Rasaathi Serial: சூ மந்திரகாளி.. அந்த ராசாத்தியை பத்தி விட்டுட்டு.. வந்தாரே புது ராசாத்தி!
சென்னை: சன் டிவியில் ராசாத்தி சீரியலில் நடிகை பாவனி ராசாத்தியாக நடித்து வந்தார். ஆனால், இப்போது ராசாத்தி சீரியலில் இவர் இல்லை.
இவருக்கு பதில் அழகிய நடிகை ஒருவர் ராசாத்தியாக நடிக்க வந்துள்ளார். ஃபிரஷாக இருக்கும் இந்த நடிகை மிக அழகாக இருக்கிறார்.
ராசாத்தி சீரியலில் நடிகைகள் விசித்திரா, சுலக்ஷனா, என்று இருந்தாலும், விஜயகுமார் சீரியலுக்கு மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்பட்டார். பின்னர் நடிகை தேவயானி ஜமீன்தார் வீட்டு அம்மா கேரக்டரில் வந்தார். கெஸ்ட் ரொலோ என்று நினைத்த நிலையில், தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார்.
ராசாத்தியில் பல எபிசோடுகளாக நடக்காம இருந்த ஒரு திருமணத்தை நடத்தி முடிக்க சன் டிவி விசேஷமாக ஞாயிற்று கிழமையை கூட ஒதுக்கித் தந்தது.

விஜயகுமார் எங்கே
விஜயகுமார் ஆரம்பத்தில் சில எபிசோட்களில் வந்தார். பின்னர் அவரை பிரேமில் மாட்டி விட்டார்கள். ராசாத்தி சீரியலில் விஜயகுமார் நடிக்கிறார் என்பது சீரியலுக்கு ஒரு பிளசாகத்தான் இருந்தது. ஆனால், அவரை விரைவில் ஆணியில் மாட்டிவிட்டார்கள் எனும்போது, ஒரு வேளை ஃ பிளாஷ் பேக் இருக்குமோ.. அந்த கதை இன்னும் இண்ட்ரஸ்டிங்காக இருக்குமோ என்கிற ஆவலும் வந்தது.

ஃபிளாஷ் பேக்குக்கு
இப்போது ராசாத்தி எபிசோட் நகர்ந்துக்கொண்டு இருப்பதை பார்த்தால், ஃ பிளாஷ் பேக்குக்கு வேலையே இல்லை என்பது போலத்தான் தோன்றுகிறது. முதல் ஏமாற்றம் விஜயகுமார் இல்லை என்பது. இப்படியே நடிகை பாவனி ராசாத்தியாக நடிக்க, இவர் சீரியலுக்கு அவ்வளவு கெத்தாக இல்லை என்பதுதான் உண்மை.

நடிகை தேவயானி
இதற்கிடையில் நடிகை தேவயானி ராசாத்தி சீரியலுக்கு மெருகூட்ட வந்து இருக்கார். இப்போது ராசாத்தி சீரியலில் ராசாத்தி புதுமுகமாகவும் இருக்க, சீரியலை பார்க்கும் ஆர்வமும் பலருக்கும் வந்து இருக்கிறது. இப்போது டிவி சீரியல்கள் என்றாலே அழகான பெண்கதான் நடிக்கிறார்கள் எனும்போது ராசாத்தி சீரியலும் அந்த ரகத்துக்கு மாறி இருக்கிறது.

நடிகை பாவனி
தெலுங்கு நடிகையான பாவனி ஆரம்பத்தில் சன் டிவியின் இஎம்ஐ சீரியலில் நடித்தார். அந்த சீரியல் பாதியில் நின்று போனது. இதையடுத்து விஜய் டிவிக்கு சென்ற பாவனி, விஜய் டிவியில் அடுத்தடுத்து வாய்ப்புக்களை பெற்று வந்தார். சின்ன தம்பி சீரியலில் பிரஜனுக்கு ஜோடியாக நடித்தார். இப்படி விஜய் டிவியில் செட்டில் ஆன நடிகர் நடிகைகளுக்கு சன் டிவியில் நடிப்பது என்பது அவ்வளவாக கம்ஃபர்டாக இருக்காது என்று பலரும் சொல்வார்கள். இதை உண்மையாக்குவது போலத்தான் பாவனியும் இப்போது விலகி இருக்கிறார் போலும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications