ராஜா ராணி ஜாக்கி.. ரீல் ஜோடி ரியல் ஆகுது மச்சி.. ஆல்யா ஹேப்பி அண்ணாச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடிக்கும் ரீல் ஜோடி சம்பாவும், சின்னய்யாவும் ரியல் ஜோடியாக வாழ நிச்சயதார்த்தம் முடிஞ்சு போச்சாம்.

இந்த தகவலை ஆல்யா மானஸாவே தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டு இருக்காங்க. சஞ்சீவ் குளிர் 100 மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனாலும், படங்கள் பெரிதாக அவருக்கு கைகொடுக்கலை.

Raja Ranai pair gets engaged

மானஸா மிடில் கிளாஸ் ஃபேமிலிதான்னாலும், தனது உழைப்பில் மிக உயர்ந்த இடத்தில் இப்போது இருக்கிறார். முதலில் ஜோடி நம்பர் ஒன்னில் அறிமுகமான மானஸாவுக்கு டான்ஸ் ரொம்ப பிடிக்குமாம்.

சென்னையில் இதுவரை 3 க்கும் மேற்பட்ட டான்ஸ் பயிற்சி . ராஜா ராணி சீரியல் தன்னை எங்கோ கொண்டு நிறுத்திவிட்டதாக சிலிர்ப்புடன் கூறும் மானஸாவுக்கு அப்பாவின் நண்பர்களே ஃபேன்ஸா இருக்காங்களாம்.

அம்மா எங்காவது வெளியில போனால், அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க மானஸாவைப் பத்தி பேசி, அம்மாவை மகிழ்விக்கிறாங்களாம். அப்பா, அம்மா, தங்கை ஃபிரண்ட்ஸ் வீட்டுக்கே வந்து மானஸாவுடன் செல்ஃபி எடுத்துக்கறாங்களாம். இது எங்க வீட்டில் எல்லாருக்கும் மகிழ்ச்சியா இருக்குன்னு சொல்றாங்கண்ணும் சொல்றார்.

ராஜா ராணி சீரியலில் ஆரம்பத்தில் சஞ்சீவுடன் நட்பாகத்தான் பழகினேன் என்றும், நாளடைவில் காதலாக மாறியது.. பிறகு இருவரும் இனியும் கால தாமதம் செய்யாமல் கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம் என்றும் கூறுகிறார் ஆல்யா மானஸா.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் முடிந்து இருக்கிறது. கல்யாண தேதி இன்னும் முடிவாகவில்லை என்று கூறுகிறார்.

ரீல் ஜோடி, ரியலாகவும் ஜோடியானத்தில் சீரியல் ரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. பாவம் சம்பா ரசிகர்கள்தான் காண்டில் இருக்காங்களாம்.பின்னே அவர்கள் தினமும் சைட் அடிச்ச பொண்ணாச்சே சம்பா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+