விஜய் - திரிஷா திருமணம் செய்ய வேண்டும்.. நடிகை பேச்சால் பரபரப்பு.. உங்க டைமிங் ரொம்ப மோசம் மேடம்!
தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள நடிகர் விஜய்யின் ஆட்சி அமைப்பதில் பெரும் இழுபறி நிலவி வரும் வேளையில், விஜய் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வதந்திகள் சினிமா உலகம் தாண்டி அரசியல் வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் ஆதரவு தெரிவித்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் அடுத்த சில மணிநேரத்தில் ஆதரவு தரலாம் என தெரிகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் விஜய் மற்றும் நடிகை திரிஷாவுக்குமான உறவு குறித்த பேச்சுகள் மீண்டும் சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி வருகின்றன. இந்தச் சூழலில், இந்தி நடிகை ராக்கி சாவந்த் அளித்த பேட்டி தற்போது நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
ராக்கி சாவந்த் பேட்டி
பிரபல இந்தி நடிகையும் சமூக வலைதள கண்டெண்ட் கிரியேட்டருமான ராக்கி சாவந்த், Filmymantra Media என்ற ஊடகத்துக்கு அளித்த சமீபத்திய பேட்டியில் விஜய் மற்றும் திரிஷா குறித்து பேசியுள்ளார். "விஜய்யும் திரிஷாவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் அவர்களின் மெஹந்தி விழாவிற்கு செல்லலாம்" என்று அவர் கூறிய வார்த்தைகள் தற்போது பெரும் வைரலாகி வருகின்றன. இந்தக் கருத்து பலரால் விமர்சிக்கப்பட்டாலும், சிலர் இதை நகைச்சுவையாகவே பார்த்து வருகின்றனர்.

ராக்கி சாவந்த் தவெகவின் தேர்தல் வெற்றியைப் பற்றியும் பேசினார். "தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு கிறிஸ்தவர் முதலமைச்சராக விஜய் ஆகியுள்ளார். அவரை தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், விஜய்யின் படத்தில் ஒரு பாடலில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்டகால கனவு என்றும், அந்த வாய்ப்பு கிடைக்காததால் இப்போது அவரது கட்சியில் சேர்ந்து விடலாமா என்று யோசிப்பதாகவும் வேடிக்கையாகக் கூறினார். இந்தப் பேட்டி தமிழக சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்-திரிஷா உறவு
விஜய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி, முதல்வர் வேட்பாளராகக் களம் கண்டார். 108 இடங்களில் வெற்றி பெற்ற இவரது அரசியல் பயணம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தச் சூழலில், இரு மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜயும் திரிஷாவும் ஒன்றாகத் வந்தது பெரும் வைரலானது.
இக்காலக்கட்டத்தில் தான் விஜய்-யின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடுத்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இருவருக்குமான உறவு குறித்த வதந்திகள் தீவிரமடைந்தன.

வாக்கு எண்ணிக்கை நாளில் நடந்த கூத்து
மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளில், திரிஷாவின் பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது. அன்று காலை திரிஷா திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, நேரடியாக விஜய்யின் நீலாங்கரை இல்லத்துக்கு சென்று, தேர்தலில் வெற்றிப்பெற்றதை வாழ்த்தினார்.
இந்த நாளில் எந்தொரு நடிகை, நடிகர், இயக்குனர் விஜய் வீட்டுக்கு செல்லவில்லை, திரிஷா மட்டுநே சென்றார். இந்தச் சந்திப்பு பலரது கவனத்தை ஈர்த்தது.
அதே நாளில் நடிகை ராதிகா சரத்குமார் திரிஷாவுக்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வாழ்த்து தெரிவித்தார். "Happy bday dear... whatte a gift" என்ற அவரது வார்த்தைகள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications