வெள்ளைப்புறாவான ஜோதி! தாடியுடன் சுற்றிய ரஜினிகாந்த்! நடுவே புகுந்த சரிதா! என்னா சஸ்பென்ஸ்!
சென்னை: சஸ்பென்ஸ் காட்சி அல்லாத கதையில் திடீரென சஸ்பென்ஸ் வைப்பது அந்த படத்திற்கு ஒரு பிளஸ் பாயிண்ட்டாக அமையும்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: சஸ்பென்ஸ் காட்சி அல்லாத கதையில் சஸ்பென்ஸ் வைப்பது திரைக்கதையில் புது சுவாரசியமான யுக்தி.சகலகலா வல்லவன் படத்தில் கிராமத்து வேலு இடைவேளை ஷாட்டுக்கு பிறகு இளமை இதோ இதோ என வரும்போது திடுக்குன்னு நமக்கு ஒரு சஸ்பென்ஸ் வரும்.

வேலுச்சாமி தான் வி.சாம்னு தெரியும் வரை. இது முதல் சஸ்பென்ஸ்னா அடுத்த சஸ்பென்ஸ் நாடகமாடும் வேலுச்சாமியும், வள்ளியும் எப்போ மாட்டிக்குவாங்கன்னு காத்திருப்பதும் நல்ல சஸ்பென்ஸ் தான்...மசாலா படங்கள்னு ஒதுக்கும் திரைபுத்திசாலிகள் இந்த மசாலா படங்களிலும் இது மாதிரி சின்ன சஸ்பென்ஸ் வச்சி பார்ப்பவர் ஆவலை தூண்டுவாங்க.
தங்கவேலுவின் எழுத்தாளர் பைரவன் காமெடி கூட இப்படி ஒரு சஸ்பென்ஸ் எதிர்பார்ப்பு ஆடியன்ஸ் கிட்ட இருக்கும். ஆள் மாறாட்டக்கதைகள் 'எங்க வீட்டுப்பிள்ளை' கதைகள் கூட இந்த சின்ன சஸ்பென்ஸினால் தான் ஹிட்டாகிறது. புதுக்கவிதை அட்டகாசமான ரஜினியோட காதல் கதைப்படம். ரஜினி மாதிரி ஒரு ஆக்ஷன் ஹீரோ இந்த மாதிரி கதையில் நடித்ததெல்லாம் வரம்.
ராஜ்குமார், லக்ஷ்மி நடிச்ச நின்ன மறயலாரே என்கிற கன்னட படத்தை தான் புதுக்கவிதையா ரீமேக் பண்ணாங்க. அந்தப் படத்திலும் இடைவேளையின் போது ரஜினி கண் முன்னேயே ஜோதிக்கு வேறொருத்தரோட தாலி ஏறிடும். அடுத்து ரஜினி குடிச்சி, தாடிலாம் வச்சிட்டு ரோடு ரோடா பைத்தியம் போல் திரிவார்.
அடுத்த ஷாட்டில் செமயான சஸ்பென்ஸை நமக்கு தருவார் இயக்குனர். ரஜினியிடம் சரிதா போன் பண்ணி 'வேலை இருக்கு. குழந்தையை ஸ்கூல்லயிருந்து அழைச்சிட்டு வாங்க'ன்னு சொல்ற மாதிரி சீன். அரைமணி நேரம் வரை சரிதா-ரஜினி கணவன்-மனைவி மாதிரியே காட்சி வச்சிருப்பாங்க.
வா வா வசந்தமே பாடல்லாம் ரஜினி தன் மகளோடு பாடுறது மாதிரி சீன் இருக்கும். ஆடியன்சுக்கு மேலும் இந்த சஸ்பென்ஸை அதாவது ரஜினி-சரிதா கணவன் மனைவின்ற தோற்றதை நிரூபிக்க அந்த குழந்தைக்கு காதலி உமா பெயரை வைத்திருப்பார் இயக்குனர்.
பொதுவாக முன்னாள் காதலி பெயரை தன் குழந்தைக்கு தானே வைப்பார்கள் இந்த தோல்வி ஆண்கள். அது தான் நம்மை சஸ்பென்ஸில் ஆழ்த்தி விடும். அப்போ நமக்கு ஒரு கேள்வி வரும். ரஜினிக்கு சரிதா மனைவின்னா ஜோதியோடு, ரஜினி எப்படிடா சேர்வார்? இந்த சஸ்பென்ஸ் அரை மணி நேரத்துக்கு பிறகு உடையும். ஆனா அதுக்கப்புறம் ஆடியன்ஸ் ரிலாக்ஸ் மூடுக்கு வந்துடுவான்.
கன்னட ஒரிஜினலிலும் இந்த சஸ்பென்ஸ் உண்டு. ஆனா அங்கே லக்ஷ்மி ஸ்கூல் டீச்சர் கிடையாது. மழைக்கு ஒரு மரத்தடியில் ஒதுங்கும் போது லக்ஷ்மியை ராஜ்குமார் பார்ப்பதாக காட்சி வரும். இந்த சஸ்பென்ஸ் இல்லாமல் அந்த காட்சிகளை நினைச்சுப் பாருங்க. சுவாரசியமே இருக்காது. சரிதா யாரோ ஒரு பொண்ணுன்னு சீன் வச்சா நமக்கு என்ன சுவாரசியம்?
படத்துல இன்னொரு சஸ்பென்ஸ் என்னன்னா ஜோதி ஒரு விதவைன்னு முன்பே நமக்கு சொல்ற மாதிரி வரிகள் வைப்பது. 'வெள்ளைப்புறா ஒன்றுஏங்குது கையில் வராமலே....' இந்த வரிகளின் படி விதவையான நாயகி நாயகனை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் தவிப்பதான கதையின் ஒன்லைனர் தான் அது.
அதை நம்மிடம் முன்னேயே பாடல் மூலம் இரு அர்த்தங்களில் சொல்லி விடுவார்கள். மசாலா படங்கள்னு கேவலமா சொல்லிக்கிட்டாலும் ஆடியன்ஸை இப்படி சில மணி நேரத்துக்கு கட்டிப்போடும் திரைக்கதைகள் இதில் தான் இருக்கிறது... அவை படத்தை ரசிக்க வைக்க நமக்கு வைக்கும் கருவேப்பிலை வாசம் மாதிரி... புதுக்கவிதை என்ன ஒரு அழகான மரபுக்கவிதை.... என குறிப்பிட்டுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications