Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜேஷூக்கு சித்த டாக்டர் மூலம் வந்த விதி.. அந்த ஆத்மா தவிக்குமே.. எல்லாருக்கும் நல்லவராச்சே: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர்களில் ஜோதிடம் சொல்பவர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. இதற்கு பிறகு டி.ராஜேந்தர்.. மகனுக்கு பெயர்கூட மாற்றி வைத்தார்.. ஆனால் பலருக்கு பலித்த விஷயம், சொந்த மகனுக்கு பலிக்கவில்லை.. அவருக்கு பிறகு ராஜேஷ், கடந்த 5 வருட காலமாக ஜோதிடத்தில் கவனம் செலுத்தினார்.. ராஜேஷ் பிறருக்கு சொன்ன ஜோதிடம், அவருக்கே அது பலிக்காமல் போய்விட்டது" மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

Puthiya Sinthanai என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "ராஜேஷ் இயல்பான நடிகர்.. ஆவேசமாக, நடிக்க மாட்டார்.. உணர்ச்சிவசப்படாமல் நடிக்கக்கூடியவர்.. நான் நான்கைந்து படங்கள் அவருடன் நடித்துள்ளேன்..

Television Rajesh siddha doctor

ஷூட்டிங்கில் கொஞ்சம் கேப் கிடைத்தாலும் அதிகமாக பேசக்கூடியவர் சிவக்குமார்.. அதேபோல ராஜேஷூம் உலகத்திலுள்ள அத்தனை விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்..

எம்ஜிஆர் தந்த 5 லட்சம்

எம்ஜிஆர் உடல்நலம் சரியில்லாதபோது, நேரில் வந்து சந்தித்தார் ராஜேஷ்.. அப்போது எம்ஜிஆர் 5 லட்சம் ரூபாய் தந்துள்ளார்.. அந்த பணத்தை வைத்துதான், ரியல் எஸ்டேட் பிசினஸ் துவங்கினார் ராஜேஷ்.. அதன்பெயர் ராஜலட்சுமி என்ற பெயரில் சென்ட்டிமென்டாக துவங்கினார்.. அன்று 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற இடம் இப்போது கோடிக்கணக்கில் விற்பனையாகிறது.. முதன்முதலில் மாத தவணைத்திட்டம் முறையில் விற்பனை செய்ததால், நல்ல பெயர் ராஜேஷூக்கு கிடைத்தது.

ஷூட்டிங் பங்களா

அதேபோல, கே.கே. நகரில் ஷூட்டிங் பங்களாவை முதன்முதலில் கட்டியவர் ராஜேஷ்தான்.. ஷூட்டிங் பங்களா கட்டினால், அதில் நல்ல லாபம் வரும் என்று அனைவருக்கும் தெரியவந்தது ராஜேஷ் மூலம்தான்.

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ஏ.கருணாநிதி ஓட்டல் ஒன்றை வைத்திருந்தார்.. ஆந்திர உணவுகளின் ஸ்பெஷாலிட்டி ஓட்டலாகும்.. அதன் பெயர் மாமியார் ஓட்டல்.. அந்தவகையில், நடிகர்களில் அடுத்ததாக ஓட்டல் ஆரம்பித்தது ராஜேஷ்தான்.. விழுப்புரம் சாலையில் ஒட்டல் ராஜேஷ் என்ற பெயரில் நடத்தினார்..

ஓட்டல் தொழில் - லாபம்

ஓட்டல் தொழில், ரியல் எஸ்டேட், ஷூட்டிங் பங்களா என அவர் தொடங்கிய எல்லா பிசினஸ்களுமே அவருக்கு நன்றாக லாபம் கொடுத்தது.. ஆனால், ஏன் அதில் தொடரவில்லை தெரியவில்லை..

கிறிஸ்தவராக இருந்தாலும், பொங்கல், தீபாவளிக்கு தங்களுக்கெல்லாம் புதுத்துணி வாங்கி தந்து பண்டிகைகளை கொண்டாட செய்வார் என்று, ராஜேஷ் வீட்டில் வேலை பார்ப்பவர்கள் கூறுகிறார்கள்.. தான் சாப்பிடும் உணவையே வீட்டில் உள்ள அத்தனை பணியாளர்களும் சாப்பிட வேண்டும் என்பாராம். எந்த விஷயத்திலும் பாகுபாடு பார்க்க மாட்டார்.. 10 நாளில் மகனுக்கு நிச்சயதார்த்தம் வைத்திருந்தார். அதற்குள் இப்படியாகிவிட்டது.

பலிக்காமல் போன ஜோதிடம்

ஒரு வாத்தியார் எப்படி இருக்கணுமோ, அப்படி வாழ்ந்தவர்.. மிகவும் ஒழுக்கமான நபர்.. கிசுகிசுகளுக்கு அப்பாற்பட்டவர் ராஜேஷ்.. டிசிப்பிளின் வாழ்க்கையை வாழ்ந்து முடித்துள்ளார்..

நடிகர்களில் ஜோதிடம் சொல்பவர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. அவர் ஓரு வக்கீலாக இருந்தாலும் துல்லியமாக பலித்தது.. இதற்கு பிறகு டி.ராஜேந்தர்.. மகனுக்கு பெயர்கூட மாற்றி வைத்தார்.. ஆனால் பலருக்கு பலித்த விஷயம், சொந்த மகனுக்கு பலிக்கவில்லை.. அவருக்கு பிறகு ராஜேஷ், கடந்த 5 வருட காலமாக ஜோதிடத்தில் கவனம் செலுத்தினார்.. ராஜேஷ் பிறருக்கு சொன்ன ஜோதிடம், அவருக்கே அது பலிக்காமல் போய்விட்டது.

சித்த மருத்துவர் வந்துட்டாரு

நேற்று காலையில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கவும் டாக்டரை அழைக்க சொல்லியிருக்கிறார் ராஜேஷ்.. அப்போது ஒரு சித்த மருத்துவர் 2 மணிநேரமாக பேசி கொண்டிருந்தாராம்.. இதை ராஜேஷின் தம்பியே சொல்லியிருக்கிறார்.. இதுதான் விதி என்பது.. சித்த வைத்தியர் ரூபத்தில் மருத்துவமனைக்கு செல்ல விடாமல் தடுத்துவிட்டது.

எல்லாருக்கும் நல்லவராக இருந்தவர், மகனின் கல்யாணத்தை பார்க்க முடியாமல் ஆகிவிட்டது.. டெல்லி கணேஷூக்கும் இப்படித்தான் நடந்தது.. அவரது மகனுக்கும் இன்னும் திருமணமாகவில்லை.. மகனுக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் நேரத்தில், ஆண்டவன் இப்படி உயிரை பறித்திருக்க வேண்டாம்? மனைவியின் பக்கத்திலேயே தனக்கும் கல்லறை கட்டி விட்டார் ராஜேஷ்..

சித்தர்கள் பற்றின தேடல்

சித்தர்களை பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார் ராஜேஷ்.. சித்தர்களை பற்றி நிறைய பேசியிருக்கிறார்... அவர்களை பற்றி அறிய தேடி தேடி சென்றிருக்கிறார்கள்.. இப்படி ஜோதிடத்துடன் அதிக தொடர்புடையவராக இருந்தும்கூட, தன்னுடைய மரணத்தை பற்றி அவர் அறியாமல் போய்விட்டது வருத்தத்துக்குரியது.. இறப்பதற்கு முன்தினம்கூட, யூடியூப் வீடியோவில் பேசியிருக்கிறார்..

ஆனால், ராஜேஷின் சாவு நிம்மதியான சாவாக இருந்திருக்காது.. மகனுக்கு நல்லது செய்ய முடியவில்லையே என்று அந்த ஆத்மா ஏங்கவே செய்யும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+