Kodeeswari: கொக்கு மாதிரி காத்திருந்து.. லபக்கென்று பிடிங்க...ராதிகா சரத்குமார்
சென்னை : கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார் நடத்தி வருகிறார். இவர் ஒவ்வொரு ஷோ ஆரம்பத்திலும் எதாவது ஒரு கருத்து சொல்லி வருகிறார். கடந்த வாரம் இவர் சொல்லிய வெற்றிக்கான பாதை ரசிக்கும்படி இருந்தது.
அதாவது கொக்கு மாதிரி காத்திருந்து வெற்றி என தெரிந்து அதை லபக்கென்று பிடித்துவிட வேண்டும் என்று கூறினார்.கோடீஸ்வரி நிகழ்ச்சிக்கு வெற்றி என்பதுதானே முக்கியம். வெற்றி என்பது வெறும் லட்சங்களுக்கு பதில் சொல்லி பெறுவது மட்டுமா? கோடீஸ்வரி ஆக வேண்டுமே...
ராதிகா நடத்தும் கோடீஸ்வரி நிகழ்ச்சியின் மூலம் இத்தனை கோடீஸ்வரிகள் தங்களது திறமையால் ஜெயித்து உருவானார்கள் என்பதுதானே நிகழ்ச்சிக்கு பெருமை. அதற்கான உந்துதலைத்தான் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கருத்து போல சொல்லி வருகிறார் ராதிகா.

நாமும்தான் உழைக்கிறோம்
என்னடா நானும்தான் உழைக்கிறேன். என்னால் முடிஞ்ச வரைக்கும் ஹார்ட் வொர்க் பண்றேன். ஆனால், என்னால ஏன் வெற்றி அடைய முடியலன்னு நிறைய தடவை யோசிச்சு இருப்போம்.நாம் எல்லாரும் உழைக்கிறோம்.. ஆனால், சிலரால் மட்டும்தான் வெற்றி பெற முடியுது. பொறுத்தார் பூமி ஆள்வார்னு சொல்லுவாங்க. இங்கே பொறுமை என்பது கால நேரம் அறிந்து செயல்படுவது என்று கூறினார்.

கொக்கு தெரியுமா
நாம எல்லாரும் கொக்கு பற்றி கேள்விப்பட்டு இருப்போம். அது சும்மா சும்மா எல்லாம் தண்ணிக்குள்ள தலையை விட்டு பார்க்காது. தண்ணீரின் அசைவு தெரிஞ்சு கூர்ந்து கவனிச்சுக்கிட்டே இருக்கும், மீன் வரும்போது லபக்கென்று பிடிச்சுக்கும்.அந்த மாதிரி சரியான காலம் வர வரைக்கும் கொக்கு மாதிரி காத்திருந்து நேரம் வரும்போது அது எப்படி குறி தப்பாம தன்னோட இரையைப் பிடிக்குதோ... அது மாதிரி நம்ம இலக்கை அடைய சரியான நேரத்துக்கு காத்திருந்தால் வெற்றி நம்மை கண்டிப்பாக வந்து சேரும் என்று சொன்னார் ராதிகா.

ராதிகாவின் புடவை நகைகள்
கோடீஸ்வரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ராதிகா சரத்குமார் விதம் விதமான அழகிய புடவைகள், அதற்கேற்ப நகைகள் என்று அணிந்து வருவது அனைத்து பெண்களையும் கவர்ந்துள்ளது. கருப்பு நிற புடவை என்றால் அதற்கேற்ப அணிகலன்கள், நிறைய ஜரி கொடுத்து இருக்கும் பட்டுப்புடவை என்றால் அதற்கேற்ப கிராண்டான தங்க நகைகள் என்று அசத்துகிறார். லைட் கலர் சில்க் சாரி என்றால், சில்வா வொர்க் இருந்தால் அதற்கேற்ப டைமண்ட் நகைகள், வளையல்கள், ஜிமிக்கி என்று அணிந்து வருகிறார். ஜிமிக்கி நெக்லெஸ் தெரிய வேண்டும் என்றால் கொண்டையை சற்று தூக்கி போட வேண்டுமாம்... இதையும் ராதிகாவே சொல்லி இருக்கார்.

பார்ப்பவர்களுக்கு கேள்வி
நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுக்கும் கேள்விகள் கேட்கப்படுகின்றது. என்னவோ அத்தனையும் பதில் தெரியாத கேள்விகளாக இருக்கும் என்று பயம் எல்லாம் துளியும் தேவையில்லை. சோழன் எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து எதுவரை செல்கிறது என்று ஒரு கேள்வி. இதற்கு ஆப்ஷன் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர் பெரம்பலூர் இப்படி கொடுத்து இருக்கிறார்கள். இது போல சுலபமான கேள்விகள்தான் கேட்கப்படுகிறது. நீங்களும் கலந்துக்கொண்டு உங்கள் பங்களிப்பை அளியுங்கள்!
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications