Rasathi Serial: விழாக்காலம்.. கொண்டாட்டம்.. கோலாகலம்.. செம ஜாலி ராசாத்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயில் மாலை மரியாதை, பரிவட்டம் இதெல்லாம் காலம் காலமாக ஆண்களுக்கு உரித்தானது. வயசு பெண்களுக்கு பரிவட்டம் என்பது அரிதினும் அரிது.

பெண்ணுக்கு பரிவட்டம் என்பதை மையமாக வைத்து கதையைது துவக்கி இருக்கிறார் இயக்குநர் ராஜ்கபூர். சின்னத் திரையில் முதன் முதலில் பிரமாண்டத்தை கொண்டு வந்தவர் இவர் என்று சொல்லலாம்.

சன் டிவியின் ரன் சீரியலில் வில்லனாக நடிக்கிறார். அதே சமயம் சன் டிவியில் ராசாத்தி என்கிற சீரியலை இயக்கியும் வருகிறார்.

நாட்டாமை ராசாத்தி

நாட்டாமை ராசாத்தி

ராசாத்தியில் பெரிய ஸ்டார் காஸ்ட் குழுவே இருக்கிறது. முதலில் நடிகர் விஜயகுமார்.இவர் எந்த வேடத்துக்கும் பொருத்தமாக இருப்பார். இதை விட நாட்டாமை என்றால் விஜயகுமார்தான் கண்முன் நிற்பார். இந்த சீரியலில் இவருக்கு நாட்டாமை கதாபாத்திரம் போலத்தான். ராசாத்தி இவரது மகள்.

நடிகை பாவனி

நடிகை பாவனி

ராசாத்தி கதாபாத்திரத்தில் நடிகை பாவனி நடிக்கிறார். இவர் தெலுங்கு சீரியல் நடிகையாக பிரபலம் என்பதால், இவரை சன் டிவி, விஜய் டிவி சேனல்கள் விட்டு வைக்காமல் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தவிர நடிகைகள் சுலக்ஷனா, விசித்திரா முக்கியமாக நடிகர் செந்தில் என்று சீரியல் ஸ்டார் காஸ்ட்டில் ஜொலிக்கிறது.

குண்டு வெடிப்பு தேர்த்திருவிழா

குண்டு வெடிப்பு தேர்த்திருவிழா

முதலில் தேர்த் திருவிழா நடத்தி அது தேவர் மகன் படத்தில் வருவது போல, குண்டு வெடித்து சோகமாகிப் போனது. இப்போது அடுத்து ராசாத்திக்காக தேர்த்திருவிழா என்று பஞ்சாயத்து நடந்து மறுபடியும் திருவிழா கோலாகலம் என்று சீரியல் ஆரம்பித்து இருக்கிறது.

மஞ்சள் தண்ணீர்

மஞ்சள் தண்ணீர்

கொடி மரம் நடுதல், காப்பு கட்டுதல், விளையாட்டு போட்டிகள்..முக்கியமாக கபடி விளையாட்டு, மஞ்சள் தண்ணீரை முறை பெண்கள், முறை மாமன்கள் மீது ஊற்றி விளையாடுவது என்று ஆரம்பித்து சீரியல் கொண்டாட்டமாக சென்று கொண்டு இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+