ராதி.. என் ராதி.. வாங்க மேடம் வாங்க வாங்க.. மீண்டும் கலக்க வரும் ராதிகா!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவி சானலில் நம்மவூர் கலருன்னு அடையாளத்துடன் பல தனித் தன்மை நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை வழங்கி வருகிறார்கள்.
அடிக்கடி இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் என்றும் நடத்தி மக்களை ஈர்த்து வருகிறார்கள். கலர்ஸ் தமிழ் டிவிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

இப்போது நடிகை ராதிகாவும் கலர்ஸ் தமிழ் டிவியின் ஜோதியில் ஐக்கியமாகி இருக்கார். எப்படி என்று கேட்கிறீர்களா, கோடீஸ்வரி என்று பெண்களுக்கான தனி கேம் ஷோ ஒன்றை விரைவில் தொகுத்து வழங்க இருக்கிறார் ராதிகா.
சன் டிவியில் பல வருட காலமாக கோலோச்சிய ராதிகா இப்போது எங்கே எங்கே என்று அவரது ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டு இருந்தனர். விரைவில் ஜீ தமிழ் சானலில் சீரியல் மூலம் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், இவர் கலர்ஸ் தமிழ் டிவி பக்கம் சென்று தலை காண்பிக்க இருக்கார்.
கோடீஸ்வரன் என்று இவரின் கணவர் சரத்குமார் சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார்.அப்போதுதான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து திருமணம் செய்துகொண்டனர். இந்த நேரத்திலேதான் ஒளிமயமான எதிர்காலம் பாடல் பின்னணியில் ஒலிக்க,எல்லாருக்குமே சின்ன சின்ன ஆசை இருக்கும்.. என்று பேச ஆரம்பித்து ராதிகா என்ட்ரி கொடுக்கிறார்.
அதோடு சில பெண்கள் தங்களது சின்ன சின்ன ஆசைகளை சொல்கிறார்கள், அண்ணனுக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கணும், என் பையனை நல்ல ஸ்கூலில் சேர்த்து நல்லலா படிக்க வைக்கணும், என் ஹஸ்பெண்ட்டோட கண்ணாடியை எடுத்துட்டு, லென்ஸ் வைக்கணும் இப்படி பலரும் சொல்கிறார்கள். என் தம்பி கிரிக்கெட் விளையாடுவான்..அவனுக்கு நல்ல பேட் வாங்கித் தரணும் இப்படி. பெண்களுக்கு எப்போதுமே தனக்கு என்பதை விட மத்தவங்க ஆசையை நிறைவேத்தணும்னுதான் நினைப்பாங்க என்று ராதிகா சொல்கிறார்.
Come and get empowered , and fulfill your dream🙏🏻🙏🏻🙏🏻 https://t.co/Lh54gFhiuu
— Radikaa Sarathkumar (@realradikaa) October 17, 2019
உலகத்தின் முதன் முறையாக பெண்களுக்கான பிரத்யேக கேம் ஷோ.அக்டோபர் 28 தேதி முதல் தினமும் 8 மணிக்கு தினம் ஒரு கேள்வி கேட்கப்படும். 8 கேள்விகளில் எதாவது ஒரு கேள்விக்கு பதில் சொன்னால் என்னுடன் நீங்கள் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளலாம் என்று ராதிகா ப்ரோமோவில் கூறுகிறார்.
அப்புறம் என்ன... ராதிகாவை நேரில் பார்க்க கலர்ஸ் தமிழ் டிவி பார்த்து கேள்விகளுக்கு பதிலை சொல்லி பட்டையயை கிளப்புங்க! தேவையை பூர்த்தி செய்துக்கோங்க!












Click it and Unblock the Notifications