Rasathi Serial: ஏகப்பட்ட ஸ்டார் காஸ்ட்.. எதிர்பார்ப்பில் ராசாத்தி ரேட்டிங்!
சென்னை: சன் டிவியின் ராசாத்தி சீரியலில் ஏகப்பட்ட ஸ்டார் காஸ்ட் என்று இருப்பதால் ரேட்டிங் எதிர்பார்ப்பில் இருக்கிறது ராசாத்தி சீரியல்.
ஆனால், எதிர்பார்த்தபடி கைக்கொடுத்து இருக்கிறதா ரேட்டிங் என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். கதை அனைவருக்கும் பிடித்து இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான். நடிகர் விஜயகுமார் இருக்கிறார் என்று எதிர்பார்ப்பில் பார்த்தவர்கள் இப்போது ஏமாந்துதான் போனார்கள்.

ஃ பிளாஷ் பேக் நட்சத்திரம்
சன் டிவியின் ராசாத்தி சீரியலில் நடிகர் விஜயகுமார் ஃ பிளாஷ்பேக் நட்சத்திரம் ஆகிப் போனதில் பலருக்கும் ஏமாற்றம்தான். அதிலும் நடிகர் செந்தில் வேறு அவ்வப்போதுதான் வந்து போகிறார். அதிலும் அவ்வளவாக சுவாரஸ்யம் இல்லை. இதிலும் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

அத்தனை அழகு
கதாநாயகி ராசாத்தி அத்தனை அழகு, புகழ் வாய்ந்த நட்சத்திரம் இல்லை. இதிலும் சீரியல் ஆர்வலர்களுக்கு ஏமாற்றம்தான். நடிகை விசித்திரா நாயகிக்கு வில்லியாக நடித்துள்ளார். நடிகை சுலக்ஷனா நடித்து இருக்கிறார். இப்படி எல்லாரும் இருக்கிறார்கள் என்கிற அளவுக்குத்தான் ராசாத்தி சீரியல் இருக்கிறது. எல்லாவற்றிலும் இப்படி ஏமாற்றமே இருப்பதால் சீரியல் ஆர்வலர்கள் மத்தியில் ஸ்டார் காஸ்ட் நட்சத்திரங்கள் இருந்தும் எடுபடவில்லை என்கிற பட்சத்தில்தான் நடிகை தேவயானி என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

ராசாத்தி ரேட்டிங்
நடிகை தேவயானி ராசாத்தியை ஜமீன் குடும்பம் சார்பாக பெண் கேட்க வருகிறார். அதற்குள் ராசாத்தியை மயக்கத்தில் எங்கோ கடத்தி கொண்டு செல்கிறார்கள். கதையில் இது ஒரு திருப்பு முனையாக அமைந்து கதைக்கு வலு சேர்க்குமா? தேவயானியின் கதாபாத்திரம் கதைக்கு திருப்பு முனையாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சீரியலை பார்க்கும்
சீரியலை பார்க்கும் ஆர்வத்தைத் தூண்ட உடனடியாக நடிகர் விஜயகுமாரின் ஃபிளாஷ் பேக்கைத் தோண்டி கொடுக்க வேண்டும். என்னதான் நடிகை தேவயானி விசித்திரா சுலக்ஷணா போன்றவர்கள் இருந்தாலும் சீரியல் ஆர்வலர்களை தட்டி எழுப்பும்படியான கதாபாத்திரங்கள் இன்னும் கதையில் வரவில்லை என்றே தோன்றுகிறது. அதுவும் அந்த இரவு நேர 10:00 மணி நேரத்துக்கு!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications