Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாமரை தூக்கிப் போட்டு.. கப்பல் விட்டு விளையாடிய ரக்ஷிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தற்போது ரக்ஷிதா மழைநீரில் கப்பல் விட்ட வீடியோ தான் வைரலாக பரவி வருகிறது.

பலரும் கவர்ச்சி போட்டோக்களை அப்லோட் பண்ணி கொண்டு இருக்கும்போது இவர் மட்டும் கப்பல் விட்டு வீடியோ போட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து அவரது ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.

ரக்ஷிதா என்று சொல்வதை விடவும் சரவணன் மீனாட்சி மீனாட்சி என்று சொன்னாலே அனைவர் மனதிலும் டக்கென்று ஞாபகத்திற்கு வருவது இவர்தான்.

வாயாடி துணிச்சல் நாயகி

வாயாடி துணிச்சல் நாயகி

சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் வாயாடி ஆகவும் மிகவும் துணிச்சலான பெண்ணாக இருந்தால் நடித்திருப்பார். ஆனால் நிஜத்தில் இன்னும் குழந்தை மணம் மாறாத குமரியாக தான் இருந்து கொண்டிருக்கிறாராம் . பலர் ரசிகர்களை கவர்வதற்காக கவர்ச்சி போட்டோ சூட் நடத்திக் கொண்டிருக்கும் போது இவர் அடிக்கடி புடவை கட்டிக்கொண்டு குடும்ப குத்துவிளக்காக தான் போட்டோசூட்டுகளை நடத்தி அவருடைய ரசிகர்களுக்கு தரிசனத்தைக் காட்டி வருகிறார்.

கிராமத்துக் குயில்

கிராமத்துக் குயில்

பிரிவோம் சந்திப்போம் சீரியலில் முதல் முதலில் அறிமுகம் ஆனாலும் இவருக்கு சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாகத்தான் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது .முதல் சீரியலில் கருப்பழகி யாகதான் ரசிகர்களை கவர்ந்து இழுத்து இருந்தார். கிராமத்து குயிலாக இவர் நடித்திருந்தாலும் முதல் சீரியலில் அந்த சீரியலில் அவருடன் நடித்த தினேஷ் காதலித்து அவரை திருமணமும் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்

திருமணத்திற்குப் பின்

திருமணம் முடிந்தாலும் திருமணம் வேற தொழில் வேற என்று தனது நடிப்புக்கு முழுக்கு போடாமல் ஒவ்வொரு நாளும் முன்னேறி தான் வருகிறார் .சீரியலில் இவரது நடிப்பை பார்த்து தான் திரைப்படங்களிலும் இவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு வந்தது போல அதில் வெற்றி தான் கிடைக்கவில்லை. இருந்தாலும் நமக்கு வெள்ளித்திரையில் செட்டாகவில்லை என மீண்டும் சின்னத்திரையில் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டார்.

மாறாத மீனாட்சி

மாறாத மீனாட்சி

சரவணன் மீனாட்சி சீரியலில் தொடர்ந்து மூன்று சீசன்களில் மீனாட்சி ஆக நடித்து பல கதாநாயகர்கள் மாறினாலும் மாறாத ஒரே கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருந்தார். இது வெள்ளித்திரையில் நயன்தாரா அவரை விட வயது குறைந்த கதாநாயகர்களுடன் நடிப்பதை போலத்தான் இவரும் பல சரவணன்கள் வந்தாலும் ஒரே மீனாட்சியாக ஜொலித்துக் கொண்டிருந்தார்.

கணவருடன் ஜோடி போட்டு

கணவருடன் ஜோடி போட்டு

அதுமட்டுமல்லாமல் மீண்டும் அவரது காதல் கணவருடன் ஜீ தமிழில் ஒரு சீரியலிலும் நடித்து இருந்தார் .ஆனால் இந்த சீரியல் நன்றாக போய்க் கொண்டிருந்த வேளையில்தான் இந்த கோராணா , லாக்டோன் எல்லாம் வந்து அதை திடீரென்று முடித்து வைத்து விட்டது . இருந்தாலும் இவரது ரசிகர்கள் இவரை தேடிக்கொண்டிருந்தால் மீண்டும் இவருக்கு ஒரு பம்பர் பரிசு கிடைத்திருக்கிறது.

மீண்டும் செந்திலுடன்

மீண்டும் செந்திலுடன்

தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கும் செந்திலுக்கும் ஏற்கனவே ஒரு ஜோடி பொருத்தம் இருப்பதால் தான் செந்தில் நடித்து ஹிட்டான சரவணன் மீனாட்சி சீரியலில் இரண்டாம் பாகத்தில் தொடங்கி மூன்று பக்கத்திற்கு இவரே கதாநாயகியாக நடித்தார்.

அதேபோலத்தான் இப்போதும் செந்திலுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

பெருகும் ரசிகர்கள்

பெருகும் ரசிகர்கள்

நடித்து ஹிட்டான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அவரது ஜோடியாக இரண்டாம் பாகத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகிவருகிறது. சில நேரங்களில் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் சில சின்ன வீடியோக்களும் வைரல் ஆகி விடும். அந்த மாதிரி தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரக்ஷிதா செய்த விஷயம் வைரலாகியுள்ளது.

மழை நீரில் கப்பல்

மழை நீரில் கப்பல்

சமீபத்தில் மழை நீரில் கப்பல் விட்டு குழந்தைபோல என்ஜாய் பண்ணி கொண்டிருக்கிறார். இவரது இந்த விளையாட்டை பார்த்து அப்படியே வீடியோ பிடித்து அதை பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பி விட்டார்கள் ..அந்த வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இருந்தாலும் இந்த குசும்புக்கார நெட்டிசன்கள் இதனை பார்த்தும் கலாய்த்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+