ரஜினியின் கூலி மைல்கல் ஆகிறதா? ஆயிரம் கோடி அடிக்குதா? ரஜினிகாந்த் படம் ரூ.450 கோடிக்கு பிரீ-பிசினஸ்
சென்னை பிசினஸ் நடக்க வேண்டும் என்பதற்காக, கூலி பட போஸ்டர்களில் அந்தந்த மாநில நடிகர்களின் போட்டோக்களை பயன்படுத்த வேண்டியிருக்கிறது.. நிச்சயம் இந்த படம் ஆயிரம் கோடி எடுக்கும் என்கிறார்கள்.. எதிர்ப்பார்ப்பு, பிசினஸ் எல்லாம் நன்றாகவே இருந்தாலும், கண்டென்ட் எப்படியிருக்கும் என்பதை பொறுத்தே ஆயிரம் கோடி என்பது சாத்தியமாகும் என பத்திரிகையாளர் சுபைர் கருத்து தெரிவித்துள்ளார்.
BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர்
சுபைர், "கூலி படத்தின் பாதி படத்தை ரஜினிகாந்த் பார்த்துவிட்டார்.. அனிருத்தின் ரீ-ரிக்கார்ட்டையும் அதில் முழுமையாக பார்த்துவிட்டார்..

படம் நன்றாக இருப்பதாகவும், ரஜினிக்கு திருப்தியை தந்துள்ளதாகவும் தகவல்கள்
வெளியாகியிருந்தன.. படத்தை பற்றின டாக் நல்லவிதமாக வரவும், பிசினஸ்களும் அந்த படத்துக்கு கூடியது.. ஓவர்சீஸில் இதுவரை யாரும் செய்யாத விஷயத்தை கூலி படம் செய்துள்ளது..
ஓவர்சீஸ் பிசினஸ்
எப்போதுமே ரஜினிகாந்த்துக்கு ஓவர்சீஸில் தனி பிசினஸ் உண்டு.. சைனா, ஜப்பான் இந்த 2 நாடுகளிலுமே பல நாட்களுக்கு முன்பேயே மாஸ் ஓபனிங் உருவாகிவிட்டது..
அந்தவகையில், கூலி படத்துக்கான ஓவர்சீஸ் மட்டுமே கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் என்கிறார்கள்..
குறைந்தபட்சம் 100 நாடுகளில் கூலி படத்தை ரிலீஸ் செய்ய போகிறார்கள்.. இதுவரை எந்த நாட்டிலும் போகாத அளவுக்கு கூலி படம் ரிலீஸ் ஆகிறது.. 100 நாடுகளிலும் ரிலீஸ் என்கிறபோது, அதிலும் வெளிநாட்டு பணம் என்கிறபோது, முதல் 3 நாளே 200 கோடி எடுக்கக்கூடிய சாத்தியம் உள்ளன..
சேட்டிலைட் ஓடிடி
பிறகு கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களும் சேர்ந்து கிட்டத்தட்ட ரூ.450 கோடி வரைக்கும் பிரீ-பிசினஸ் நடந்திருப்பதாக சொல்கிறார்கள்.. இதில் சேட்டிலைட், ஓடிடியும் அடக்கம். சமீபகாலத்தில் பிரீ-ரிலீஸில் இது மிகப்பெரிய பிசினஸ் என்பதுதான் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் 2 நடித்து கொண்டிருக்கிறார்.. சன்பிக்சர்ஸ் வரிசையாக செய்யும் படங்களில் ஜெயிலர் 2 மூன்றாவது படமாகும்.. இதற்காக அட்வான்சாக ஒரு தொகையை வாங்கிக்கொண்டு ரஜினிகாந்த் நடித்து வரும்நிலையில், இந்த பிசினஸை பார்த்ததுமே தனக்கு சம்பளத்தை கூடுதலாக கேட்டாராம் ரஜினி.. இதற்கான பேச்சுவார்த்தையும் போய் கொண்டிருப்பதாக தகவல் வருகிறது.. இதனால் ஜெயிலர் 2-வில் சின்ன தேக்கம் ஏற்பட்டுள்ளது..
சன்பிக்சர்ஸுடன், ரஜினிக்கு நல்ல இணக்கமான போக்கு உள்ளதால், விரைவில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துவிடும்.
பான்-இந்தியா மூவி
ரஜினி - லோகேஷ் - சன்பிக்சர்ஸ் - அனிருத் என அனைவருமே பலமாக சேர்ந்துள்ளதால், இந்த கூலி படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. பான்-இந்தியா மூவி என்பதால், இந்தியில் இந்த படத்தை கொண்டு போய் சேர்க்க, அமீர்கானைதான் போஸ்டரில் போட வேண்டியிருக்கும்.. கன்னடத்தில் உபேந்திரா போட்டோவை பெரிதாக போட்டுள்ளனர்... ஆனால், அமீர்கான் போஸ்டரில் பார்த்ததுமே அது இந்திப்படம் என்று மக்களும் நம்பிவிடுவார்களா? தெரியவில்லை..
எந்த படமாக இருந்தாலும், நடிகர்களின் போட்டோக்களை போஸ்டரில் போடுவதாலேயே படம் ஓடிவிடாது.. படம் நன்றாக இருந்தால் ஓடப்போகிறது.. கேஜிஎப், காந்தாரா நடிகர்கள் யாரென்றுகூட நமக்கு தெரியாது, ஆனால், அந்த படங்கள் தமிழ்நாட்டில் ஓடியது.. அதாவது நடிகர்கள் யார் என்பதை பார்த்து, படம் ஓடுவது என்பதெல்லாம் இப்போது மலையேறிவிட்டது..
ஆயிரம் கோடி எடுக்குமா
எனினும், பிசினஸ் நடக்க வேண்டும் என்பதற்காக, போஸ்டர்களில் அந்தந்த மாநில நடிகர்களின் போட்டோக்களை பயன்படுத்த வேண்டியிருக்கிறது.. ஆயிரம் கோடி எடுக்கும் என்கிறார்கள்.. எதிர்ப்பார்ப்பு, பிசினஸ் எல்லாம் இருந்தாலும், கண்டென்ட் எப்படியிருக்கும் என்பதை பொறுத்தே ஆயிரம் கோடி என்பது சாத்தியமாகும் என தெரிவித்துள்ளார்.
ரிக்கார்டு பிரேக்
சமீபத்தில் கூலி படம் குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறும்போது, கூலி படத்தின் வியாபாரம் மலைக்க வைக்கிறது.. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 90 கோடிக்கு கேட்கிறார்கள்.. இதுவரைக்கும் எந்த படத்துக்கும் நடந்ததில்லை.. ஆந்திராவில் 48 கோடி வியாபாரம் முடிந்துவிட்டது.. இதுவரை எந்த தமிழ்ப்படமும் ஆந்திராவில் இப்படி வியாபாரம் ஆனதில்லை..
கேரளாவிலும் 40 கோடி வியாபாரம் நடந்துள்ளது.. கர்நாடகாவில் 32 கோடி ரூபாய்க்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. அதேபோல ஓடிபி உரிமை நெட்பிளிக்ஸ் 115 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள். இதுவரை தமிழ்ப்பட சரித்திரத்தில் இந்த அளவுக்கு நெட்பிளிக்ஸ் வாங்கியதில்லை. இப்போதே 500 கோடிக்கு பிசினஸ் நடந்துள்ளதாக சொல்கிறார்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications