Rasathi serial: வர்றாரு வர்றாரு நம்ம நாட்டாமை வர்றாருங்கோ!
சென்னை: சன் டிவியில் மற்றும் ஒரு புத்தம்புது சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. சீரியல் பெயர் தெரியுமா? ராசாத்தி. ஆனால் விரைவில்னு மட்டும்தான் ப்ரோமோவில் போடுகிறார்கள்.
ஆமா, நாட்டாமைன்னு எதுக்கு சொன்னீங்கன்னு கேட்கறீங்க...சினிமா உலகத்துல நாட்டாமை யாருங்க .நம்ம நடிகர் விஜயகுமார் தானுங்களே. அவர் இந்த சீரியலில் நடிச்சு இருக்கார்.
நடிகை பாவனி, இவர் தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த நடிகை, ஏற்கனவே சன் டிவி சீரியலில் நடித்த அனுபவம் உண்டு..விஜய் டிவியின் சின்ன தம்பி சீரியலில் நந்தினி வேடத்தில் நடித்தவர்.

கம்பீரம் குறையலை
நடிகர் விஜயகுமாருக்கு வயசானாலும் இன்னும் கம்பீரம் குறையலை. சுறுசுறுப்பாக வேகத்துடன் நடிப்பதில் வல்லவர். இவரின் இந்த வேகத்துக்காகவே சினிமாவிலும் சரி, சின்னத் திரையிலும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புக்கள் வந்துக்கொண்டே இருக்கிறது.

போட்டி சேனல்கள்
மற்ற சேனல்கள் சீரியல்களை ரொம்ப எளிமையாக சூட் செய்து, தங்களுக்கான ரசிகர்கள் மட்டும் போதும் என்கிற நிலையில் திருப்தியுடன் இருக்க, என்றுமே சன் டிவி மட்டும் திருப்தி அடைந்து கொண்டதே இல்லை. சன் டிவியை ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் என்று சொல்வார்கள். அது போல, இது இது இப்படித்தான் இருக்க வேண்டும்.அப்போதுதான் ரேட்டிங்கிலும் சரி, பிஸினெஸிலும் சரி நம்பர் ஒன் இடத்தைத் தக்க வச்சுக்க முடியும் என்றே செயல்பட்டு வருகிறது.

சேனல்கள் கட்டாயத்தில்
சேனல்கள் பந்தய குதிரை போல ஓட்டம் எடுக்க வேண்டி உள்ளது என்பதை சன் டிவி புரிந்து, மக்களின் நாடி பிடித்து அதன் படி செயல்பட வேண்டும் என்கிற முடிவில் மட்டுமே உள்ளது. இப்படி முக்கால்வாசி சதவிகித மக்களை தன வசம் கட்டிப்போட்டு வைத்துள்ளது சன் டிவி. மீதம் இருக்கும் சதவிகித மக்கள் சன் டிவி பக்கம் வர வேண்டும் என்பதில் கடுமையான யோசனையில் மட்டுமே சன் டிவி இன்னும் உள்ளது. அதற்கான செயல்பாடுகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து இருந்தாலும், அந்த அளவுக்கு இறங்க சன் டிவி விரும்பவில்லை.

பயணம் வேறு
சன் டிவியைப் பொறுத்தவரை அதன் பயணம் வேறு விதத்தில் இருக்கிறது. எனவே, அந்த பாதையில் பயணித்து மீதி இருக்கும் சதவிகித பார்வையாளர்களையும் இழுத்து விடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறது.
பார்க்கப் போகும்போது சன் டிவியின் முக்கிய பலமே அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மட்டும்தான். அந்த வரிசையில் இப்போது ராசாத்தி சீரியல் சேரப் போகிறது. எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications