என்னங்கடா இது.. மகராசி சீரியலில்.. மாணிக் பாஷா வில்லனா.. முடியலப்பா முடியலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் மகராசி சீரியலுக்கு லாக்டவுன் இன்னும் ஆரம்பிக்கலை... சரி..மக்களுக்கு என்டெர்டெயின்மென்டா மகராசியா இருக்கட்டும்னு நினைத்தால்...இன்று திடீர்னு ஒரு காட்சியில் நடிகர் ரகுவரன் போட்டோவை எடுத்து காண்பிச்சு இருக்காங்க.

இனி கதை எப்படி நகர போகுதோன்னு ஒன்னும் பெரிசா திட்டமிட்ட வேண்டாம்...பாரதியோட இறந்து போன அப்பாவா இறந்து போன நடிகர் ரகுவரனை காண்பிக்க போறாங்க.

ரகுவரன் சீரியல் குழுவுக்கு என்ன வகை உறவோ தெரியவில்லை...ஆனாலும் ரஜினிக்கு நிகரா மாஸ் கொடுத்த அந்த வில்லனை இப்படி ஆக்கி இருக்க வேண்டாம்...

 மகராசி சீரியல்

மகராசி சீரியல்

புவியை காணோம்.. புவியை காணோம் என்று ஊர் முழுக்க தேடிக்கொண்டு இருக்கிறார்கள் சிதம்பரம் குடும்பம். கடைசியில் புவி சிதம்பரம் குடும்பத்துக்கு சொந்தமான அரிசி மில்லில் மாறு வேஷத்தில் வேலை பார்த்துகிட்டு இருக்கறது கட்டின பொண்டாட்டி பாரதிக்கே தெரியலை.

 வில்லன் ரியாஸ்கான்

வில்லன் ரியாஸ்கான்

கைப்புள்ள கண்டு நடுங்கிய வில்லன் ரியாஸ்கான் இந்த சீரியலில் வில்லனா நடிக்கிறார். இந்த சீரியலில் இவருக்கே இன்னும் டஃப் சூழ்நிலை என்று எதுவும் இல்லை. எதுக்காக இவ்ளோ பெரிய ஸ்டார் காஸ்ட் நடிகர் என்று நினைக்கும் அளவுக்கு இன்னும் கதாபாத்திரம் டம்மியாத்தான் இருக்கு.

 செண்பகம் சிதம்பரம்

செண்பகம் சிதம்பரம்

சிதம்பரம் செண்பகம் இருவரின் மூத்த பையன்தான் புவி. இவன் சிறு வயதில் காணாமல் போயிட்டான். ஹரித்துவாரில் பாரதியை காதலித்து கல்யாணமும் செய்துகொண்ட நிலையில், பாரதியின் சித்தப்பா செந்தூரபாண்டியனாக நடிக்கும் ரியாஸ்கானின் சூழ்ச்சி வலையில் பாரதியும், புவியும் சிக்குகின்றனர்.

 பாரதி புவி

பாரதி புவி

பாரதி செந்தூரபாண்டியனிடம் இருந்து தப்பித்து, சிதம்பரத்துக்கு புவியின் அம்மா அப்பாவிடமே வந்து சேர்ந்துவிடுகிறாள். அப்போதுதான் மகன் புவி உயிரோடு இருக்கிறான் என்று பெற்றவர்களுக்கு தெரிய வருது. இப்போ குடும்பமே சேர்ந்து புவியை தேடுகிறார்கள்.

 ரகுவரன் எங்கே

ரகுவரன் எங்கே

அதெல்லாம் இருக்கட்டும்.. இதில் ரகுவரன் எங்கே எதற்கு வந்தார் என்று கேட்கிறீர்கள்? செண்பகத்தின் அண்ணன் தமிழ் சினிமா கதைப்படி 25 வருஷத்துக்கு முன்பு காதலியை அழைச்சுக்கிட்டு ஊரைவிட்டு ஓடிட்டாராம். அந்த அண்ணன் இந்த ரகுவரன் என்று செண்பகம் பாரதியிடம் அந்த போட்டோவை எடுத்து காண்பிக்க போகிறார்.

 பாரதி பார்கலை

பாரதி பார்கலை

பாரதி அந்த போட்டோவை பார்ப்பதற்குள் சிதம்பரம் ஐயா வந்து.. இந்த போட்டோவை ஒளிச்சு வச்சு பார்த்தியா.. இது இந்த வீட்டில் இருந்தால் நான் இருக்க மாட்டேன் என்று சொல்கிறார். இப்போ புரிகிறதா? ரகுவரன் போட்டோவை ஏன் பாரதி பார்க்கவில்லை என்று? பாரதியோட இறந்து போன அப்பாவா சீரியலை இறந்து போன நடிகர் ரகுவரனை ரொம்ப நாள் இழுத்தடிச்சு காண்பிக்க போறாங்க.. இதுதான் கதை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+