அடி யாத்தே.. ராசலட்சுமியா இது.. எப்படி இறங்கிக் குத்தியிருக்கார் பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் புதுப்புது நிகழ்ச்சிகள் அறிமுகமானாலும் ஒருசில நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் அடிமைகளாக மாறிவிடுகிறார்கள். அந்த மாதிரிதான் பாட்டு நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பலரும் ரசிக்கத் தொடங்கி விட்டார்கள்.

அதில் நாட்டுப்புற தம்பதிகளாக வந்து அனைத்து மக்களையும் வசியப்படுத்தி ராஜலட்சுமி செந்தில் ஜோடியை யாராலும் மறக்க முடியாது. இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட பிறகு வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு சென்று விட்டனர்.

இதில் கலந்து கொண்ட பிறகு ஆளே மாறி போட்ட ராஜலட்சுமியின் தற்போதைய போட்டோஷூட் புகைப்படங்கள் தான் வைரலாக பரவி வருகிறது.

 கிராமத்துப் பொண்ணு

கிராமத்துப் பொண்ணு

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளும்போது பக்கா கிராமத்து பெண்ணாக கலக்கிக் கொண்டிருந்தார். கிராமத்து பெண்கள் கூட தற்போதெல்லாம் புடவைகட்டுவதற்கு யோசிக்கும் நிலையில் இவர் கிராமத்தில் இருந்து வந்தாலும் இவ்வளவு பெரிய மேடையிலும் கண்டாங்கி சேலை கட்டி கலர் கலராக பூக்கள் வைத்து ரசிகர்களை கவர்ந்து இழுத்து இருந்தார்.

 செல்லச் சிரிப்பு

செல்லச் சிரிப்பு

பாட்டுப்பாடி மட்டுமல்லாமல் தன்னுடைய அழகாலும் செல்லமான சிரிப்பாலும் ரசிகர்களை வசப்படுத்திய ஜோடி செந்தில் ராஜலட்சுமி ஜோடி தான் என்று கூறும் அளவிற்கு இருவரும் செமயாக கலக்கி கொண்டிருந்தனர். விஜய் டிவியில் புது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி யாளர்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது .அந்த மாதிரிதான் இவருடைய வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது.

 புடவை மாடல்

புடவை மாடல்

பாடகராக அறிமுகமான இவர் தற்போது மாடலாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் .அதுவும் புடவை விளம்பரம் முதல் நகைக்கடை விளம்பரங்கள் வரைக்கும் இவருடைய போட்டோக்களை வைக்க ஆரம்பித்துவிட்டனர். திருமணம் முடிந்து குழந்தை பிறந்த பிறகு தற்போது இவர் ஒரு மாடலாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். சீரியல்களிலும் கெஸ்ட் ரோலில் இவர்கள் என்ட்ரி கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

 விழாக்களில் ஒலிக்கும் குரல்

விழாக்களில் ஒலிக்கும் குரல்

பெரிய மேடைகள் மட்டுமல்லாமல் சிறு சிறு கோவில் விழாக்கள் முதல் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இவரது பாடல்கள் ஒலிக்க தொடங்கிவிட்டது .அதில் இவரே வந்தும் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். எவ்வளவுதான் பிசியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி விளம்பர மாடலாக எடுக்கும் போட்டோக்களை அப்லோட் பண்ணி வருகிறார் .அவரது போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் கமெண்டுகளை கொட்டி வருகின்றனர்.

 நடிகைகள் போல

நடிகைகள் போல

அந்த மாதிரி தான் இப்போது இவர் எடுத்திருக்கும் போட்டோ சூட்டும் வைரலாக பரவி வருகிறது .கருப்பு கலர் புடவையில் கலர் கலர் வண்ண நகையோடு அழகு தேவதையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். கண்டாங்கி சேலையில் இவரைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இவரை இந்த மாதிரி திடீரென்று பார்த்ததும் கதாநாயகிகளை ஓரம்கட்டுகிற அளவிற்கு இவ்வளவு பேரழகியா நீங்கள் என்று வர்ணித்து வருகிறார்கள்.

 யாருடா இந்தப் பொண்ணு

யாருடா இந்தப் பொண்ணு

அதுமட்டுமல்லாமல் நெட்டிசன்களும் கலாய்த்து வருகிறார்கள் .யார் இந்த பொண்ணு என்று கேட்கும் அளவிற்கு மேப்பில் மாறி விட்டீர்களே என்றும் கலாய்க்கிறார்கள். இவர் இப்போ அடிக்கடி நடத்தும் ஃபோட்டோஷூட்டை பார்த்து கதாநாயகிகள் கூட பொறாமைப்பட்டு விடுவார்கள் போல .அந்த அளவிற்கு ஹெவியாக பர்பார்மஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

 செம போஸ்

செம போஸ்

எங்களால் பாட்டு பாட மட்டுமல்ல அழகாக நடிக்கவும் முடியும் என்று இவர் இவருடைய அழகான சிரிப்பை உதிர்த்து விதவிதமாக போஸ் கொடுத்து கலக்கியிருக்கிறார். சரி ஓகே எவ்வளவு நாளைக்குத்தான் பாட்டை மட்டும் பாடிவிட்டு இருக்கீங்க நீங்களும் சீக்கிரமா களத்திற்கு வந்து இருங்க என்று இவருக்கு திரைத்துறையினரும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+