முதல் முறையாக சரிகமப நிகழ்ச்சிக்கு வந்த அசானியின் தாய்! ராகவா லாரன்ஸ் கொடுத்த வாக்குறுதி
சென்னை: ஜீ தமிழ் நிகழ்ச்சியில் முதல்முறையாக சரிகமப நிகழ்ச்சிக்கு மலையக குயில் அசானியின் அம்மா வந்துள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ஸ்தான். இது இரு சீசன்களை கடந்து தற்போது 3ஆவது சீசன் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆங்கர் அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த சீசனில் 28 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இது வரை 5 பேர் வெளியேறியுள்ளனர். மீதம் 23 பேர் போட்டி போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் அசானி கனகராஜ் என்ற ஈழத்து சிறுமி கலந்து கொண்டார்.
அவர் இலங்கை கண்டியை சேர்ந்தவர். இவருடைய தந்தை தேயிலை தோட்ட தொழிலாளி. 150 ஆண்டுகளுக்கு முன்னர் ராமேஸ்வரம்தான் இவர்களது சொந்த ஊராக இருந்தது. அதன் பிறகு இவர்கள் இலங்கைக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துவிட்டனராம். ஒரு தேயிலை தோட்டத்தில் பல ஆண்டுகளாக இவர்கள் தலைமுறையே கொத்தடிமையாக வேலை பார்த்து வருகிறார்கள்.
தற்போது அசானியின் அம்மா, அப்பா, அண்ணன் ஆகிய மூவரும் தேயிலை தோட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ 200 சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார்கள். அசானியின் மற்றொரு அண்ணன் டீ கடையில் வேலை பார்த்து வருகிறார். சினிமா, டிவி என எதுவுமே பார்க்காமல் எஃப்எம் ரேடியோவில் வரும் பாடல்களை அசானி கேட்டு பழகியுள்ளார்.
அவரின் திறமையை பார்த்த அவருடைய குடும்பத்தினர் சரிகமப நிகழ்ச்சியின் ஆடிஷனுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பணம் இல்லாததால் இந்தியாவில் நடந்த மெகா ஆடிஷனுக்கு அசானியால் வர முடியவில்லை. இதை அறிந்த ஊர்மக்கள், உறவினர்கள் என சேர்ந்து தங்களால் முடிந்த உதவிகளை அசானிக்கு செய்து அவரை சென்னைக்கு அனுப்பினர். அவருக்கு பாடும் வாய்ப்பை நடுவர்கள் அளித்துள்ளனர்.
பொதுவாக ஆடிஷனில் கலந்து கொள்ளாவிட்டால் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. ஆனால் அசானி கடல் கடந்து தமிழகத்தை நம்பி வந்ததால் அவருக்கு நடுவர்கள் ஒரு வாய்ப்பை தந்துள்ளார்கள். தனது இனிய குரல் வளத்தால் அவர் அரங்கையே அதிர வைத்து வருகிறார். அசானிக்கு முறைபடி இலவசமாக சங்கீதம் கற்றுக் கொடுக்க இலங்கையில் ஒரு பெண் முன்வந்துள்ளார். இந்த நிலையில்தான் அசானிக்கு நிரந்தர வீடு கட்டித் தருவதாக இலங்கை கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் உறுதியளித்துள்ளார். நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இதை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் இலங்கையிலிருந்து மலையகத்தை சேர்ந்த சிறுமி பாட்டு பாட தமிழகம் சென்றுள்ளார். அவருக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எனது மகன், கனடாவில் வசிக்கும் எனது குடும்ப உறுப்பினர்கள் சார்பாக 15 லட்ச ரூபாய் செலவில் ஒரு வீட்டை நிர்மாணித்து கொடுக்க தீர்மானித்துள்ளோம். ஆகவே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அசானியின் ஊருக்கு எனது உதவியாளரை அனுப்பி, அவருக்கான வீட்டை எங்கே எப்படி கட்டிக் கொடுக்க முடியும் என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளேன் என்றார். கடல் கடந்து சென்னை வந்த அசானியின் விமான டிக்கெட் ஒன்றரை லட்சமாகும். இதை மலையக மக்கள் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் மலையக குயிலான அசானியின் தாய் இந்த வாரம் தனது மகளைப் பார்ப்பதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். கிட்டத்தட்ட 100 நாட்கள் கழித்து தன்னுடைய மகளைக் கண்டதால் கட்டிப்பிடித்து அழுதார். பின்னர் அசானியை நல்லபடியாக பார்த்துக் கொள்வதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அர்ச்சனாவையும் கட்டிப்பிடித்து அழுதார்.
அசானியை பார்த்துக் கொள்ளுமாறு அவரது நண்பி மற்றும் அவருடைய அம்மாவுக்கும் நன்றியைத் தெரிவிக்கிறார். எனவே இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த ராகவா லாரன்ஸ் அசானிக்கு தன்னால் முடிந்த உதவியை செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications