Raghu Thatha OTT: கீர்த்தி சுரேஷின் "ரகு தாத்தா".. ஓடிடியில் எப்போது வருகிறார் தெரியுமா? செம ஹேப்பி
சென்னை: கடந்த சில நாட்களாகவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த ரகு தாத்தா படம், ஓடிடியில் எப்போது வெளியாக போகிறது? என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இது கீர்த்தி சுரேஷின் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
இவரது நடிப்புக்கு தீனி போட்ட படமாக அமைந்திருந்தது "நடிகையர் திலகம்".. மழலைத்தனம் மாறாத சிரிப்பு, கிண்டல் கேலி பேச்சு, ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்காத துறுதுறுப்பு பாவனைகள் இது அனைத்துக்கும் மேலாக இதயம் நிறைந்த கனிவு... இதுதான் நடிகை சாவித்திரியின் ஒட்டுமொத்த ஒரிஜினல் கேரக்டர். இவைகள் அத்தனையுமே உள்வாங்கிக்கொண்டு, தன்னுடைய பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ்: இந்த படத்தை போலவே, மிகுந்த எதிர்பார்ப்பை கீர்த்தி சுரேஷிடம் உண்டாக்கியிருக்கும் படம்தான் ரகு தாத்தா.. கடந்த மாதம் 15ம் தேதி தியேட்டரில் வெளியாகியிருக்கிறது இந்த படம்.
இந்தி திணிப்பை முன்னிறுத்தி படம் எடுப்பது என்பது லேசுபட்ட விஷயமல்ல.. அதிலும் தற்போதைய அரசியல் சூழலில், இந்தி திணிப்பு குறித்து படம் எடுப்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்.
வேலிகள்: அதுமட்டுமல்ல, சமூகத்தில் காலம்காலமாகவே, பலவீனமான பாலினமாக "பெண்கள்" கருதப்பட்டு வரும்நிலையில், இதற்கான வேலிகளையும் உடைத்தெறிக்க வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இன்று ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தி திணிப்பு + ஆணாதிக்கம் என்ற 2 மிகப்பெரிய விஷயத்தை வலியுறுத்தி "ரகு தாத்தா" எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய பிரச்சனைகள் இரண்டுமே படு சீரியஸான விஷயம் என்பதால், காமெடியை ஆங்காங்கே நிரப்பி அழுத்தமான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ரகு தாத்தா..
ஆணிவேர்: இன்றும்கூட வடமாநிலங்களில் எத்தனையோ கிராமங்களில் கல்வியானது மறுக்கப்படுகிறது, மறைக்கப்படுகிறது... நம்முடைய தமிழகத்திலும் கல்விக்கான தேவைகள் அதிகம் உள்ளது.. சமூகத்தின் ஆணிவேரையே அசைக்கக்கூடிய வலிமை, படித்த பெண்களுக்கு எப்போதுமே உண்டு.. அந்தவகையில், பெண் கல்வியை வலியுறுத்தும் படமாக ரகு தாத்தா அமைந்திருப்பது வரவேற்கக்கூடியது.
படம் ரிலீஸானது முதலே நல்ல வரவேற்பையும் பெற்று, ஓடிடியில் எப்போது ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இதோ அதற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது.. ஜீ5 ஒடிடியில் நாளை அதாவது செப்டம்பர் 13ம்தேதி வெளியாகிறது.

பிரபலங்கள்: யாமினி யங்கனமூர்த்தி ஒளிப்பதிவில், சுரேஷ் டி எஸ் எடிட்டிங்கில் வெளிவந்துள்ள இந்த படத்துக்கு சான் ரோல்டன் இசையமைத்துள்ளார். எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை 'ஹோம்பலே பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது..
அதைவிட முக்கியமாக "ரெட் ஜெயண்ட் மூவிஸ்" நிறுவன அதிபர் உதயநிதி ஸ்டாலின், இப்படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளார். எப்போமே உதயநிதி, ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார் என்றால், அந்த படம் நிச்சயம் வெற்றிப்படமாகவே இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
சபாஷ்: ரகு தாத்தா படத்தின் டைரக்டர் சுமன் குமார் குறித்து இங்கு சொல்லியாக வேண்டும்.. பல வெற்றி வெப் சீரிஸ் தொடரில் பணியாற்றி, மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் சுமன் குமார்.. மொழி அரசியல், பாலின பாகுபாடுகள், பெண் கல்வி போன்றவைகள் பார்வையாளர்களிடையே அர்த்தமுள்ள உரையாடல்களை இன்று ரகு தாத்தா படம் மூலம் ஏற்படுத்தியிருக்கிறார் சுமன் குமார்.. இப்படி ஆரோக்கியமான கதைக்களத்துடன் தமிழ்சினிமாவில் காலடி வைத்ததுடன், எடுத்த எடுப்பிலேயே நன்மதிப்பையும் பெற்றுவிட்டார் எனலாம்..!!
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications