நீங்க அழகு! உஷார் செய்ய டிப்ஸ் கேட்ட ரசிகர்.. அல்ரெடி கமிட்டட்டுனு ரிப்ளை செய்த "ராஜா ராணி" ரியா
சென்னை: ராஜா ராணி சீரியல் 2 வில் நடித்து வரும் ரியா விஸ்வநாதன் ஒருவரை காதலித்து வருவதாக அவரே ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
ராஜா ராணி சீரியல் மிகவும் பிரபலமானது. இதில் நடித்த செம்பாவும் சின்னய்யாவும் ரீல் வாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்தது போல் ரியல் லைஃப்பிலும் ஜோடியாகிவிட்டனர். அதாங்க நம்ம ஆலியா மானசாவும் சஞ்சீவும் தான்!
இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சஞ்சீவ் கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆலியா ராஜா ராணி 2 வில் நடிகர் சித்துவுக்கு ஜோடியாக சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ஆலியா கர்ப்பம்
இந்த நிலையில் ஆலியா இரண்டாவது முறையாக கருத்தரித்தார். எனினும் சில மாதங்களுக்கு சீரியலில் நடித்து கொண்டிருந்தார். பின்னர் டெலிவரிக்கு நாள் நெருங்கியதை அடுத்து ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அவருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

ராஜா ராணி 2
இந்த நிலையில் ராஜா ராணி சீரியலில் ஆலியாவுக்கு பதிலாக நடிகை தேர்வு நடந்தது. இதில் சென்னை மாடலான ரியா விஸ்வநாதனை தயாரிப்பாளர் குழு புக் செய்தது. அவர்தான் சந்தியாவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஆலியாவிடம் குழந்தை பிறந்துவிட்டது. மீண்டும் ராஜா ராணி 2விற்குள் வருவீர்களா என ரசிகர்கள் கேட்டதற்கு இல்லை என ஆலியா தெரிவித்துவிட்டார்.

ரியா
ரியாவும் சீரியலில் நன்றாக நடித்து வருவதால் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் இன்ஸ்டாவில் Ask me a question என்ற தலைப்பில் ரியா ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் இவ்ளோ அழகா இருக்கீங்க, எப்படி உங்கள் உஷார் பண்ரது டிப்ஸ் கொடுங்களேன் என கேட்டார்.

அல்ரெடி கமிட்டட்
அதற்கு ரியாவோ பிரதர் நான் அல்ரெடி கமிட்டட் பிரதர் என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். இப்போது இவர் யாரை காதலிக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜா ராணி சீரியலில் ரியாவுக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு காரணம் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் விஷால் என சொல்லப்படுகிறது.

நண்பர்கள்
இருவரும் நீண்ட நாள்களாக நண்பர்களாக உள்ளனராம். ஒரு வேளை ரியா காதலிப்பது நடிகர் விஷாலாக இருக்கலாம் என துப்புறியும் சாம்புக்களான ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். விஜய் டிவியில் விருது வழங்கும் விழாவில் நடிகர் விஷால் விருது வாங்கும் போது கேமரா ரியாவையே குளோஸ் அப்பில் காட்டியது.

ரியல் ஜோடி?
அது போல் ராஜா ராணி சீரியலில் நடிக்கும் அர்ச்சனாவும் ரியாவின் ரியாக்ஷனை பார்த்துக் கொண்டிருந்தாாராம். எனவே கூட்டி கழித்து பார்த்தால் விஷாலாக இருக்கும் என்கிறார்கள். ராஜா ராணி சீரியலில் நடித்த ஆலியா- சஞ்சீவ், கலர்ஸ் டிவியில் திருமணம் என்ற சீரியிலில் நடித்த சித்து- ஸ்ரேயா, ஆர்யன்- ஷபானா வரிசையில் நடிகர் விஷால்- ரியா ஜோடி இணைவார்கள் என தெரிகிறது. ஆனாலும் இரு தடவை பிரதர் என்ற வார்த்தையை ரியா பயன்படுத்தியிருப்பது ரொம்ப ஓவர்தான் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications