கேரவனுக்குள் என்கிட்ட அப்படி நடந்துக்கிட்டாரு.. நடிகை கொடுத்த புகார்! 3 தேசிய விருது வாங்கிய இயக்குநர் கைது
சென்னை: மலையாள சினிமாவில் பல வருடங்களாக பெரிய பெயராக இருந்து வந்த இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன் இப்போது பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஒரு இளம் நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்த சம்பவம் கேரளா முழுக்க பரபரப்பை கிளப்பியுள்ளது.

பெரிய சர்ச்சை
ரஞ்சித் பாலகிருஷ்ணன் சாதாரண இயக்குநர் இல்லை. கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பல முகங்கள் கொண்டவர். மோகன்லால் நடித்த ராவணபிரபு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தார்.
"திரைக்கதா", "இந்தியன் ரூபீ", "ஸ்பிரிட்" போன்ற படங்களுக்கு தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார். மலையாள சினிமாவில் ஒரு முக்கியமான இடம் வைத்திருக்கும் இவர் மீது இப்படி மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டு எழுவது தான் இப்போது அதிகம் பேசப்படுகிறது.
இளம் நடிகையின் புகார்
சமீபத்தில் அவர் இயக்கி வந்த ஒரு புதிய படத்தில் நடித்த இளம் நடிகை ஒருவர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். அவருடைய குற்றச்சாட்டு என்னன்னா, படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது, ரஞ்சித் தன்னை கேரவனுக்குள் அழைத்து தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றார் என்பதுதான்.
இந்த புகாரை அடிப்படையாக கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்திருக்காங்க. பாலியல் தொந்தரவு, சட்டவிரோதமாக அடைத்து வைப்பது, ஆபாச சைகைகள் போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, தொடுபுழா பகுதியில் இருந்த ரஞ்சித்தை போலீசார் கைது செய்து கொச்சிக்கு அழைத்து விசாரணை நடத்தி இருக்காங்க.
இது முதல் முறை அல்ல
இந்த சம்பவம் தான் பெரிய அதிர்ச்சி அளிக்கிறது. ஏன்னா, இது ரஞ்சித்துக்கு முதல் குற்றச்சாட்டு இல்லை. 2009-ல் "பாலேரி மாணிக்கம்" படப்பிடிப்பு சமயத்தில் ஒரு பெங்காலி நடிகை தவறான அணுகுமுறை பற்றி புகார் அளித்திருந்தார். இன்னொரு இளைஞரும் அவர்மீது புகார் கொடுத்ததாக தகவல்கள் வந்திருந்தது.
கேரளாவில் பெரிய சர்ச்சையை கிளப்பிய ஹேமா கமிட்டி அறிக்கையிலும் இவரது பெயர் இடம்பெற்றதாக கூறப்பட்டது.அதாவது, முன்பும் குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், இப்போது மீண்டும் அதே மாதிரியான புகார் எழுந்திருப்பது தான் இந்த விவகாரத்தை இன்னும் பெரிய அளவுக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
திரையுலகில் எழும் கேள்விகள்
இந்த சம்பவம் மலையாள திரையுலகுக்குள்ளேயே பெரிய விவாதத்தை கிளப்பி இருக்கிறது. "பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?", "படப்பிடிப்பு தளங்களில் என்ன நடக்கிறது?", "முன்னாடியே குற்றச்சாட்டு இருந்தவர்களுக்கு எப்படி மீண்டும் வாய்ப்பு கிடைக்கிறது?" இப்படி பல கேள்விகள் இப்போது மீண்டும் எழ ஆரம்பிச்சிருக்கு.
ஒரு பக்கம் பெரிய சாதனைகள், தேசிய விருதுகள்... மற்றொரு பக்கம் தொடர்ந்து எழும் குற்றச்சாட்டுகள்... இந்த இரண்டு விஷயங்களும் சேர்ந்து, ரஞ்சித் பாலகிருஷ்ணன் குறித்து இப்போது மக்கள் மனதில் கலவையான கேள்விகளை உருவாக்கி இருக்கிறது.
இந்த வழக்கு எப்படி திரும்பும், உண்மை என்ன என்பது விசாரணைக்கு பிறகுதான் தெளிவாகும். ஆனாலும், இந்த சம்பவம் மலையாள சினிமாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் பெரிய அளவில் பேச வைக்க ஆரம்பிச்சிருக்கு.












Click it and Unblock the Notifications