chithi 2 serial: சித்தி 2 சத்தமில்லாமல் ஒரு சூப்பர் புரட்சி!
Recommended Video
சென்னை: சன் டிவியின் சித்தி 2 சீரியலில் ராதிகா சரத்குமார் சத்தமில்லாமல் புதிய புரட்சி செய்துள்ளார். இதில் சாரதாவாக நடித்து வருகிறார் ராதிகா. சாரதா தனது அக்கா மகன் அன்பு காதலிக்கும் பெண்ணையே பேசி திருமணம் முடிக்க ஏற்பாடு செய்து சீரியலில் கல்யாண வேலைகள் ஆரம்பமாகி உள்ளது.
வரப்போகும் மருமகள் நந்தினிக்கு தாலிச்செயின் வாங்கி கடையிலேயே நந்தினியிடம் கொடுத்தும் விடுகிறார். தாலிச்செயின் வாங்குவது வழக்கமான சம்பிரதாயம்தான். இதில் புரட்சி ஒன்றும் இல்லை. நந்தினியின் அப்பா கடன்காரராகி, இப்போது சொத்துக்கள் இல்லாமல் இருப்பதாக காண்பித்தும் இருக்கிறார்கள்.
நந்தினிக்கு மாப்பிள்ளை அன்புவின் சாரதா சித்தி நிறைய நகைகள் வாங்கி வைத்து இருக்கிறார். மாப்பிள்ளை வீட்டில் பெண்ணுக்கு நகை போட்டு கல்யாணம் செய்து அழைத்து வருவது என்பது புது புரட்சிதானே...இதைத்தான் சொன்னோம்... சத்தமில்லாமல் புதிய புரட்சி என்று.

இவ்வளவு நகைகளா?
ரெண்டாவது மருமகளுக்கு ராதிகா வாங்கி வைத்து இருக்கும் அழகழகான நகைகளை வெண்பாவும், செவ்வந்தியும் எடுத்து பார்த்து வியந்து போட்டு ரசித்து பார்க்கிறார்கள். இதை பார்த்த மூத்த மருமகளுக்கு கோவம் வந்திருது. ரெண்டாவது மருமகள் மட்டும் என்ன ஸ்பெஷலா? நாங்க ஓடிப்போய் கல்யாணம் செய்துகிட்டா நகை போட மாட்டீங்களான்னு கோச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு கிளம்பிப் போயிடறா. மூத்த மருமகளை 10 பவுன் நகை போட்டு வீட்டுக்கு அழைச்சுட்டு வர புறப்படறாங்க சாரதாவும், சண்முகமும்.

பணக்கார மருமகள்
நந்தினி பணக்கார மருமகள்னு அவளுக்கு நகை நிறைய நகை போட்டு கல்யாணம் செய்து அழைச்சுக்கிட்டு வர போறீங்களா என்று ஒரு டயலாக் மூத்த மருமகள் பேசுவது போல. நந்தினி வீட்டில் எல்லாமே கடனில் போச்சு. இன்னும் கடன்தான் பாக்கி இருக்கு. நந்தினி சம்பாதிக்கறதை கூட கல்யாணத்துக்கு பிறகு அவங்க அப்பா வீட்டில்தான் குடுப்பா. அதுக்கும் சித்தி சம்மதம் சொல்லியாச்சு. அப்புறம் இந்த டயலாக்கை எழுதினால் எப்படி? நீங்க கதையை மறந்துட்டீங்களா? இல்லை மக்கள் கதையை மறந்து இருப்பாங்கன்னு நினைச்சு எழுதறீங்களா?

நகை போட்டு
மூத்த மருமகளின் கோவத்தைத் தணிக்க அவளுக்கும் நகையை போட்டுவிட்டு, வீட்டுக்கு அழைச்சுட்டு வராங்க சாரதாவும், சண்முகமும். தமிழ்நாட்டில் நகைகளை போட்டு மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டு வரும் நல்ல விஷயம் சித்தி 2 பார்த்த பிறகாவது நடக்குமா என்கிற ஏக்கம் நிறைய பெண்ணைப் பெற்றவர்களுக்கு வந்துள்ளது. இது போன்ற காட்சிகள் இன்றைய காலக்கட்டத்துக்கு ரொம்பவும் தேவையாகத்தான் இருக்கிறது.

கவனம் கதையில்
ஆனால், சித்தி 2 சீரியல் கதைக்குழு டோட்டலா கதையையே மறந்துட்டு, நந்தினி பணக்கார வீட்டுப் பெண் என்றெல்லாம் வசனம் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். இப்போது சின்ன தவறாக அவர்கள் செய்து, டயலாக் எழுதி இருப்பது பிற்பாடு பெரிய தவறுகளில் கூட முடியலாம். கடனை குடுக்க முடியாமல் கடன்காரரரிடம் திட்டு வாங்கிக்கொண்டு இருப்பது போல முன்பு காட்டிவிட்டு, அதே நந்தினியை இப்போது பணக்கார மருமகள் என்று மூத்த மருமகள் சொல்வது போல் சொல்லி இருப்பது தப்புதானே? அதோடு, அவள் கல்யாணத்துக்கு பிறகும் தன் சம்பளத்தை வீட்டுக்குத்தான் தருவாள் என்றும் பேசியாகி விட்டது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications