.. என்று அக்கா போட்டுக் கொண்டே கவர்ச்சி அது இது என்று ஒரு ரசிகர் வழிந்து தள்ளி தனது பாசத்தைக் கொட்டத் தெரியாமல் அள்ளித் தெளித்துள்ளார். உண்மையிலேயே இந்த ரசிகர் ரொம்பத்தான் புல்லரித்துப் போய் விட்டார் போல.. ஆறா ஓடுது!

வழிந்தோடும் பாசம்
இன்னொரு ரசிகரும் ரொம்பவே உருகி வழிந்துள்ளார் .உண்மையில் மழைதான் லக்கி உங்களை நனைத்து தொட்டு விட்டதே உங்களது மகிழ்ச்சியும் மழை போல வழிந்தோடுது. உங்க தலைமுடி வாவ்.. ரொம்ப க்யூட்டா இருக்கீங்க உங்க முகத்தில் எப்பவுமே அந்தப் புன்னகை அழகா இருக்கு எப்பவும் ஹேப்பியா இருங்க உங்க மகிழ்ச்சிதான் எங்க மகிழ்ச்சி டார்லிங் டன்ஸ் ஆப் லவ் பா என்று கூறி உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

போதையாகிப் போச்சு
அதேபோல இன்னொரு ரசிகர் தங்கமே உங்க சிரிப்பு பாக்க பாக்க பாத்துட்டே இருக்கணும் போல இருக்கு டெய்லி டெய்லி ஏதாவது போஸ்ட் பண்ணுவீங்களா என்று கேட்டு அன்பை வெளிப்படுத்தியுள்ளார் .இவர் ரட்சிதாவின் கண்ணுக்கும் புன்னகைக்கும் போதையாகிப் போய் விட்டவராம் . அதையும் சொல்லியுள்ளார். இன்னொருவரும் இதேபோல உணர்ச்சிவசப்பட்டு சில்லரையை சிதற விட்டுள்ளார்.

ரச்சும்மா ரச்சும்மா
அடுத்தவரைப் பாருங்க.. ரச்சும்மாவாம் இவருக்கு ரட்சிதா .ரச்சும்மா பேச வார்த்தையே வரலை.. உங்க மகிழ்ச்சியைப் பார்த்துட்டு.. மொத்தமாக ஊமையாகிட்டேன்.. உங்க க்யூட்னெஸ் சூப்பரா இருக்கு இன்னிக்கு டார்லிங் . அப்படியே பாத்துட்டே இருக்கணும் போல இருக்கு அக்கா என்று கூறி டக்கென அக்காவாக பாவித்து தனது பாசத்தை கொட்டி முடித்துள்ளார் இந்த ரசிகர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications