அக்காவுக்கு ஒரு ஹக் குடுங்க... தட்றோம்... தூக்கறோம்...!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சி ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கி வருவதால் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அருமையாக இருக்கிறது.
கலந்துக் கொள்பவர்கள் பெண்கள் எனும்போது இன்னும் சிறப்பாக இருக்கிறது.
பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவருக்குள் இருந்தும் தனித் தனி சிறப்புத் திறமைகள் அனுபவங்கள் என்று நிகழ்ச்சி களைக்கட்டுகிறது.

ஆடிஷன் மகாலட்சுமி
ஆடிஷன் சீட்டில் உட்கார்ந்ததே பெரிய விஷயம் என்று அழுத மகாலட்சுமி, ஹாஸ்டலில் வளர்ந்த பெண்ணாம். அதிர்ஷ்டம் கெட்டவள் என்று எல்லாராலும் தூற்றப்பட்ட பெண்ணும் கூட. இவர் தேர்ச்சி அடைந்து கால் கோடீஸ்வரி அளவுக்கு வெற்றி பெற்று வந்த நிலையில் இவருக்கு ஊக்கம் கொடுத்த மற்ற நான்கு போட்டியாளர்கள் இவருக்கு ஊக்கம் கொடுத்தனர்.

அருகில் ராதிகா
மகாலட்சுமி வெறும் +2 படித்த தான் இந்த ஆடிக்ஷன் சீட்டில் உட்கார்ந்ததே பெரிய விஷயம் என்று கண் கலங்கி உட்கார்ந்து இருக்க, ராதிகா எழுந்து அவர் அருகில் போனார். மகாலட்சுமி கொஞ்சம் நாம் ரெண்டு பேரும் பேசலாம் என்று சொன்னார் ராதிகா.பின்னர் உங்க வீட்டுக்காரர் பேரு என்ன என்று கேட்டார்.

மகாலட்சுமி அதிர்ஷ்டலட்சுமி
சக்திவேல் என்று சொன்னார் மகாலட்சுமி. ஒரு விஷயம் உங்ககிட்டே நான் கேட்கணும்னு சொன்னார்... சொல்லுங்க என்று சக்திவேல் சொல்ல, ஒரு லட்சத்து முப்பதாயிரம் பெண்கள் அப்ளை பண்ணின ஷோ இது. இதுல தேர்வான 20 போட்டியாளர்களில் மகாலட்சுமி ஒருத்தங்க. ரெண்டாவது வாரத்துல இங்கே வந்து உட்கார்ந்து 5 தடவை மின்னல்ல அவங்களால ஜெயிக்க முடியலை.. 6 வது தடவை ஜெயிச்சு இருக்காங்க... அவங்க ராசியானவங்களா இல்லையான்னு கேட்டாங்க..

தட்றோம்.. தூக்கறோம்
மிகப்பெரிய ராசியானவங்க மேடம்னு கணவர் சக்திவேல் சொல்ல.. குடுங்க..அக்காவுக்கு ஒரு ஹக் குடுங்கன்னு மகாலட்சுமியை கட்டிக்கொண்டார் ராதிகா. மகாலட்சுமி பிள்ளைகளிடம், உட்கார்ந்துட்டேன்.. ஜெயிச்சுட்டுத்தான் வருவேன்னு சொல்ல, தட்றோம்.. தூக்கறோம்னு சொல்லுங்க என்றார் ராதிகா.. அவரும் அதையே சொல்ல நிகழ்ச்சி களைக்கட்டியது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications