கலகல சிரிப்பு...லகலக கோபம்...இரண்டின் கலவைதான் ராதிகா மேடம்.. சிலிர்க்கும் தேவிப்பிரியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ராதிகாவின் புதிய சீரியலில் இடம் பிடித்து மீண்டும் கலக்க ஆரம்பித்திருக்கும் தேவிப்பிரியா ராதிகாவை புகழ்ந்து தள்ளுகிறார்.

ரடான் தயாரிப்பான சந்திரகுமாரி சீரியல் சன் டிவில சூடு பிடிக்க ஆரம்பிச்சு இருக்கு.வயசானாலும் ராதிகா நடிப்பதில் அசத்திருவாங்க. அவங்களை நம்பித்தான் சீரியலை ஆரம்பிப்பாங்க.ஆனா, அதுல நடிக்கற எல்லாருக்குமே முக்கியமான ரோல் இருக்கும்.

சந்திரகுமாரி சீரியலில் தன்னுடன் செல்லமேவில் ஜோடி சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கும், வாணி-ராணியில ஜோடியா நடிச்ச நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார் ராதிகா.

தேவிபிரியா

தேவிபிரியா

இந்த வரிசையில செல்லமே சீரியலில் ராதா ரவி மனைவியாக நடித்து, வில்லியாக அசத்திய தேவிபிரியாவுக்கு சந்திர குமாரியில் மீண்டும் ராட்சஷ வில்லி வேஷம். இதிலும் பின்னிப் பெடலெடுக்கிறார் தேவிப்பிரியா.

கீச்கீச்னு குரல்

கீச்கீச்னு குரல்

தான் டப்பிங் பேசியதில்தான் ராதிகா ரொம்ப அசந்து போய், தன் மீது அதிக நம்பிக்கை வச்சதா சொல்றார் தேவிபிரியா. அவங்க டப்பிங் பேசும்போது, தனக்குமான காம்பினேஷன் சீன் வந்தா, கொஞ்சம் மூக்குல பேசற மாதிரி கீச்கீச்னு உன் குரல் இருந்தாலும், அதுவும் இனிமையா இருக்குன்னு சொல்வாராம்.

கூச்சப்பட வச்சுருவார்

கூச்சப்பட வச்சுருவார்

திடீர்னு இப்போ எப்படி சிரிச்ச, எப்படி சிரிச்ச... அதே போல சிரின்னு சொல்லி ரசிப்பாராம். அவரோட கலகல சிரிப்புதான் அவருக்கு டிரேட் மார்க். அவர் என்னன்னா என்னை சிரிக்க சொல்லி ரசிச்சு என்னையே கூச்சப்பட வச்சுருவார் என்கிறார் தேவி பிரியா.

சிவாஜி சார்

சிவாஜி சார்

முதல் மரியாதை படத்துல ராதாவுக்கு டப்பிங் பேசியது, சிவாஜி சார் சிரிக்க சொல்லி ரசிச்சதுன்னு டப்பிங் பத்தி நிறைய பேசுவோம். ஆடுகளம் படத்துல ராதா ரவி சார், வில்லன் நடிகருக்கு டப்பிங் பேசியது வியப்பான விஷயம். யாராலயும் கண்டுபிடிக்க முடியாது அது ராதா ரவி சார் குரல்தான்னு.அவர் கூட ஜோடி சேர்ந்து நடிச்சப்போ டப்பிங் பேசுவதில் எப்படியெல்லாம் வெரைட்டி காமிக்கலாம்னு எனக்கு சொல்லிக் கொடுப்பார்.

வாழ வைப்பாங்க

வாழ வைப்பாங்க

கலகல சிரிப்பு... லகலக கோபம் இரண்டின் கலவைதான் ராதிகா மேடம். புரிஞ்சுக்கிட்டா, அவங்க நிச்சயமா நம்மை வாழ வைப்பாங்க. இதுல காக்கா புடிக்கறது எல்லாம் ஒண்ணுமில்லை, நம்மகிட்ட திறமையும் இருக்கணும் என்று அழகாக சிரிக்கிறார். ராதிகா சிரிப்பு லட்சத்தில் ஒருவருக்குத்தான் இருக்கும். ஆனால், அவர் ரசித்தது தேவி பிரியாவின் இந்த சிரிப்பைத்தான் போலும்.. நல்லாத்தானே இருக்கு தேவிப்பிரியா சிரிப்பும்.

எங்களுக்காகவும் ஒரு தடவை சிரிங்களேன் பிரியா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+