ராதிகா வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு! நிரோஷாவுக்கு கோயிலில் வைத்து தாலி கட்டினாரா ராம்கி?
சென்னை: ராம்கி- நிரோஷா காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: ராம்கி வந்த போது அந்தப் படத்தில் அவர் மேல் பெரிய ஈர்ப்பு இல்லை என்பது உண்மை. 'சின்னப்பூவே மெல்லப்பேசு' வந்த போது அது பிரபு ஆக்ஷனும், ராஜ்குமாரின் பாடல்களாலும் செம ஹிட்.

படம் பாடல்களால் எப்படியோ ஹிட்டானது. சப்ஜெக்ட் அரைத்த மாவு தான். ஆனா சின்னப்பூவே மெல்லப்பேசு நல்ல விசிட்டிங் கார்டு ராம்கிக்கு. பெண் ரசிகைகள் அவரை விரும்பியது நிஜம். அவரது முகம் அளவுக்கு நெற்றிக்கு மேலே கிரீடம் போன்ற தலைமுடியை பெண் ரசிகைகள் விரும்பினர்.
விஜயகாந்தோட 'ஊமை விழிகள்' படத்தில் பின்னால் வேலைச் செய்திருந்த ராம்கியை வைத்தே அதே யூனிட் செந்தூரப்பூவே எடுக்கும் அளவுக்கு ராம்கி வளர்ந்தது ராம்கியோட யோக ஜாதகம் தான். 'செந்தூரப்பூவே' ஒரு கல்ட் க்ளாசிக். விஜயகாந்தோடு அவர் சேர்ந்ததால் மூலை முடுக்கெல்லாம் போய்ச் சேர்ந்தார்.
ராம்கியோட சார்மிங் லுக் மட்டும் தான் அடிச்சிப் போட்டது. மற்ற படி நடிப்பு தொடக்கத்தில் திணறியது. முகபாவனைகள் அவரே முயற்சித்தாலும் மாறாது. 'செந்தூரப்பூவே' படம் பெற்ற வெற்றியால் கையோடு வந்த 'பறவைகள் பலவிதம்', 'இணைந்த கைகள்' அவரை வேறு லெவலுக்கு கொண்டு போனது.
ஆனாலும் என்ன செய்வது?. பின் வந்த படங்கள் எதுவும் பெருவெற்றியாக இல்லை.
நாளடைவில் நதியா, ஊர்வசி, விஜயசாந்தி, குஷ்பு மாதிரி ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்டில் ராம்கி வரத்துவங்க, மார்க்கெட் வீழ்ந்தது. லக்கி பாஸ்கர் கூட பெரிய பாத்திரமும் இல்லை.
அவரது உருவத்துக்கும், கடந்து வந்த பாதைகளுக்கும் ஏற்ற பாத்திரம் கிடையாது. அது ஒரு துணைநடிகர் பாத்திரம் தான். உண்மையில் அது ஒரு வில்லன் நடிகர் செய்ய வேண்டிய பாத்திரம். தொடர்ந்து வில்லனாகவே நடித்த நடிகர் அந்த பாத்திரத்தை ஏற்கும் போது படம் பார்க்கும் நமக்கு ஒரு படபடப்பு வரும்.
இவன் பணத்தோடு ஓடி விடப் போகிறான் என்கிற மாதிரி. ஆனால் ராம்கி மாதிரி ஒரு ஆள் நடித்ததால் அந்த டென்ஷன் படம் பார்க்கும் போது இல்லை. எப்படியும் பணத்தை கொடுப்பார் என்பது ராம்கி வைத்திருக்கும் கெரியர் ரெக்கார்ட் சொல்லி விடும். ராம்கி ரொம்ப பேசப்பட்டது நிரோஷா விவகாரத்தில் தான். செந்தூரப்பூவே, இணைந்த கைகள், பறவைகள் பலவிதம், மருதுபாண்டி, வெற்றிப்படிகள், மனிதஜாதி போன்ற படங்கள் ராம்கி-நிரோஷா ஜோடியை நிஜ வாழ்விலும் ஒன்றாக்கின.
கேரளாவில் ப்ரியதர்ஷன் நிரோஷாவை முதன் முதலில் மலையாளத்தில் அறிமுகப்படுத்தி 'ஒரு முத்தஸ்ஸி கதா' என்கிற படம் தொடங்கினார். அதே நேரம் மணிரத்னம் இங்கு நடிகை லிஸியை வைத்து 'அக்னி நட்சத்திரம்' தொடங்கினார். லிஸி அக்னி நட்சத்திரம் படத்தில் நீச்சல் உடையில் நடிக்க தயாராக இயக்குனர் ப்ரியதர்ஷன் ஸ்பாட்டுக்கு வந்தார். அப்போது ப்ரியதர்ஷன்-லிஸி பைத்தியக்காரத்தனமான காதல். லிஸி நீச்சல் உடையில் நடிக்க மாட்டார் என ப்ரியன் தடை சொல்ல லிஸியை விட்டால் யார் நடிப்பது என மணி கேள்வி கேட்க ப்ரியதர்ஷனே தன் படத்தில் நடிக்கும் நிரோஷாவின் ஸ்டில்களை எடுத்துப் போட மணிக்கும் ஓகே.
ராதிகாவின் தங்கை என்கிற பப்ளிசிட்டியோடு 'அக்னி நட்சத்திர'த்தில் நிரோஷா உள்ளே நுழைந்தார். அதே நேரம் சித்ரா லக்ஷ்மண் 'சூரசம்ஹாரம்' படத்துக்கு புக் செய்ய நிரோஷா பெரும் எதிர்பார்ப்போடு நுழைந்தார். ராம்கி போலவே நிரோஷாவுக்கும் நடிப்பு சுட்டாலும் வராது. நல்ல பெரிய ஹீரோ படங்களும் இல்லை.
அவர் நான்கு மொழிகளிலும் தலை காட்டியதால் தமிழிலும் பெரிய நடிகையாக வர முடியவில்லை. நிரோஷா-ராம்கி காதல் வீட்டினரால் எதிர்க்கப்பட்டதால் ஒரு கோவிலில் வைத்து தாலி கட்டியதாக 'வண்ணத்திரை' புத்தகம் எக்ஸ்க்ளூஸிவ் செய்தியாக போட்டோக்களுடன் வெளியிட்டது.
வாரிசு இதுவரை இல்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் காதல் வாழ வைக்கிறது. பின்னாட்களில் ஜேஜே என்றிருந்த ஜெமினி பார்சன் காம்ப்ளக்ஸ் ராம்கியின் வீடு ஆளறவமற்று போனது. ராம்கியும் பிஸினஸ்களில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெறத் துவங்கினார். வேறு வேலைகளுக்குள் நுழைந்தார். நிரோஷா வீட்டு அம்மணியானார்.
வெற்றி என்பதெல்லாம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதத்தில் மாறுபடுகிறது. கோடிகளில் வசூல் செய்வது மட்டுமே வெற்றி எனப் பார்க்கப்படும் காலத்தில் சிறிய பாத்திரத்தில் லக்கி பாஸ்கர் படத்தில் வந்ததால் ராம்கியை பேட்டி எடுத்து 'இந்த ஆளுக்கு முடி கொட்டவே இல்லையா? என்ன ஆயில் யூஸ் பண்றாரு'ன்னு மீம் வருவது கூட வெற்றி தான். எல்லோருமே கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே.. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications