Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடற்கரையில் குட்டி நாயுடன்.. மண்டியிட்டுக் கொஞ்சிய ரைசா.. செம ஜாலி படம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லாக்டவுன் போட்டு மாசம் மூணு தாண்டியாச்சு. ஆனாலும் இந்த நோயின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்த நோய் வந்தது தான் வந்தது மக்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது.

அந்த மாதிரி தான் சினிமா நடிகர்களையும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. அதை நினைத்துதான் ரைசாவும் புலம்பிக் கொண்டிருக்கிறார். இவர் பெங்களூரை சேர்ந்தவர். முதலில் மார்க்கெட்டிங் ஃபீல்டில் தான் மேனேஜராக வேலை பார்த்துட்டு இருந்தார்.

பிறகு தான் இவரின் நடிப்பில் வந்த மோகத்தால் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்தார். மாடலிங்கில் கலக்கி கொண்டிருக்கும் போது தனுஷுடன் சேர்ந்து நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கஜோல் பிஏ

கஜோல் பிஏ

சின்ன ரோலாக இருந்தாலும் அதையும் விட்டுவிட கூடாது என்றுதான் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் காஜலின் பெர்சனல் பி ஏ வாக நடித்திருப்பார். கொஞ்ச நேரம் தான் திரையில் வந்தாலும் தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்றுதான் இதற்கு சம்மதித்து இருக்கிறார். ஆனால் இதில் நடித்த பிறகுதான் அவருக்கு ஒரு நல்ல ஒரு வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

பிக் பாஸ் வெளிச்சம்

பிக் பாஸ் வெளிச்சம்

அவர் தனுஷ் கூட நடிச்ச பிறகு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெருகியிருக்கிறது. ரைசா ஆர்மி ஆரம்பிச்சி ரசிகர்கள் கொண்டாட தான் செய்தார்கள்.

மேக்கப்பில் க்யூட்

மேக்கப்பில் க்யூட்

பிக்பாஸில் இவர் செய்த அலப்பறைகளை ரசிக்கத்தான் செய்தார்கள். இவர் அதில் தூங்கி முடித்ததும் போடும் மேக்கப் நிகழ்ச்சியில் இவர் போடும் டிரஸ் மற்றும் இவரின் தனிப்பட்ட திறமைகள் எல்லாமே ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. தினமும் இவரை பார்ப்பதற்காக இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினார்கள். 69 நாட்கள் இந்த வீட்டில் தங்கிவிட்டு இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

ஹரீஷ் கல்யாணுடன் பியார்

ஹரீஷ் கல்யாணுடன் பியார்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியர் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அதில் இவருடைய நடிப்பு ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் சியான் விக்ரம் மகன் துருவ் உடன் ஆதித்ய வர்மா படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்தப் படத்தில் இயக்குனர் தரப்பில் ஏற்பட்ட முரண்பாடுகளால் அந்த படத்தை வேறு ஒரு இயக்குனர் மற்றும் ஹீரோயினிவுடன் எடுத்து ரிலீஸ் செய்தார்கள். இது இவருக்கு ஏமாற்றமாக இருந்தாலும் இதனைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருந்தது.

அட்வைஸ்

அட்வைஸ்

அதுக்குப் பிறகும்கூட ரைசா ஸ்பெஷல் கெஸ்ட்டாக பிக் பாஸ் சீசன் 2வில் நிகழ்ச்சியில் அந்த வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர். அப்போதும் அவர் இந்த நிகழ்ச்சி வழியாக தனக்கு கிடைத்திருக்கும் அடையாளத்தையும் இதை அடைவதற்கான வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்தார். இது அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி. அதனால் மோசமான ஆடைகளை அணியாதீர்கள் என்று அறிவுரையும் கூறியிருக்கிறார்.

கலர் கலர் படம்

கலர் கலர் படம்

ஆனால் இந்த ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் இவர் தன்னுடைய பழைய கவர்ச்சி படங்களை இணையதளத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இவருடைய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி கொண்டு வருகிறது.. அதிலும் கடற்கரையில் மண்டியிட்டு உட்கார்ந்து, நாயுடன் அவர் கொஞ்சிக் கொண்டிருக்கும் போட்டோவுக்கு செம டிமாண்டாம். என்ன செய்வது படத்தைப் போட்டும், படம் பார்த்தும்தான் இப்போது பலரும் பொழுதைக் கழித்துக் கொண்டுள்ளனர்.

https://tamil.oneindia.com/television/mullai-chithu-gives-sweet-surprise-to-her-fan-391579.html

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+