Rasathi Serial: ஏ..ராசாத்தி ரோசாப்பூ.. ரீ என்ட்ரி இப்படியா... நலம் பெறட்டும்!
சென்னை: இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த என்னுயிர்த் தோழன் படத்தில் நடிகர் தென்னரசு அரசியல் வாதியாக நடித்து இருப்பார்.
ஏ..ராசாத்தி ரோசாப்பூ வா வா வான்னு பாடல் பாடி நடிப்பில் அசத்தி இருப்பார். அந்த பாடலின் பெயருக்கு ஏற்ப சன் டிவியின் ராசாத்தி சீரியல் மூலம் சின்னத் திரைக்கு நடிக்க வந்திருக்கார் தென்னரசு.
நடிகை விசித்திரா சிந்தாமணியாக நடிச்சு இருப்பார். இவரது கணவனாக நடிகர் தென்னரசு நடிச்சு இருப்பார்.

சந்தோஷத்தில் தென்னரசு
குருநாதர் தன்னை முதல் படத்தில் நடிக்க வச்ச ராசாத்தி பாடலின் தலைப்பிலேயே சின்னத் திரைக்கு முதன் முதலாக நடிக்க வாய்ப்பு கிடைச்சு இருக்கு என்று மிகவும் சந்தோஷத்தில் இருந்தார் தென்னரசு. ராசாத்தி சீரியலும் பலரால் விரும்பிப் பார்க்கப்பட்டு வருகிறது.

நாட்களில் காணோம்
கடந்த இரண்டு நாட்களில் விசித்திராவுடன் எப்போதும் காட்சிகளில் இருக்கும் நடிகர் தென்னரசு கடந்த இரண்டு நாட்கள் எபிசோட்களில் காணோம். என்னவென்று பார்த்தால் அவரது உடல்நிலை ரொம்பவும் மோசமடைந்து இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாராம்.

ஐசியூ சிகிச்சை
ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் தென்னரசு விரைவில் நலம் பெற்று மீண்டும் ராசாத்தி சீரியலில் முன்பு இருந்த அதே உற்ச்சாகத்துடன் நடிக்க வேண்டும் என்பது படக் குழுவினரின் ஆசை. இவர் சண்டைக்கோழி உள்ளிட்ட பல படங்களில் மிரட்டும் வில்லனாக நடிச்சு இருக்கார்.

ஆசை ஆசையாக
சின்னத் திரையில் முதன் முதலாக நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்று பெருமையாக ஆசை ஆசையுடன் சொல்லி நடிக்க வந்த தென்னரசுவின் உடல் நலம் மிக விரைவில் நலம் பெற வேண்டும் என்று,அவரது குடும்பத்தார் மற்றும் சீரியல் குடும்பத்தாரோடு நாமும் சேர்ந்து பிரார்த்திப்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications