BB Jodigal 2: ஆடினது பார்த்து-வா இல்லை ஆவியா?.. ஸ்டான்டிங் அப்லாஸ் கொடுத்த ரம்யா.. தாமரை ஜோடி ஹேப்பி
சென்னை: பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் தாமரையும் அவரது கணவர் பார்த்தசாரதியும் நடனத்தில் வெளுத்து வாங்கியதை பார்த்த நடிகை ரம்யா கிருஷ்ணன் எழுந்து நின்று கரகோஷத்தை எழுப்பியிருந்தார்.
விஜய் தொலைகாட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள், அதாவது பிபி ஜோடிகள் எனும் டான்ஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மட்டுமே ஆவர். இந்த நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் நடுவராக ரம்யா கிருஷ்ணன் இருந்து வருகிறார்.

முதல் சீசன்
இதன் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் - சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா சம்பத்- ஷாரிக், பாத்திமா பாபு- மோகன் வைத்தியா, ஷிவானி நாராயணன்- சோம்சேகர், காப்ரியல்லா- ஆஜித், அறந்தாங்கி நிஷா- தாடி பாலாஜி, ஜூலி- சென்ராயன், சம்யுக்தா- ஜித்தன் ரமேஷ் ஆகியோர் 8 ஜோடிகள் கலந்து கொண்டனர்.

வனிதா விஜயகுமார் வெளியேற்றம்
இந்த சீசனில் வனிதா விஜயகுமாரின் நடனத்தை பார்த்த ரம்யா கிருஷ்ணன், மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு பேசியதால் கோபமடைந்து வாக்குவாதம் செய்ததால் வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

7 ஜோடிகள்
இந்த சீசனில் மற்ற 7 ஜோடிகள் பங்கேற்ற நிலையில் அவர்களில் அனிதா சம்பத்- ஷாரிக் ஜோடி டைட்டிலை வென்றது. தற்போது பிபி ஜோடிகள் 2ஆவது சீசன் தொடங்கியுள்ளது. இதில் செலிபிரேஷன் ரவுண்ட் நடந்து வருகிறது. இதில் வேல்முருகன்- இசைவாணி, தாமரை- பார்த்தசாரதி, ஆர்த்தி- கணேஷ், சுஜா வருணி- சிவகுமார், ஐக்கி பெர்ரி- தேவ், அபிஷேக் ராஜா- சுருதி பெரியசாமி, அமீர்- பாவனி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

ப்ரோமோ
இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் தாமரையும் அவரது கணவர் பார்த்தசாரதியும் நடனமாடி வருகிறார்கள். தாமரை மேடைக் கலைஞர் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் அவருக்கு நடனம் என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனால் அவரது கணவர் பார்த்தசாரதி, தாமரைக்கு ஆதரவாக முழு ஒத்துழைப்பையும் கொடுத்து வருகிறார். நோ மணி நோ மணி பாடலுக்கு இவர்கள் ஆடிய நடனத்தை பார்த்து வியந்த ரம்யா கிருஷ்ணன் எழுந்து நின்று பாராட்டினார். தாமரை கணவர் பார்த்தசார்தியை பார்த்து என அழைக்கிறார் ரம்யா கிருஷ்ணன். அவருக்குத்தான் எழுந்து நின்று பாராட்டியுள்ளார். மேலும் இது பார்த்துவா இல்லை ஆவி வந்து உள்ள புகுந்திடுச்சா என்றும் ரம்யா கேட்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications