Rasaathi Serial: லட்சுமி ஸ்டோர்ஸை இழுத்து மூடுங்கடா.. ராசாத்தியை தூக்கி அங்க வைங்கடா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் நடிகை குஷ்பூ தயாரிப்பு நிறுவனத்தின் லட்சுமி ஸ்டோர்ஸ். இது திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.

இப்போது இரவு நேரத்தில் புதிதாக சித்தி 2 சீரியல் சன் டிவிக்கு சேர்ந்துள்ள நேரத்தில் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கடந்த சனி அன்று ஒரு ப்ரோமோவும், அறிவிப்பும் இல்லாமல் எண்டு போட்டுவிட்டார்கள்.

மாலை நேர சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும்போது ஸ்லைடில் இன்று லட்சுமி ஸ்டோர்ஸ் இறுதி எபிசோட் என்று காண்பித்து வந்தார்கள், அப்போதுதான் இன்று இரவு எபிஸோடோடு லட்சுமி ஸ்டோர்ஸ் முடிவடைகிறது என்று தெரிய வந்தது.

லட்சுமி ஸ்டோர்ஸ்

லட்சுமி ஸ்டோர்ஸ்

லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் ஆரம்பித்து ஒரு வருடத்துக்கு கம்மியாகத்தான் இருக்கும்.. அதற்குள் சீரியல் முடிவடைந்து விட்டது. இரவு 9:30 மணி நேரத்துக்கு ஒளிபரப்பான சந்திரகுமாரி சீரியலுக்கு மாலை 6:30 மணி நேரத்தை ஒதுக்கித் தந்த சன் டிவி, லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலுக்கு 9:30 மணி நேர ஸ்லாட்டை தந்தது. இவ்வளவு சீக்கிரத்தில் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் முடிந்து இருக்கிறது.

சித்தி 2 சீரியல்

சித்தி 2 சீரியல்

இப்போது சன் டிவியின் இரவு நேர சீரியல் வரிசையில் சித்தி 2 சேர்ந்துள்ளதால், ராசாத்தி ஒளிபரப்பாகி வரும் இரவு 9 மணி நேரத்தை சித்தி 2 சீரியலுக்கு சன் டிவி ஒதுக்கித் தந்துள்ளது. லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலுக்கு எண்டு கார்டு போடப்பட்டதால், ராசாத்தி சீரியலுக்கு இரவு 9:30 மணி நேரத்தை ஒதுக்கித் தந்து இருக்கிறது சன் டிவி. இன்று அந்த நேரத்தில் சித்தி 2 சீரியல் ஒரு மணிநேரமாக சேர்த்து ஒளிபரப்பாக உள்ளது.

ராசாத்தி நாளை

ராசாத்தி நாளை

நாளை முதல் ராசாத்தி சீரியல் இரவு 9:30 மணி நேரத்துக்கு ஒளிபரப்பாகும் என்று இன்று சன் டிவி ப்ரோமோ வெளியிட்டு அறிவித்து வருகிறது. ராசாத்தி சீரியலில் ஒரு கல்யாணம் இழுபறியாக இருந்த நிலையில், இந்த கல்யாணத்தை நடத்தி முடிக்க என்றும், ராசாத்தி சீரியலுக்கு நல்ல ரேட்டிங் தக்க வைத்துக்கொள்வதற்கும் சன் டிவி ஞாயிற்று கிழமை இரவு கூட ஒரு மணி நேரத்தை ஸ்பெஷலாக ஒதுக்கித் தந்தது.

நந்தினி 2 சீரியல்

நந்தினி 2 சீரியல்

சுந்தர் சி, குஷ்பூ நிறுவனத்தின் லட்சுமி ஸ்டோர்ஸ் விரைவில் முடிவடைந்து இருப்பதை பார்த்தால், அந்த நிறுவனம் நந்தினி 2 சீரியலுக்குத் தயாராகி வருகிறது என்றே தோன்றுகிறது. நந்தினி முதல் சீசன் மிக பிரமாண்டமாக இருந்த நிலையில், அதே போல நந்தினி 2 சீரியலையும் தாயாரிக்க முடிவெடுத்து அதற்கான வேலைகளில் சுந்தர்சி நிறுவனம் இறங்கி இருக்கும் என்றே தோன்றுகிறது.ஆனால், இந்த சிரியலுக்கான நேரத்தை சன் டிவி எப்படி ஒதுக்கித்த தருகிறது என்று பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+