Chithi 2 Serial: சித்திக்கு கோவம் வந்துச்சு.. மூக்கை இப்படிக்கா அப்டிக்கா.. தடவி விட்டு!
சென்னை: சன் டிவியின் சித்தி 2 சீரியலில் சாரதாவுக்கு மூக்கை விரலால் இந்தப் பக்கமும், அந்த பக்கமும் தடவும் மேனரிஸத்தை கடந்த இரண்டு எபிசோட்களாக புகுத்தி இருக்கிறார்கள்.
இவருக்கு பிறந்த அந்த பெண் குழந்தைக்கும் அந்த பழக்கம் இருப்பதாக காண்பிக்கிறார்கள். அவர் லண்டனில் வளர்கிறார். அங்கு அவர் சாரதா மாதிரி மூக்கின் இரண்டு புறமும் விரலால் தடவுகிறார்.
ராதிகாவை திடீர்னு இதை செய்ய வைக்கும்போது காட்சிக்கு ஒட்டாமல் இருக்கிறது. எதாவது கோபம், அல்லது அழுகை வரும்போது இப்படின்னு இருந்தால் கொஞ்சமாவது எடுபட்டு இருக்கும்.

அன்பு பேசியதில்
தனக்கு சூடு வச்சுட்டாங்க சித்தி என்று மனைவி நந்தினி சொன்னதை வைத்து, அன்பு நம்புவது.. சித்தியிடம் வந்து சூடு வலி உடனே போயிரும்.. ஆனா..அந்த காயம் ஆற பல நாள் ஆகும் சித்தின்னு அன்பு சொல்லிட்டு போறான். அப்போ போயி ராதிகா மூக்கின் இரு பக்கமும் விரலால் தடவுவது மாதிரி...

கணுக்கால் மச்சம்
கணுக்காலில் ராதிகாவுக்கு இருக்கும் மச்சம் போலவே, அவருக்கு பிறந்த பெண்ணுக்கும் இருக்கிறது. இது ஒன்றோடு இருந்திருக்கலாமே.. எதுக்கு இந்த மேனரிஸம் எல்லாம்.. இன்னும் இன்னும் என்று கதையை மேம்படுத்த பாருங்கள்.. என்னடா சித்தி 2 இப்படி போகுதே.. என்னாகுமோ ஏதாகுமோ என்று கவலையில் இருக்கிறார்கள் சித்தி முதல் சீசன் ரசிகர்கள்.

மருமகளை கை நீட்டுவது
வீட்டுக்கு வந்த மருமகளை கை நீட்டி அடிப்பது என்பது பெரும் தவறு.. இதை அசால்ட்டா செய்ய வச்சுட்டாங்க சாரதாவை. அப்புறம் தானா சூடு வச்சுக்கிட்டு அத்தை வச்சுட்டாங்கன்னு சொல்ற அளவுக்கு அந்த பொண்ணு நந்தினி புத்தி இப்படித்தான் போகும்.. வீட்டுக்கு வந்த மருமகளை அடிப்பது எவ்ளோ பெரிய தப்பு... இதை உணரும்படியான காட்சிகள் சித்தி 2 சீரியலில் இல்லை.

சித்தி கிரேஸ்
சித்தி முதல் சீசன் கிரேஸ் போகாமல் இன்னும் சித்தி 2 சீரியலை ரசிகர்கள் பார்த்துகிட்டு இருக்காங்க. அதை காப்பாத்திக்கற மாதிரியான கதை மாற்றம், காட்சி மாற்றம்தான் இப்பபோதைக்கு சித்திக்கு உடனடி தேவை. சித்தி 2 சீரியலின் புதிய இயக்குநர் சுலைமான் அதைத் தருவாரா பார்க்கலாம். சட்டுப்புட்டுன்னு ஒரு பரபரப்பை கிளப்பி சித்தியை அனல் பறக்க வைங்கப்பா.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications