Rajinikanth: ஜெயலலிதா பற்றி பேசியபோது, கல்லால் அடித்தாங்க.. காப்பாற்றியது, இந்த நடிகர்தான்! ரஜினி உருக்கம்
சென்னை: இயக்குனராகவும் நடிகராகவும் தனக்கென ஒரு தனி பாதையை வகுத்தவர் பாக்கியராஜ். அவர் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக சமீபத்தில் அவருக்கு விழா நடத்தப்பட்டது அந்த விழாவில் நடிகர் ரஜினி பேசியது பலரையும் வியக்க வைத்திருக்கிறது அதோடு இப்படியும் நடந்ததா என்று பலர் ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இயக்குனர் பாக்கியராஜ் தமிழ் சினிமாவில் பல குடும்ப பாங்கான படங்களை எடுத்து இப்ப வரைக்கும் பலராலும் அடையாளம் காணக்கூடிய நபராகத்தான் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த பாக்கியராஜ் அதற்குப் பிறகு இயக்குனராக மாறி நடிகராகவும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அவருக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் சினிமாவில் 50 ஆண்டுகாலத்தை நிறைவு செய்ததற்காக விழா நடைபெற்றது. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு கே பாக்யராஜுக்கு பொன்னாடை அணிவித்து இருந்தார். அதுமட்டுமல்லாமல் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அதிலும் நடிகர் கமல், ரஜினி, மோகன் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பாக்கியராஜ் பற்றிய பல நினைவுகளை பகிர்ந்து இருந்தனர். அதில் ரஜினி பேசும் போது பாக்யராஜை சம்மதித்து இந்த விழாவை நடத்த பூர்ணிமா எடுத்த முயற்சி கொஞ்ச நஞ்சம் இல்லை. முதலிலேயே நீங்க வந்தா தான் இந்த நிகழ்ச்சி நடக்கும் என என்கிட்ட சொல்லிட்டாங்க, நானும் கண்டிப்பா வரேன் அவருக்காக வராமல் இருப்பேனா அதுவும் ஐம்பதாவது வருஷம் அப்படின்னு இங்கே வந்திருக்கிறேன்.
70களில் மூன்று ராஜாக்கள் தமிழ் சினிமாவுக்கு வந்தாங்க, ஒன்று இளையராஜா.. இன்னொன்று பாரதிராஜா, அடுத்து பாக்யராஜ் தான். இந்த மூன்று பேரும் ஒவ்வொரு துறையிலும் அரசர்கள், கொடிகட்டி பறந்தாங்க... இன்னமும் பறந்துட்டு இருக்காங்க. இதுல இளையராஜா இசைக்கு பாரதிராஜா திரைக்கதை, டைரக்ஷன். ஆனா நம்ம பாக்கியராஜா கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன், ஆக்டிங், அதோடு இசையும் பண்ணி இருக்காங்க அதுவும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

திரைக்கதை தான் ஒரு சினிமாவுக்கு முதுகெலும்பு. அந்த முதுகெலும்பு நம்ம பாக்கியராஜ் என்று ரஜினி பாராட்ட, அதற்கு பாக்யராஜ் வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டிருந்தார். இந்தியாவின் திரைக்கதையில் மன்னர் என்றால் அது சலீம் ஜாவோத் அதுக்கப்புறம் அவங்களுக்கு இணையாக ஒரு திரைக்கதை மன்னர் நம்ம பாக்கியராஜ் தான்.
70களில் ஸ்ரீதர் பாலச்சந்தர் கே பாலகிருஷ்ணன் என அனைவரையும் பெண்கள் சம்பந்தமான படங்கள் எடுத்திருந்தாங்க. அதுல ஹீரோகளுக்கு பெரிசா வேலை இருக்காது. ஆனா அந்த பெண்கள் கதாபாத்திரத்தில் நல்ல குணங்களை கொண்டு வந்து மாற்றம் செய்தவர் பாக்யராஜ். இவருக்கு முன்னாடி சார்லி சாப்ளின் பாக்கியராஜ் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புரட்சிகரமாக இருக்கும்.
அதுல முக்கியமான முந்தானை முடிச்சு படத்தை சொல்லலாம். இன்டர்வெல் சமயத்துல ஊர்வசி கேரக்டர் அந்த குழந்தையை தாண்ட சொல்லும் சீட் தியேட்டர்ல ஆடியன்ஸ் ஆடி போட்டாங்க. அதேபோல அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு என எல்லாமே சூப்பர் ஹிட். பாக்யராஜ் கிடைக்க வேண்டிய மதிப்பு, ஊதியம், மரியாதை எதுவுமே அவருக்கு அந்த நேரத்தில் சரியா கிடைக்கல.
பாக்யராஜ் பணத்து மேல ஆசைப்பட மாட்டாங்க, எப்போதுமே யாருக்கும் ஜால்ரா போட்டது கிடையாது. மனசுல என்ன தோணுதோ அதை மட்டும் சொல்லிடுவார் அதுல உண்மை நியாயம் இருக்கும். இப்ப வரைக்கும் அவர் ஒருத்தர் கிட்டயும் தப்பா பேசி அல்லது கோவிச்சுக்கிட்டதை நான் பார்த்ததே இல்லை. அவரை எம்ஜிஆர் என்னுடைய சினிமா வாரிசு என்று சொல்கிறார் என்றால் எந்த மாதிரி அவர் நேசித்திருப்பார்.
அது மட்டுமல்ல எம்ஜிஆரை பாக்யராஜ் கல்யாணத்தை முன்னின்று நடத்தி வைத்தார். எம்ஜிஆர் இதயத்துல அவ்வளவு ஈஸியா யாராலும் போயிட முடியாது. எப்படி அண்ணா இதயத்தில் எம்ஜிஆர் போனாரோ அதேபோல எம்ஜிஆர் இதயத்தில் பாக்கியராஜ் போயிருக்கிறார் என்று பாராட்டி பேசி இருந்தார்.
அதை தொடர்ந்து அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றியும் ரஜினி பேசி இருந்தார். அந்த படத்திற்கு 5 நிமிஷத்தில் ஒரு சீன் எழுதிக் கொடுத்தார். அந்த மாதிரி ஸ்பாட்ல பண்றவங்களை நான் பார்த்ததே கிடையாது. 16 வயதிலேயே படத்துல கமல் ஸ்ரீதேவி சீன் முதல்ல எடுத்துட்டு தான் கடைசியா நம்மல கூப்பிடுவாங்க. எனக்கு அந்த டைம்ல டயலாக் அவ்ளோ வராது. அப்போ பாக்யராஜ் தான் எனக்கு முழுக்க சொல்லி கொடுத்தார்.
அந்த படத்துல நான் பேசின மாடுலேஷன் எல்லாம் 90 சதவீதம் பாக்யராஜ் சொல்லிக் கொடுத்தது தான். எனக்கு ஏதாவது டவுட் வந்துச்சுன்னா உடனே பாக்யராஜை கேட்பேன். படையப்பா படத்துல நீலாம்பரி கேரக்டர் சம்பந்தமா பாக்யராஜ் சொன்னபோது இந்த கேரக்டர் சரியா எழுதுனா படம் எங்கேயோ போயிடும்னு சொன்னாரு.
அதுபோல என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்வு நடந்தது. அது என் வாழ்க்கையில் பாக்யராஜ் எப்போதும் மறக்க முடியாது. அதுக்காக தான் நான் இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன். அதை இப்போதைய இளைஞர்களும் தெரியனும்னு ஆசைப்பட்டதால இந்த விழாவில் சொல்லுறேன். அதாவது 1995 ல சிவாஜி சாருக்கு செவாலியா விருது மலேசியாவில் கொடுத்தாங்க.
அதுக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவருக்கு திரையுலகமும் அரசும் சேர்ந்து பாராட்டு விழா நடத்துனாங்க. அதுல சிஎம் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்துக்கிட்டாங்க. அதுல நான் ஜெயலலிதாவை பார்த்து ஆவேசமா பேசினேன். எப்போதுமே கோபத்துக்கு ஆயுசு ரொம்ப கம்மி, ஆனா கோபத்துல உதிர்த்த வார்த்தைகளுக்கு ஆயுசு ரொம்ப ஜாஸ்தி. அதனாலதான் கோபத்துல வார்த்தைகளை அளந்து பேசுனும் என்று பெரியவங்க சொல்றாங்க.
நான் சிஎம் பற்றி ஆவேசமாக பேசும்போது சிஎம் க்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்தவர்களுக்கு மூஞ்சி மாறிடுச்சு, அப்புறம் ஒரு ஓபன் ஜீப்புல சிவாஜிய நிற்க வைத்து ரசிகர்கள் முன்னாடி வலம் வர ஏற்பாடு செய்தார்கள். அதில் நானும் ஏறப்போறேன், அப்போ விஜயகுமார் வேண்டாம்னு சொன்னாரு. அப்போ எனக்கு எதுக்காகன்னு புரியல.
ஆனால் அதில் நான் ஏறி போனபோது சிலர் கல்லால் அடிச்சாங்க, பயங்கரமா கத்துனாங்க. அப்போ பாட்ஷா படம் ரிலீஸ் ஆகி ஹிட் ஆனதால சில ஃபேன்ஸ் ஆட்டோகிராப் வந்து கேட்டாங்க, அவங்களுக்கு கொடுத்து முடிக்கிறதுக்குள்ள எல்லா ஆர்டிஸ்ட்டும் பஸ் ஏறி போயிட்டாங்க. எனக்கு எங்க போறதுன்னு தெரியலை.
ஒரு குரூப் இங்க வாங்கன்னு சொல்றாங்க, இன்னொரு குரூப் அங்க போங்கன்னு சொல்றாங்க. அதுல சில பேர் தலையில அடிக்கிறாங்க, கிள்ளுறாங்க, திட்றாங்க. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. அப்போ ஒரு சத்தம் கேட்டுச்சு அது பாக்யராஜ் தான். அவர் பக்கத்தில் இருந்த போலீஸ்காரங்க கிட்ட சத்தமா ஒரு ஆர்ட்டிஸ்ட் கிட்ட இப்படி நடந்துட்டு இருக்காங்க சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க,
ஒழுங்கா அவர ஜீப்ல அழைச்சிட்டு போய் வீட்ல விடுங்க.. இல்லன்னா உங்களை விட மாட்டேன். மீடியாவுல சொல்லிடுவேன்னு சொன்னாரு. அப்புறம் அங்க இருந்த போலீஸ்காரங்க என்னை ஜீப்ல அழைச்சிட்டு போனாங்க. பாதுகாப்பா வீட்டில் விட்டார்கள். இதை என்னால மறக்கவே முடியாது என்று ரஜினி உருக்கமாக பேசியிருக்கிறார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications