நதியா மாட்டேன்னார்... ரம்யா ஓகேன்னுட்டார்.. அந்த ஸ்டைலும், அழகும்.. வாவ்!
Recommended Video

சென்னை: நடிகை நதியா பூவே பூச்சூடவா படத்தில் ஆரம்பித்து அவரது கல்யாணத்துக்கு முன்னான சின்ன மேடம் படம் வரைக்கும் லேடி சூப்பர் ஸ்டாரா கொண்டாடப்பட்டவங்க.
திருமணமனத்துக்கு பின்னர் பிரபு கூட ஜோடி சேர்ந்து ராஜகுமாரன் படம் நடித்தார். குழந்தைகளை பெற்று, அவர்கள் ஓரளவு வளர்ந்த நிலையில் மீண்டும் ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் படத்துல நடிச்சப்பவும் அவங்க மேல இருந்த கிரேஸ் குறையலை. அந்த படம் வந்து பல வருடங்களாகியும் இன்றும் அவர் கிரேஸ் குறையாமத்தான் இருக்கு.
அண்மையில் விஜய் சேதுபதி நடித்து வரும் சூப்பர் டீலக்ஸ் படத்துல நடிக்க கூப்பிட்டப்போ, அது நெகட்டிவ் ரோல், மக்களுக்கு என் மேல இருக்க கிரேஸ் போயிரும்னு மறுத்துட்டாங்களாம் நதியா. ஆனா, இவங்களுக்கு வந்த ரோலில் நடிப்பது ரம்யா கிருஷணன்.

ரம்யா
சொல்லப்போனா ரம்யா கிருஷ்ணன் கூட ரொம்ப கிரேஸ் ஆனவர். அவர் எந்த பாத்திரம்னாலும் சவாலா ஏத்து நடிக்க கூடியவர். இவருக்கு டிவி உலகம் அவ்வளவா கைகொடுக்கவில்லை. இவர் நடத்திய ரியாலிட்டி ஷோ ஓரளவுக்கு இருந்தாலும், சீரியல் எதுவும் அவ்வளவாக இவரின் கிரேஸை தூக்கி நிறுத்தவில்லை. நடிப்புக்கு சவால் விடும் ரோல்ஸ் அமையவில்லை.

குறையாத கிரேஸ்
ராமயா, நதியா இருவருக்குமே இன்னமும் அள்ள அள்ள குறையாத ஈர்ப்பு அதுதாங்க கிரேஸ் மக்களிடம் இருக்கு. சினிமா உலகம் இருவரையும் நல்ல ஒரு இடத்தில்தான் வைத்து அழகு பார்த்துகிட்டு வருது.

நதியா
நதியா முதன் முறையாக சன் டிவியின் ரோஜா சீரியலில் அவ்வப்போது கெஸ்ட் ரோல் போல வந்து போவாராம். இப்போது அதற்கான ஷூட் நடந்து கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கு. இன்னமும் பெரிய திரையில் கிரேஸ்ஃபுல்லா இருக்கும் நதியாவுக்கு சின்னத்திரை எப்படி இருக்கும்?

ரோஜா சீரியல்
சன் டிவியில் ரோஜா சீரியல் மக்களின் மனம் கவர்ந்த சீரியலாகி ரேட்டிங்கில் நல்ல இடத்தில் உள்ளதாம். அதனால், இரவு நேர பிரைம் நேரத்தையும் இந்த சீரியலுக்கு சன் டிவி ஒதுக்கித் தந்திருக்கிறது. ரோஜா சீரியலின் கதாநாயகி பிரியங்கா நல்ல அழகு. இவருக்காகவும் வீட்டில் சும்மா இருக்கும் ஆண்கள் சீரியல் பார்க்கிறார்கள்.
இப்போது நதியா வேறு வர இருக்காங்க...நேரமும் எல்லாத்துக்கும் சாதகமா ராத்திரி 9 மணிக்குதான்... ம்ம் ரசிகர்கள் காட்டுல கோடை மழை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications