60ஸ் படம் 80ஸ் படம் டப்பிங் சீரியல்ஸ்... கல்லாக்கட்டும் ராஜ் டிவி!
சென்னை: சன் டிவிக்கு அடுத்த படியாக ஆரம்பித்தது ராஜ் தொலைக்காட்சிதான். ஆரம்பித்த புதிதில் சன் தொலைக்காட்சிக்கு போட்டி அப்படி இப்படி என்று ஒரே களேபரமாக கிடந்தது.
நிகழ்ச்சிகளும் ஏகத்துக்கும் புதிதாக களம் இறக்கப்பட்டன. நிறைய பேருக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைத்தன.
எல்லாம் ஆரம்பித்த வேகத்தில் புஸ் என்று ஆகிப்போனதுதான் ஏனென்று தெரியவில்லை.இப்போது பெரிய அளாவியலான கேபிள் நிறுவனம் போல ராஜ் டிவி செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

ராஜ் நியூஸ் ராஜ் மியூசிக்
ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல் பிளஸ், ராஜ் நியூஸ் ராஜ் மியூசிக் உள்ளிட்ட சானல்களை நடத்தி வரும் ராஜ் டிவி விளம்பரங்களை அள்ளுவதில் அனைத்து சானல்களை விட முதன்மையில் உள்ளது. விளம்பரங்களுக்கு கறார் ரேட் ஃபிக்ஸ் பண்ணுவதில்லை ராஜ் டிவி.

ராஜ் தொலைக்காட்சி
ராஜ் தொலைக்காட்சியின் அனைத்து சானல்களில் ஒரு நிகழ்ச்சியை நிம்மதியாக பார்த்து விட முடியாத படி விளம்பரங்கள் நம்மை சுழற்றி அடித்து விடும். விளம்பரங்களுக்கு நடுவில் நிகழ்ச்சியை நாம் பார்க்க வேண்டும். அப்படி விளம்பரதாரர்களை கட்டிப்போட்டு வைத்து இருக்கிறது ராஜ் தொலைக்காட்சி நிறுனம்.

வீடியோ விஷன் நிறுவனம்
ஆரம்பத்தில் ராஜ் தொலைக்காட்சி நிறுவனம் வீடியோ விஷன் நிறுவனம் வைத்து நடத்தி வந்ததால் அவர்களிடம் நிறைய படங்களின் உரிமை இருந்தது. அதனால் இன்றுவரை நிறைய 60 களின் பட உரிமை 80 களின் பட உரிமைகளை கைவசம் வைத்து இருக்கிறார்கள்.

சீரியல்கள் உரிமை
அந்த பட உரிமைகளை வைத்தும், நிறைய இந்தி தெலுங்கு டப்பிங் சீரியல்களின் உரிமைகளை வாங்கியும் தொலைக்காட்சியை திறம்பட நடத்தி கொஞ்சமும் நஷ்டத்தை சந்திக்காமல் வருகிறது ராஜ் தொலைக்காட்சி நிறுவனம். யாருக்கும் தாங்கள் போட்டியில்லை, எங்கள் வழி தனி வழி என்று பயணிக்கிறார்கள் இவர்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications