மன்னன் படத்தில் ரூ. 1 கோடி சம்பளம் கேட்ட கவுண்டமணி! "அந்த" சீன் மட்டும் ரஜினிக்கு 21 டேக்காமே!
சென்னை: மன்னன் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க எத்தனை லட்சம் ஊதியமாக பேசப்பட்டது என்பது தெரியுமா? அதே போல் கவுண்டமணி தனக்கு சம்பளமாக எவ்வளவு கேட்டார் என்பதையும் பார்க்கலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: மன்னன் - 33 Years.... பொதுவா தமிழ் ரசிகர்கள் முக்கியமா கமல், ரஜினி ரசிகர்களின் ஜாதகத்தை பிரிச்சி பார்த்தோம்னா ரஜினி ரசிகர்கள் இயல்பானவர்கள்.

அதாவது ரஜினி ரசிகன் அவன் தலைவன் ஸ்க்ரீனில் வந்தா போதும்...கையை தட்டி ஆர்ப்பரிச்சி கொண்டாடி தீர்த்துடுவான். கமல் ரசிகர் போலி கௌரவம் உடையவர்கள். கமல் ரசிகன் அப்படிப்பட்ட நேரங்களின் கொண்டாட்ட மனநிலை இருந்தாலும் அடக்கியே வாசிப்பான். கமலை திரையில் பார்த்ததும் எழுந்து ஆடி தீர்க்க ஆசை இருந்தாலும் அடுத்த சீட்காரன் என்ன நினைப்பானோன்னு மன நிலையிலேயே கமல் ரசிகன் இருந்துடுவான்.
Infact கமல் ரசிகர்களெல்லாம் தலைவனை கொண்டாடுவதை ரஜினி ரசிகர்களிடமிருந்து தான் கற்றுக் கொண்டார்கள் என்றால் நிஜம். காரணம் சமூகத்தில் நல்ல ஸ்டேட்டஸ்ல இருப்பவன் கமல் ரசிகனாகவே இருப்பான். அவனுக்கு தான் Living together பத்திலாம் ஏத்துக்கத் தெரியும். ரஜினி ரசிகன் அப்படி இல்லை. அவன் கூலிக்காரன், ரிக்ஷாக்காரன், ஆட்டோக்காரன். அந்த நிமிடத்தில் வாழ்பவன். எத்தனை கட்டிங் அடிச்சாலும் பொண்டாட்டிக்கு புரோட்டோ கட்டிட்டு போறவன் தான் ரஜினி ரசிகன்.
அப்படி மனைவியை நேசிக்கும் ரஜினி ரசிகனுக்கு திரையில் தன் தலைவனை மனைவியே அவமானப்படுத்தினா எப்படி இருக்கும்?.. அதுவும் வஞ்சகமா தாலி கட்ட அம்மாவை ஏமாத்தின மல்டி மில்லியனர் பொண்ணு தான் சாதாரண கூலிக்கு மனைவி... மனைவிக்கு பாடம் கற்பித்து கொடுக்கணும்னு வந்தா அந்த தலைவனை நிமிஷத்துக்கு நிமிஷம் ரசிக்கத் தானே செய்வான்.... அப்படி ஹிட்டானது தான் மன்னன்..
மன்னன் படத்தின் கதை முதலில் கன்னடத்தில் வந்தது.'அனுராக அரலிது' படம் ராஜ்குமார், மாதவி, கீதா நடித்து 1986ல் நடித்த படம். இதற்கு முன்னே ராஜ்குமார் படங்களின் கதையான பொல்லாதவன், புதுக் கவிதைகளில் ரஜினி வெற்றியை சுவைத்திருப்பது அவருக்கு நம்பிக்கையை கொடுத்தது.
மேலும் ரஜினி ஹீரோன்னா நிச்சயம் பெண் நாயகிகளை எதிர்ப்பார். அப்படி அவர் படம் ஹிட்டாகும். மூன்று முடிச்சில் ஸ்ரீதேவிக்கு எதிரான ரஜினி நடிப்பு அன்று பேசப்பட்டது. பின் அவர்கள், அன்னை ஓர் ஆலயம், தம்பிக்கு எந்த ஊரு, மாவீரன், மாப்பிள்ளை எல்லா படத்திலும் திமிர் பிடிச்ச நாயகிகளிடம் மல்லு கட்டுவார்... அப்படிப்பட்ட கதை தான் அனுராக அரலிது.
கன்னட எழுத்தாளர் ராதாதேவி எழுதிய நாவல் 'அனுராகட அந்தப்புரா'. இதைத்தழுவி எடுக்கப்பட்ட கன்னடப்படம் செம ஹிட். 50 வாரம் ஓடி இப்படம் பெருவெற்றி கண்டது. இப்படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி, நக்மா, வாணி விஸ்வநாத் நடிக்க 'காரானா மொகுடு' என்கிற பெயரில் 92ல் வெளியாகி 10 கோடி வசூல் செய்து முதல் இடத்தைப் பிடித்தது. மலையாளத்தில் ஏய் ஹீரோ என்கிற பெயரில் டப் செய்து கேரளத்தில் 175 நாளுக்கு மேல் ஓடியது. ஆறு மொழிகளில் எடுக்கப்பட்ட முதல் படம் இது தான்.
மன்னன் படத்தை சிவாஜி புரொடக்ஷன்சுக்காக நடித்துக் கொடுத்தார் ரஜினி. அப்போது 90 லட்சம் ரஜினிக்கு சம்பளம். இப்படத்தில் ரஜினியோடு நடிக்க கவுண்டமணியை அணுகிய போது மணி பீக்கில் இருந்தார். தினம் லட்ச ரூபாய் சம்பளம் அவருக்கு. ரஜினி சம்பளத்தோடு 10 லட்சம் சேர்த்துக் கொடுக்குமாறு(ஒரு கோடி) கவுண்டமணி கன்டிஷன் வைக்க விஷயம் ரஜினிக்கு போனது. கடைசியில் 75க்கு மணி சம்மதித்தார்.
பணத்துக்கேற்ற காமெடி தான் இப்படத்தில். உண்ணாவிரதக் காட்சியில் 'நான் இங்க வந்து உக்காந்ததே தப்பு' என்பார் கவுண்டமணி. இக்காட்சியில் ரஜினி சிரித்து விடுவார். 21 டேக்குகளுக்கு மேல் எடுக்கப்பட்டதாம் அக்காட்சி. ஆனாலும் ரஜினி தன் சிரிப்பை கை கொண்டு மூடித்தான் அக்காட்சி ஓக்கே ஆனது. ரஜினிக்கு சரிசமமான நடிகை வேண்டுமென லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியை நடிக்க வைத்தார்கள். இளையராஜா வேறு ரஜினி பாடல் பாடி இருக்கிறார் என சொல்லி விட செம எதிர்பார்ப்பு. ஆனால் ரஜினி 'அடிக்குது குளிரு' படத்தில் டயலாக் பேசியதோடு முடிந்தது. பாடுகிறேன் என மற்ற நடிகர் போல் சங்கீதப் பாடகர்களை கேலி செய்யவில்லை.
மன்னன் படத்தின் ஹைலைட் 'அம்மா என்றழைக்காத' பாடல். மற்றொரு ஜனனி ஜனனி பாடல். அசத்தல். குஷ்பு சின்னதம்பி பெரு வெற்றிக்குப்பின் ரஜினியோடு இணைந்தார். மன்னன் கதை அற்புதமான திரைக்கதை. கலைஞானம் இதேக் கதையை 'கணவன் மனைவி' என்கிற படத்துக்காக எழுதி இருந்தார். தன் கதையைத்தான் கன்னடத்தில் திருடியதாக அவர் சொல்கிறார். காட்சிக்கு காட்சி ஒத்து தான் போகிறது.
மன்னன் படத்தில் ரஜினி ஏர்போர்ட்டில் வரும் அறிமுகக் காட்சி ஸ்டில் இன்றும் பாப்புலர்.
ரஜினி-விஜயசாந்தி ஜோடியை பி.வாசு வேணா ரசிச்சிருக்கலாம். எனக்கென்னமோ ரஜினி-அம்பிகா, ரஜினி-ஸ்ரீப்ரியா, ரஜினி-மாதவி ஜோடிலாம் பார்த்துட்டு இது அவ்வளவா இம்ப்ரஸ் பண்ணலை. ரஜினி-விஜயசாந்தி ஜோடி அந்த லைன்அப்ல கடைசி இடம் கொடுக்கலாம். ஏத்துக்கவே முடியல. நெற்றிக்கண்ணில் தலைவருக்கு தங்கை வேடம் செய்ததை மறக்கவேயில்லை.
படத்தில் ரஜினி விஜயசாந்தி ஜோடியை விட ரஜினி-கவுண்டமணி ஜோடி தான் ஜோடி நம்பர் ஒன். அதுவும் அந்த தியேட்டர் சீன்லாம் சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்திடும். இவங்களோடு மனோரமாவும் சேர்ந்து பண்ற அந்த உண்ணாவிரத சீன் டாப். மன்னன் பட தொழிலதிபர் சாந்திதேவி மறைமுகமா யாரையோ சித்தரிச்சதா சொல்வாங்க. அப்படிப்பட்ட பேச்சு கூட இந்த படத்தின் வசூலை கூட்டியது. மன்னன்.... மறக்கவே முடியாத மாமன்னன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications