ராஜா ராணி 2 சீரியல் நடிகைக்கு அடித்த லக்! தனுஷுடன் நடிக்கும் வாய்ப்பு.. என்ன ரோல்? போட்டோ டிரென்ட்!
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் ராஜா ராணி 2 சீரியல் நடிகை நடித்து வருகிறார்.
Recommended Video
நடிகர் தனுஷை வைத்து அவரது சகோதரர் இயக்கிய 7 ஜி ரெய்ன்போ காலனி படத்தின் மூலம் தனுஷ் மக்களிடையே பிரபலமடைந்தார். இதையடுத்து அடுத்தடுத்த படங்களின் மூலம் தனக்கென ரசிகர்களின் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இன்று முன்னணி நடிகர்களுள் தனுஷும் ஒருவர், பாலிவுட்டில் தனது நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ் ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் நடித்து அண்மையில் வெளியான படம் திருச்சிற்றம்பலம்.

வசூல் சாதனை
இந்த படம் வசூல் சாதனையை படைத்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் வாத்தி எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தை வெங்கி இயக்குகிறார். இதன் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.

தனுஷுக்கு ஜோடி
தனுஷுக்கு ஜோடியாக இந்த படத்தில் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் நடிகையும் வாத்தி படத்தில் நடித்து வருகிறாராம்.

சரவணன்
ஆம் அந்த சீரியலில் சரவணனின் தாயாகவும் சந்தியாவின் மாமியாராகவும் சற்றே ஸ்டிரிக்ட்டானவராக நடித்து வரும் நடிகை பிரவீனா வாத்தி திரைப்படத்தில் அவருக்கு தாயாக நடித்து வருகிறார். வாத்தி திரைப்படத்தில் தனுஷுடன் அம்மா வேடத்தில் இருக்கும் பிரவீனாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

நடிகை பிரவீனா
மலையாள நடிகையான பிரவீனா தமிழில் பிரியமானவள் எனும் சீரியலில் நடித்திருந்தார். இதில் 3 மருமகள்களுக்கு தாய் ஸ்தானத்திலும் அவர்களின் ஆசைகளுக்கு ஊக்குவிக்கும் நண்பியாகவும் நடித்திருந்தார். ஆனால் ராஜா ராணி 2வில் அப்படியே எதிர்மறையான ரோல். மருமகள்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். அதிகம் படித்திருக்கக் கூடாது, கணவன்மார்களை வேலை வாங்க கூடாது, வீட்டு வேலைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என எப்போதும் கடுகடுக்கும் தாயாக நடித்துள்ளார். வாத்தி படத்தில் எந்த மாதிரியான குணாதிசயம் கொண்ட ரோல் என தெரியவில்லை.

நடிகை சுசித்ரா
அது போல் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவாக நடித்து வரும் சுசித்ராவும் பிரபுதேவாவின் திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இது நாள் வரை சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் தாயாக நடித்து வந்த நிலையில் தற்போது பிரபல சீரியலில் அம்மா வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரையில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார்கள்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications