Rasathi Serial: மொத்த கிராமத்துப் படங்களையும்.. மிக்ஸியில் போட்டு கலக்கி எடுத்தால்.. ராசாத்தி!
பிகில் பட ஆடியோ வெளியீட்டில் விஜய் பேசியது பெரும் உற்சாகத்தை தந்துள்ளது
சென்னை: நடிகர் கமல்ஹாசன் கதையில் உருவான படம் தேவர் மகன். இதில் கமல்ஹாசனை விட நடிகர் திலகம்தான் ஸ்டார் காஸ்ட் நடிகர். சிவாஜி இல்லாமல் அடுத்து வரும் காட்சிகளில் கமல்ஹாசன் அத்தனை நெஞ்சங்களையும் நடிப்பில் கொள்ளை கொண்டு விடுவார்.
இதில் தேர்த் திருவிழா காட்சி ஒன்றும், தேரை வடம் பிடித்து இழுப்பது, முதல் மரியாதை, மாலை பரிவட்டம் என்று கமல்ஹாசனுக்கு ஊர்கோயில் மரியாதைகள் அமர்க்களப்படும்.
அதே மாதிரியான படத்தை மறுபடியும் எப்ப பார்க்க முடியுமோ என்று அங்கலாய்க்கிறீர்களா.. தயவு செய்து ராசாத்தி சீரியலைப் பாருங்க.. டிட்டோ காப்பி அடித்துக் கொண்டுள்ளனர். சன் டிவியின் ராசாத்தி சீரியலில் நேற்று இரவு 9 மணி முதல் ராசாத்தி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இப்போதைக்கு உயிரோடு
கதை சிம்பிள்ங்க.. ராசாத்தி சீரியலில் நடிகர் விஜயகுமார் வீட்டுக்கு பெரியவர். இவருக்கு (வழக்கம் போல) இரண்டு மனைவிகள், முதல் மனைவியின் மகள் ராசாத்திக்குத்தான் தனக்குப் பிறகு கோயில் திருவிழாவில் பரிவட்டம் என்று எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார். பார்க்கப் போனால், விஜயகுமாருக்கு ஃபிளாஷ்பேக் காட்சிகள் வைப்பார்கள் போலும். கதையில் மனிதர் இப்போது போட்டோவில்தான் இருக்கார்.

முதன் முறையாக
நகைச்சுவை நடிகர் செந்தில் முதன் முறையாக சின்னத் திரைக்கு வந்திருக்கார். இந்த சீரியலில் விஜயகுமாரின் தம்பியாக நடிக்கிறார். ராசாத்தி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை பாவனி நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ஈஎம்ஐ போன்ற சன் டிவி சீரியல்களிலும், விஜய் டிவியின் சின்ன தம்பி சீரியல் போன்றவைகளிலும் நடித்தவர்.

பரிவட்டம் ராசாத்தி
ராசாத்திதான் விஜயகுமாரின் முதல் பொண்டாட்டிக்கு பிறந்த பெண் என்பதால், அவருக்குத்தான் இப்போது முதல் மரியாதை, பரிவட்டம், பின்னர் தேர் வடம் பிடித்து இழுப்பது என்று நடக்கிறது. இவர்களுக்கு எதிராக விஜயகுமாரின் இரண்டாவது மனைவியின் குடும்பம் இருக்கிறது. தங்களுக்கு மரியாதையை கொடுக்கவில்லை என்று.

மாசறு பொன்னே வருக
தேவர் மகன் படத்தில் வருவது போல, மாசறு பொன்னே வருக என்று அம்மன் தேரில் உட்கார்ந்து, சம்பிரதாயங்கள் முடிந்த பின்னர் வடத்தை பிடித்து இழுக்கையில், குண்டு வெடிக்கிறது. இந்த குண்டை இயக்க செய்வது நடிகை விசித்ரா. விசித்திரா விஜயகுமாரின் இரண்டாவது மனைவியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்படிப்போகுது கதை.
பிறகு இன்னொரு கொசுறுத் தகவல்..ராசாத்தி சீரியலில் போகப் போக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜு முருகன் என பட்டையைக் கிளப்பிய கிராமத்துப் படங்களிலிருந்து காட்சிகள் சுடப்பட்டு சேர்க்கப்படக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளதாக தெரிகிறது.. !
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications