வந்தாச்சு கோடீஸ்வரி.. கலகலக்கப் போகும் கலர்ஸ் டிவி.. ராதிகா ரெடி.. நீங்க ரெடியா

Subscribe to Oneindia Tamil

சென்னை : கலர்ஸ் டிவி நிறுவனம் ஹிந்தியில் செயல்பட்டு வந்த நிறுவனமாகும் தற்போது தமிழில் துவங்கபட்டு சீரியல்கள் மற்றும் படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொலைக்காட்சி தமிழில் துவங்க படும் போது ஆர்யாவின் நம்மவீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியுடன் துவங்கபட்டது .

தற்போது மக்களின் பல பிடித்தமான சேனல்களில் ஒன்றாக கலர்ஸ் தமிழ் டிவி நம்ம ஊரு கலரு என்று மாறியுள்ளது

 நடிகை ராதிகா கோடீஸ்வரி

நடிகை ராதிகா கோடீஸ்வரி

தற்போது கலர்ஸ் தமிழ் மற்றும் ஸ்டூடியோ நெக்ஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி தான் கோடீஸ்வரி. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் மிக பெரிய நடிகையான ராதிகா. கோடீஸ்வரி நிகழ்ச்சி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியினை போல் உருவாக்கபட்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி.

ஒரு பெண்

ஒரு பெண்

இந்த மாதிரியான நிகழ்ச்சி உலகம் முழுவதும் நடத்தபட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஹிந்தியில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய வரலாறும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தமிழில் சூர்யா மற்றும் அரவிந்த்சாமி தொகுத்து வழங்கி இருக்கின்றனர் . இருப்பினும் இந்த நிகழ்ச்சியை ஒரு பெண் தொகுத்து வழங்குவது இதுவே முதல் முறையாகும் .

முழுக்க முழுக்க பெண்களுக்கான

முழுக்க முழுக்க பெண்களுக்கான

மேலும் இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க பெண்களுக்கான நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே நடிகர் அமிதாபச்சன் ராதிகாவிற்கு வாழ்த்து கூறியிருந்தார். அதில் அவர் நீங்கள் தான் இந்த நிகழ்ச்சி வரலாற்றின் முதல் பெண்மணி வாழ்த்துகள் ராதிகா ஜீ என்றும் கூறியிருந்தார் .

அதிகமான பெண்கள்

அதிகமான பெண்கள்

தற்போது இந்த நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 முதல் 9.30 வரை ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி பற்றிய செய்தியை அறிவித்ததில் இருந்து சுமார் 3000த்திற்கும் அதிகமான பெண்கள் இந்த நிகழ்ச்சிக்காக விண்ணப்பித்து இருக்கின்றனர். இதில் உயர்வகுப்பு பெண்கள் முதல் கடைகோடி பெண்கள் வரை அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.

துவக்க விழா முடிந்து

துவக்க விழா முடிந்து

ராதிகா தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சியின் துவக்க விழா நடைப்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் இணைய ஒளிபரப்பை 'ஊட்' ஆப் பெற்றுள்ளது. நீங்களும் வெல்லலாம் நிகழ்ச்சியில் இருந்த அதே விதிமுறைகள் தான் இந்நிகழ்ச்சியிலும் என்று தெரிவிக்கபட்டுள்ளது .உலக வரலாற்றில் ராதிகா எனும் பெண் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தமிழ்நாட்டிற்கும் பெண்களுக்கும் பெருமை தேடி தந்துள்ளது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+