கருப்பு சிவாஜி, ஏன்யா என்னை மாதிரி பண்றே? சிவக்குமாரை போல ராஜேஷ் டீ-டோட்டலர்.. உயரம் தொடலயே: பிரபலம்
சென்னை: ராஜேஷ் ஒரு தொழிலதிபராக JRV என்ற பெயரில் ரியல் எஸ்டேட் செய்து வெற்றி பெற்றார்.. சினிமா, டிவி தொடர்களில் நடித்தாலும், கடைசி 5 வருடங்களாக சோஷியல் மீடியாவில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.. யூடியூப் வீடியோக்கள் மூலமாகத்தான் இவரை தற்போதுள்ளவர்களுக்கு நிறைய பேருக்கு தெரியவந்தது என்று மூத்த பத்திரிகையாளர் சுபைர் தெரிவித்துள்ளார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், "எழுத்தாளர், நடிகர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர் ராஜேஷ்.. கன்னிப்பருவத்திலே படம் நடித்து முடித்தபிறகுதான், தன்னுடைய ஆசிரியர் வேலையை கைவிட்டார்.. அதுவரை வேலையில்தான் இருந்தார்..

சிவக்குமார் டீ-டோட்டலர்
சிவக்குமாருக்கு அடுத்து டீ-டோட்டலர் என்று சொன்னால், அது ராஜேஷ்தான்.. நேரத்துக்கு மதிப்பளிக்கக்கூடியவர், பிறரிடம் தன்மையாக பழகக்கூடிய விதம் அனைவருக்கும் பிடிக்கும்.
யாராவது பேட்டி எடுக்க வருகிறார்கள் என்றால், முதலில் அவர்களது பெயரை கேட்டு தெரிந்து வைத்து கொள்வார்.. பேட்டிக்காக சென்றதுமே, தண்ணீர், சாப்பாடு போன்ற உபசரிப்புகளை செய்வார்.. அந்த பேட்டி எடுக்கும் முடிக்கும்வரை, அவர்களது பெயரை உரிமையுடன் கூப்பிட்டுக் கொண்டேயிருப்பார்.. இதனால் பேட்டி எடுப்பவர்கள் அவருடன் வெகுசீக்கிரத்தில் நெருக்கமாகி விடுவார்கள்.
பேட்டி தந்துவிட்ட பிறகும்கூட, தனிப்பட்ட முறையில் பத்திரிகையாளர்களை பற்றி விசாரிப்பார்.. அவர்களின் குடும்பத்தை பற்றி விசாரிப்பார்.. சில புத்தகங்கள் பெயரை சொல்லி , படிக்க சொல்வார்.. படித்த புத்தகங்களாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுடன் விவாதிப்பார்.. 10 புத்ககம் மேல் ராஜேஷ் எழுதியிருக்கிறார்.. அவருக்கு தெரியாத சப்ஜெக்ட்டே கிடையாது..
தொழிலதிபர் ராஜேஷ்
தொழிலதிபராக JRV என்ற பெயரில் ரியல் எஸ்டேட் செய்து வெற்றி பெற்றார்.. சினிமா, டிவி தொடர்களில் நடித்தாலும், கடைசி 5 வருடங்களாக சோஷியல் மீடியாவில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.. யூடியூப் வீடியோக்கள் மூலமாகத்தான் இவரை தற்போதுள்ளவர்களுக்கு நிறைய பேருக்கு தெரியவந்தது.
அரசியல், சினிமா, நட்பு வட்டாரங்கள் உட்பட அனைவரிடமும் கடைசிவரை நெருக்கமாகவே இருந்தார்.. ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவகையில் ஆழமான சம்பவத்துடன் ராஜேஷூடன் நெருங்கி இருந்துள்ளார்கள்.. சமீபத்தில்கூட தன்னுடைய முதல் பட ஹீரோயின் வடிவுக்கரசியை அழைத்து சாப்பிட வைத்து, பழைய கதைகளை பேசியிருந்த அந்த வீடியோ, இணையத்தில் வைரலானது.
மனைவியின் மறைவு
மனைவி இறந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.. இதை பல இடங்களில் பதிவு செய்துள்ளார்.. வாழ்க்கைத்துணை, ஆடிட்டர், அட்வகேட், டாக்டர், குழந்தைகள், இந்த ஐந்து விஷயங்களும் ஒருவருக்கு சரியாக அமைந்தால், அவர் வெற்றி பெற்ற நபர் என்று அடிக்கடி சொல்வார்.
சிவாஜி கணேசன் போலவே தோற்றமும், நடிப்பும் ராஜேஷூக்கு ஓரளவு இருக்கும்.. இதை சிவாஜியே கவனித்துவிட்டு, "என்ன கருப்பு சிவாஜி, என்னை மாதிரியே செய்றியே?" என்று கேட்டாராம்..
ஆனால், சிவாஜி கணேசன் படங்களையே ஆரம்பத்தில் இருந்து நிறைய பார்த்து பார்த்து, என்ன பேசினாலும், எதை செய்தாலும் சிவாஜி போலவே ராஜேஷூக்குள் வந்துவிட்டதாம்..
இயக்குனர் மகேந்திரன் மூலமாக எம்ஜிஆரிடம் நெருக்கமாக இருந்தார் ராஜேஷ்..
அதனால்தான் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி அணியில் சேர்ந்து பிரச்சாரம் செய்தார்.. ஜேப்பியார் மூலம்தான் ரியல் எஸ்டேட்டுக்குள் நுழைந்தார் ராஜேஷ்.. எம்ஜிஆருக்கு இருந்த பல தம்பிகளில் ராஜேஷூம் ஒருவர்.
சினிமா துறையை ஆரம்பத்திலிருந்தே நேசித்தவர்.. தன்னுடைய பணிகளை சரியாக செய்தவர்.. தொழிலுக்கான மரியாதையையும் தந்தவர்.. ஆனால், சினிமாவில் உயர்ந்த அங்கீகாரம் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை.. உயரங்களுக்கு போகவில்லை.. விருதுகளும் பெரிதாக தரவில்லை.. ஆனால், சினிமா தொழிலில் நேர்மையாக , உண்மையாக பயணித்தார்..
தன்னுடைய வீட்டிலேயே பெரிய லைப்ரரி வைத்துள்ளார்.. இயற்கையான மருத்துவமனை, பாரம்பரிய சித்த மருத்துவ முறைகளை படித்து, அதற்குள்ளேயே மூழ்கிவிட்டார்.. ஆன்மீகம், ஜோசியம், இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், பூர்வ ஜென்மம், என ஒன்றைகூட விடமாட்டார். அதில் உள்ளேயே நுழைந்து ஆராய்ச்சி செய்துவிடுவார்.
எதையுமே கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கடைசிவரை இருந்தது. ஜோசியத்தில் ஆழமாக படிப்பதுமில்லாமல், அது சம்பந்தப்பட்டவர்களை தேடி தேடி சென்று சந்தித்தார்.. ஓலைச்சுவடிகளை பற்றி ஆராய்ந்தார்..
ஒரு பேட்டியில், "கிறிஸ்துவராக பிறந்து, திராவிட கழக நபராக வளர்ந்து, எப்படி ஜோதிடத்தில் ஆர்வம் வந்தது? என்று கேள்வி எழுப்பினார்கள்.. அதற்கு ராஜேஷ், "அது ஒரு மூடத்தனம்தான்".. என்று வெளிப்படையாக தன்னை பற்றி சொல்லி கொண்டார்...
உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு இருந்தாலும், வயது, தனிமை இது இரண்டும்தான் அவரது மரணத்துக்கு காரணம்" என்று தெரிவித்துள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications