ஜோடி ஆர் யூ ரெடி! போட்டியாளருக்கு ஓடோடி வந்து உதவி செய்த ரம்பா கணவர் இந்திரன்! நெகிழ்ச்சி!
சென்னை: ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்காக நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் செய்த உதவி வைரலாகும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.

விஜய் டிவியில் பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானது நடன நிகழ்ச்சியாகும். ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ், பிபி ஜோடிகள் என நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் தற்போது பிரபலமடைந்துள்ளது ஜோடி ஆர் யூ ரெடி எனும் நிகழ்ச்சி.
இது 2024 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 29 எபிசோடுகள் நடந்துள்ளன. இந்த நிகழ்ச்சியின் 2ஆவது சீசன் தற்போது நடந்து வருகிறது. முதல் சீசனில் மீனா, ஸ்ரீதேவி விஜயகுமார், சாண்டி மாஸ்டர், லைலா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
அந்த வகையில் சீசன் 2 நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி விஜயகுமார், சாண்டி மாஸ்டர், ரம்பா ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் 20 திறமையான ஆண், பெண் நடனக் கலைஞர்கள் தொலைக்காட்சி பிரபலங்களுடன் ஜோடியாக போட்டியிடுவார்கள்.
இதற்கு நடுவர்கள் மதிப்பெண்களை வழங்குவார்கள். முதல் சீசனில் விக்னேஷ் மற்றும் ரவீனை ஆகியோர் முதலிடத்தை பெற்றார்கள். இந்த 2 சீசனின் வெற்றியாளர்களாக அபினவ்- ராணிகுமாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு ஜோடி ஆர் யூ ரெடி எனும் பட்டத்தை வென்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று இந்த வாரம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒற்றை கையுடன் ஆதிரா நடனமாடி வந்தார். அவருக்கு செயற்கை கை பொருத்த நடிகை ரம்பாவின் கணவர் இந்திரன் உதவி செய்துள்ளார்.
அப்போது இந்திரன் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் ரோட்டில் இறங்கி நடக்கவே கஷ்டப்படுவார்கள். ஆனால் ஆதிரா, ஸ்டேஜில் வந்து ஆடுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என இந்திரன் கூறினார்.
ரம்பாவின் கணவர் இந்திரன் பத்மநாதன். இவர் கனடாவை சேர்ந்த இலங்கைத் தமிழ் தொழிலதிபர். 2010 ஆம் ஆண்டு நடிகை ரம்பாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் டொரண்டோவில் குடியேறினார். இவர்களுக்கு லாவண்யா, ஷாசா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ரம்பாவுக்கும் இந்திரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரம்பா சென்னைக்கு வந்துவிட்டார். தன்னை தன் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இவர்களுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து இருவரும் சேர்ந்து வாழ்வதாக கூறியதை அடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. பிறகு இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications