நான் இனியும் பேபி இல்லப்பா.. 17வது வயதை தூக்கி காட்டி ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய ரவீனா!
சென்னை: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி சீரியல்களில் தற்போது ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தை பெற்றிருக்கும் ரவீனாவுக்கு 17 வயதாகி விட்டது.
நம்பவே முடியலை.. இப்பத்தான் அவரை சின்னப் பாப்பாவா சினிமாக்களில் பார்த்தோம்.. இதோ.. 17 வயதை தொட்டு விட்டார் ரவீனா. தற்போது பிறந்தநாள் கொண்டாட்டத்தை விமர்சனமாக கொண்டாடி அவருடைய போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
எனக்கு 17 வயதாகி விட்டது என்று கூறும் வகையில், 17ம் எண்ணை தூக்கிக் காட்டி சந்தோஷப்பட்டுள்ளார் ரவீனா. அவருடைய பிறந்த நாள் கிராண்ட் ஆக கொண்டாடப்பட்டதில் ரவீனாவுக்கு ரொம்ப மகிழ்ச்சியாம்.

சீரியல் கலக்கல்
விஜய் படமாக இருந்தாலும் சரி யார் படமாக இருந்தாலும் சரி அதில் நடிப்பெல்லாம் எங்களுக்கு அசால்ட்டு என்று முதல் படத்திலேயே ஜில்லாவில் விஜய்யுடன் கலக்கி அதன்பிறகு ராட்சசன் ,புலி போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருந்த இவர். தற்போது சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இன்ஸ்டா ராணி
ரவீனா சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் இன்ஸ்டாகிராமில் இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பலர் இவரை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சிவகார்த்திகேயன் சொல்லும் டயலாக்கான ஸ்கூல் ட்ரெஸ்ஸில் பார்த்துக்கொண்டு இருந்தது வரைக்கும் நீ சின்ன பிள்ளையா நினைச்சிருந்தேன். ஆனா என்னைக்கு சேலையில் பார்த்தேனோ அன்னைக்கு தான் நான் மொத்தமாய் விழுந்துட்டேன் என்று அவர் கூறும் டயலாக்கை இவரைப் பார்த்து பலரும் கூறி வருகிறார்கள்.

நல்லா வளர்ந்துட்டேன்
இவரும் ஆமாங்க நான் சின்ன பிள்ளை இல்லை. வளர்ந்த குழந்தை. எனக்கு 17 வயசு ஆகி விட்டது என்று பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அவருடைய போட்டோக்களை பார்த்ததும் பல ரசிகர்கள் வச்சக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். எப்பவும் கருப்பு உடையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் இவர் இந்த போட்டோக்களில் சிவப்பு நிற உடையில் தேவதையாக மின்னிக் கொண்டிருக்கிறாராம்.

புன்னகை இளவரசி
கைநிறைய வளையல் தோடு, முகமெல்லாம் புன்னகையோடு இவர் விதவிதமாக எடுத்திருக்கும் புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அந்தப் புகைப்படத்திற்கு அவரே கேப்ஷன் போட்டு இருக்கிறார். அதில் 17 வயதிற்குள் நுழைவது ஒரு சந்தோஷமாக இருக்கிறது. இதை அப்படியே ஒரு போட்டோ சூட்டாக எடுத்தாச்சு.

செம கொண்டாட்டம்
இவ்வளவு அருமையான பிறந்தநாள் கொண்டாட்டமாக நான் இதுவரைக்கும் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை தேங்க்ஸ் துர்கா சிஸ்டர் மற்றும் பாலா அண்ணா இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆச்சரியமான கொண்டாட்டமாக எனக்கு தந்ததற்கு என்று கூறியிருக்கிறார் .அது மட்டுமல்லாமல் அழகான அலங்காரங்களும் அழகான கேக்கும் ரொம்பவே நன்றி என்று முக மலர்ச்சியுடன் சொல்லியுள்ளார் ரவீனா.

ரசிகர்களும் ஹேப்பிதான்
எனக்கு இவ்வளவு ஒரு அழகான நினைவு பரிசாக தந்த மற்றும் நீங்கள் திட்டமிட்டு செய்ததற்கு நன்றி என்று நன்றி மழையை பொழிந்து கொண்டிருக்கிறார். இவர் அனைவருக்கும் நன்றி மழையை பொழிந்து கொண்டிருப்பது போது அவருடைய ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து மழை பொழிகிறார்கள். அதுவும் அவருடைய பிறந்த நாள் கேக்கில் இவருடைய அழகான புகைப்படத்தை வைத்து இவர் கேக் கட் பண்ணுவதை பார்த்து ரசிகர்கள் உச்சு கொட்டி ரசித்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications