Rasaathi Serial: போஸ்டரில் நடிகர் விஜயகுமார் மிஸ்ஸிங்... பெங்காலி நடிகை சப்ஜானி!
சென்னை: சன் டிவியின் ராசாத்தி சீரியலில் ஆரம்பத்தில் நடிகர் விஜயகுமார் நடித்தார். பின்னர் சில எபிசோட்களில் இருந்த இவர், அதற்குப் பிறகான எபிசோட்களில் இல்லை.
அவர் ஜமீன் என்கிற லெவலில் அவரை வைத்து பல உரையாடல்கள், அவர் பெயரில் சில எபிசோட்கள் என்று ஒளிபரப்பாகி வந்தன.
இப்போது ராசாத்தி சீரியல் போஸ்டரில் இருந்த நடிகர் விஜயகுமாரின் படமும் அகற்றப்பட்டு உள்ளது. அதோடு ராசாத்தி கதாபாத்திரத்தில் முன்பு இருந்த நடிகைக்கு பதில் வேறு ஒரு புது நடிகை நடிக்கிறார்.

புது முகம் சப்ஜானி
ராசாத்தி சீரியலில் ராசாத்தியாக இப்போது புதுமுகம் சப்ஜானி நடிக்கிறார். இவர் பெங்காலி நடிகை என்று கூறப்படுகிறது. சன் டிவியின் ஒளிபரப்பு பெங்காலி மொழியிலும் இருப்பதால், மிகச் சுலபமாக பெங்காலி நடிகையை இந்த சீரியலுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். சன் டிவியின் பெங்காலி மொழி ஒளிபரப்பில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

வேற்று மொழி சீரியல்
சன் டிவியின் ஒளிபரப்பில் வேற்று மொழி சீரியல்கள் சூப்பர் ஹிட் என்றால், சன் டிவி அதை மொழி பெயர்த்து ஒளிபரப்புவதில்லை. பதிலுக்கு தமிழுக்கு ஏற்ப கதையில் சிறு மாற்றங்கள் செய்து புதிதாக அதை ஷூட் செய்ய ஸ்லாட் வழங்குவதுதான் சன் டிவியின் பழக்கம். பெங்காலி சீரியலில் நடித்து புகழடைந்த சப்ஜானிதான் ராசாத்தி சீரியலில் இப்போது ராசாத்தியாக நடிக்க வந்துள்ளார்.

அழகு சப்ஜனை
இப்போதெல்லாம் சீரியல்களில் பெரும்பாலும் புதுமுகங்களைத்தான் கதையோடு ஒன்றி பார்க்கிறார்கள் மக்கள். அதோடு, அவர் அழகானவராக ஃபிரஷாக இருக்க வேண்டும் என்பதும் அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இரவு நேரத்தில் அதுவும் மிக முக்கிய ஸ்லாட் என்று பார்க்கப்படும் 9:30 மணி நேர ஸ்லாட்டில் இப்படி அழகான பெண் ஹீரோயினாக நடிக்கும்போது பலரும் விரும்பிப் பார்ப்பார்கள் என்பது சன் டிவியின் கணிப்பு.

ஆரம்பத்தில் விஜயகுமார்
ஆரம்பத்தில் நடிகர் விஜயகுமார் சீரியலுக்கு ரொம்பவும் ஃபிரஷாக இருந்தார். கோயில் திருவிழா, தேரோட்டம் என்று கிராமத்து கதையில் இருக்க வேண்டிய அத்தனை அம்சங்களும் இருந்தன. பின்னர் தேவர் மகன் கதை போல தேரோட்டத்தில் குண்டு வெடித்தது. பின்னர் இரண்டாவது முறையும் தேர்த்திருவிழா நடத்தினார்கள். இதற்குள் கதைப்படி விஜயகுமார் கதாபாத்திரம் இறந்து போனது.

சீரியல் ரேட்டிங்
ராசாத்தி சீரியல் ரேட்டிங் கொஞ்சம் சரியும் வேளையில் ராசாத்தி குழு அதை சரி செய்யும் வகையில், தேவயாணியைக் கொண்டு வந்து, இப்போது கதையின் நாயகியையும் புதுமுகமாக இறக்கி பல மாற்றங்களை செய்து வருகிறது. அத்துடன் ஒளிபரப்பு நேரத்தையும் சரியான ஸ்லாட் டைமை கைப்பற்றி வெற்றியை நோக்கி நடைபோட்டு வருகிறது. சித்தி 2 ஒளிபரப்பு நேரத்துக்காக இன்றைய ஒளிபரப்பு நேரத்தையும் விட்டுக் கொடுத்து, நாளை முதல் 9:30 மணி நேரத்தில் ராசாத்தி சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications