போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் வழுக்கி விழுந்தாரா? நோ சான்ஸ்.. ரஜினியின் கூலி பட டிக்கெட் ரூ.3000.. செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துள்ளார். இந்தபடம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.. லோகேஷ் கனகராஜ், ரஜினி, அனிருத் காம்பினேஷனுடன், பல மொழி பிரபலங்களும் இப்படத்தில் இணைந்துள்ளதால், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கூலி மாறியிருக்கிறது.. இந்நிலையில், இப்படம் குறித்து கூடுதல் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.

cheyyaru Balu என்ற தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "2025-ன் மிக முக்கியமான படம்.. இது யூடியூப்பில் பேசுபவர்களுக்கு மட்டுமல்ல, தியேட்டர் ஓனர்கள், விநியோகஸ்தர்கள் உட்பட மொத்த திரைப்படத்துறைக்கே முக்கியமான படமாக கருதப்படுகிறது..

நம்பர் 1 வசூல் சாதனை

இந்த வருடத்தில் இதுவரை வெளியான படங்களின் வசூலை எடுத்து பார்த்தால், கூலி அளவுக்கு எதுவுமே வராது.. இந்த வருடம் முடிய போகிறது என்பதால், பெரிய நடிகர்களின் படமும் வேறு எதுவும் கிடையாது. எனவேதான், ரஜினியின் கூலி படம் கவனம் பெற்றுள்ளது.. இந்த வருட வசூலில் நம்பர் 1 இடத்தை கூலி பெறும் என்கிறார்கள்..

கூலி படம் 1000 கோடி அடிக்கும் என்று பலரும் சொல்லி வருகிறார்கள்.. ஆனால், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூலிபடத்தின் கதையை இதுவரை சொல்லவில்லை.. 1000 கோடி அடிக்கும் என்றும் சொல்லவில்லை.. 600 கோடிக்கு லியோ படம் வசூலித்து தந்ததால்தான், எனக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டுள்ளது என்று லோகேஷ் கனகராஜ் சொல்வதற்கே ஒரு தில்லு வேணும். கூலி படம் ரஜினி சாருக்கான படமாக இருக்கும்..

பிரபலங்கள் அசத்தல்

இதில் பல பிரபலங்கள் நடித்துள்ளதால், அவர்களை மிகச்சரியாக இயக்குனர் பயன்படுத்தியிருப்பதாகவும் அவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும், புல்லரிக்க செய்துவிடும் அளவுக்கு இருப்பதாகவும் சொல்கிறார்கள்.. அதிலும் அமீர்கான் படம் முழுக்க வருகிறாராம்..

இப்பவே டிக்கெட்டுகளை கேட்க ஆரம்பித்துவிட்டார்களாம்.. அமெரிக்காவில், வரலாறு காணாத புக்கிங் இந்த படத்துக்கு இருப்பதாக என்கிறார்கள்.. ஒரு டிக்கெட்டின் விலை 35 டாலர் அதாவது 3000 ரூபாயாம்.. மொத்தமாக அங்கு டிக்கெட் விற்கப்பட்டுள்ளது..இந்தியாவில் நீங்கள் பார்ப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே, கூலி படத்தை நாங்கள் பார்த்து விடுவோம் என்கிறார்கள் அங்குள்ளவர்கள்.. அந்த அளவுக்கு ஆர்வம் இப்போதே கிளம்பிவிட்டது" என்றெல்லாம் பத்திரிகையாளர் பாலு தெரிவித்துள்ளார்

வழுக்கி விழுந்த ரஜினிகாந்த்

இதனிடையே, 2 நாட்களுக்கு முன்பு, ரஜினிகாந்த் தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் வழுக்கி விட்டதாக கூறி ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது.. அந்த வீடியோவில் ரஜினி போலவே தோற்றம் கொண்ட நபர், தோட்டத்தில் வாக்கிங் செல்கிறார்.. தலையில் நரைத்த முடி காணப்படுகிறது.. ஷாட்ஸ் அணிந்து மற்றும் அரை கை பனியன் அணிந்துள்ளார்..

பிறகு கேட்டை திறந்து நியூஸ்பேப்பரை எடுத்து வரும்போது, திடீரென அங்கிருந்த ஈரத்தில் வழுக்கி கீழே விழுந்துவிடுகிறார்.. பிறகு அவரே எழுந்து செல்வதாக அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.. இதைப்பார்த்து பதறிப்போன ரசிகர்கள், தலைவா, கவனமாக இருங்க என்று அக்கறையுடன் பதிவிட துவங்கிவிட்டனர்..

ஆனால், அந்த வீடியோவில் இருப்பவர் ரஜினிகாந்த் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், ரஜினிகாந்த் தற்போது நலமாக இருப்பதாகவும் படக்குழுவினரே விளக்கம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+