ஆதவன் வந்துட்டாக...ரம்யா பாண்டியன் வந்துட்டாக...நம்ம வனிதாவும் மற்றும் உறவினர்கள்...!
சென்னை: விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு சீசன் 9 களைக்கட்டத் துவங்கி உள்ளது. காரணம் என்ன என்று பார்த்தால் ஜட்ஜஸ் சீட்டில் ஆதவன், மதுரை முத்து, ஈரோடு மகேஷ், ரம்யா பாண்டியன், வனிதா விஜயகுமார் என்று அத்தனை பேரும் உட்கார இருக்கிறார்கள்.
மேற்கண்ட இந்த காம்போ இருந்தால் நிகழ்ச்சி களைக் கட்டும்தானே ... கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் ஆரம்ப காலத்தில் போட்டியாளர்களாக கலக்கியவர் ஈரோடு மகேஷ், ஆதவன், மதுரை முத்து ஆகிய இவர்கள். காலப்போக்கில் அவரவர் வேறு திசையில் பயணித்துக் கொண்டு இருந்தார்கள்.
இந்த நிலையில், மீண்டும் கலக்கப் போவது யாரு சீசன் 9 ஐ மிகப் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க விஜய் டிவி திட்டமிட்டு, இந்த மெகா காம்போவை நடுவர் சீட்டில் அமர வைக்க உள்ளது.

ஆதித்யா ஆதவன்
ஆரம்பத்தில் இருந்தே ஆதவன் சன் நெட்வொர்க் சானல்களுக்கு சென்றுவிட்டார். ஆதித்யா டிவியில் இவர் நடத்திய கொஞ்சம் நடிங்க பாஸ் பலருக்கும் பிடித்த ஒரு காமெடி நிகழ்ச்சி. இதன் மூலம் தன்னை வளர்த்துக்கொண்ட ஆதவன், பிறகான நாட்களில் சன் டிவியில் பெரிய நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறினார்.எந்த ஒரு விழா நிகழ்ச்சியை சன் டிவி நடத்தினாலும் அதைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக ஆதவன்தான் களம் இறக்கப்படுவார்.

மதுரை முத்து காமெடி
மதுரை முத்து சன் டிவியில் கடந்த சில வருடங்களாகவே ஞாயிறு அன்று ஒளிபரப்பாகி வந்த ஒரு காமெடி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார். அதற்குப் பிறகு தினம் இரவில் ஆதவனுடன் சேர்ந்து காமெடி ஜங்க்ஷன் நிகழ்ச்சியை வழங்கி வந்தார்.இப்போதான காலக் கட்டத்தில் அவ்வப்போது சன் டிவிக்கு சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கி வருபவராக இருந்தார். இந்த நிலையில், இப்போது இவரும் விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு காம்போவில் இணைந்து இருக்கார்.

ஈரோடு மகேஷ்
ஈரோடு மகேஷ் அப்போதில் இருந்தே விஜய் டிவியில் செட்டில் ஆகி விட்டார். விஜய் டிவியில் இவர் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார்.அதில் பல வகையான காமெடி நிகழ்ச்சிகளும் அடக்கம். இந்த நிலையில்தான் கலக்கப் போவது யாரு சீசன் 9 இல் இவரும் நடுவராக அந்த மெகா காம்போவில் இணைந்துள்ளார். மூன்று ஆண்கள் இருக்கும் இந்த கூட்டணியில் பெண்கள் இல்லாமல் எப்படி?

வனிதா ரம்யா
விஜய் டிவியில் ரம்யா பாண்டியன் குக்கு வித் கோமாளி சமையல் போட்டியில் கலந்துக்கொண்டு பலரையும் எண்டெர்டெயின் பண்ணி வருகிறார். இவர் இப்போது இந்த ஷோவில் இறுதி போட்டியாளருக்குத் தேர்வாகி உள்ளார். இந்த நிலையில் இவரை விடாமல் பிடித்துக்கொண்டுவிட்ட விஜய் டிவி கலக்கப் போவது யாரு சீசன் 9 க்கு தேர்ந்தெடுத்து உள்ளது. இவரோடு அண்மையில் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான வனிதா விஜயகுமாரும் இணைந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு வரும் ஞாயிறு முதல் பகல் 2 மணிக்கு ஆரம்பமாகி, தொடர்ந்து ஞாயிறு தோறும் ஒளிபரப்பாக உள்ளது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications