கோடீஸ்ஸ்வரிரிரிரிரிரிரி.... ரியாலிட்டி ஷோவுக்கு "குரல்" எடுபடலையோ....?!
சென்னை: சாதாரணமாக பேசுவதற்கும் மேடைப் பேச்சுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதே போலத்தான்..சாதாரணமாக பேசுவதற்கும், சினிமாவில் டப்பிங் பேசுவதற்கும் கூட நிறைய வித்தியாசம் உள்ளது.
கம்பீர குரலில் அடிச்சுக்க முடியாதவங்க ராதிகா சரத்குமாரும், ரம்யா கிருஷ்ணனும். ஆனால், இவர்கள் ரியாலிட்டி ஷோ பண்ணும்போது குரல் கொஞ்சம் கம்மலாகத்தான் வருகிறது.
ரம்யா கிருஷ்ணன் குரல் மென்மையாக இருந்தாலும் கம்பீரம் இருக்கும்.பாகுபலி படத்தின் காட்சிகள் அதற்கு உதாரணம். ஆனால், இவர் ரியாலிட்டி ஷோ தங்க வேட்டை பண்ணும்போது அந்த கம்பீரம் மிஸ்சிங்.

சீரியல்கள் ராதிகா
சீரியல்களில் ராதிகாவின் கதாபாத்திரம் கொஞ்சம் கம்பீரமானதாகவே இருக்கும்.,அதனால் இவரின் டப்பிங் போது, கொஞ்சம் தடிமனான குரலை மேலும் தடிமனாகும்படி பேசி கம்பீரத்தை கதா பாத்திரத்துக்கு வரவழைச்சுருவார்.

வாணி ராணி
சித்தி சீரியலில் கம்பீரமான ஐபிஎஸ்ஸாக வந்து அதே கதாபாத்திரம் எடுபடும்படி கம்பீரமாகப் பேசி இருப்பார். வாணி ராணி சீரியலில் வாணி கதாபாத்திரம் வக்கீல் கதாபாத்திரம். அதிலும் குரலில் கம்பீரத்தை காண்பித்தே ஆக வேண்டிய கட்டாயம். வாணியாக நடித்து அசத்தி இருப்பார்.

ராதிகா ரம்யா
ராதிகாவுக்கு ரம்யாகிருஷ்ணன் போல குரலின் கம்பீரத்தை காண்பிக்கும் மாதிரியான படம் ஒன்று கூட அமையவில்லை. அதாவது ரம்யாவுக்கு கிடைத்த ராஜமாதா பாத்திரம் போல. அதனால், ராதிகாவின் குரல் கம்பீரத்தை நாம் சீரியலில் பார்த்து பழகிவிட்டோம்.
|
எடுபடலை குரல்
கலர்ஸ் தமிழ் டிவியில் ராதிகா சரத்குமார் கோடீஸ்வரி என்கிற ரியாலிட்டி ஷோவை வழங்க உள்ளார். இதற்கான ப்ரோமோவில் ராதிகாவின் குரல் நிகழ்ச்சிக்கு ஏற்ப கம்பீரமாக இல்லை என்று அவரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications