ஏய் பொன்ஸ்.. ஆஹா.. அய்யா இன்னொருக்கா ப்ளீஸ்.. மிதக்க ஆரம்பிச்சுட்டாளே பொன்னம்மா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் மகாலட்சுமியின் கணவர், மினிஸ்டர் சகுந்தலாதேவியிடம் லீகல் அட்வைஸரா இருக்கார்.

சகுந்தலா தேவிதான் நஷ்டத்துக்கு காரணம்னு மகாலட்சுமி சொல்லியும், புருஷன் சகுந்தலாதேவி ரொம்ப நல்லவங்க. இது அவங்க எதிர்கட்சிகாரங்க செய்யற சதின்னு சொல்றார்.

நம்ம பொண்ணை கடத்தினது, என்னை யாரோ கொலை செய்ய முயற்சித்து ஆக்சிடென்ட் பண்ணினது.. கடைசியா கடைக்கு நஷ்டம் ஏற்பட்ட செய்தது எல்லாமே சகுந்தலா தேவிதான்னு மகா சொல்லியும் புருஷன் நம்பலை. பதிலுக்கு ரெண்டு பேருக்கும் சண்டை.

காமெடி

காமெடி

இந்த சீரியலில் வேலைக்காரி பொன்னம்மாவா நடிச்சிருக்கறவங்களுக்கு நகைச்சுவை கைவந்த கலையா இருக்கு. இவங்க முனியாண்டி குடும்பம், கடைக்குட்டி சிங்கம் படங்களில் பாசமிகு அக்காவா நடிச்சவங்க.

பவுடர் மாத்திரை

பவுடர் மாத்திரை

பாக்கியலட்சுமியை கொல்ல ரவியின் சின்ன அண்ணி டாக்டர் உமா, மாத்திரை நுணுக்கி பவுடர் போல வச்சிருக்காங்க.அவங்களுக்கு காபி குடுக்க வந்த பொன்னம்மா, இது என்னம்மான்னு கேட்க, அது பவுடர்..நீ போன்னு சொல்லிட்டு பாத்ரூமுக்கு கை கழுவ போறாங்க.

வெள்ளையா இருக்கா

வெள்ளையா இருக்கா

இந்த டாக்டரு பாப்பா இதெல்லாம் பூசிக்கிட்டுத்தான் இவ்ளோ வெள்ளையா இருக்கா.. நமக்கும் கொஞ்சம் குடுத்தா என்னவாம்.. இப்போ இதை பூசி நானும் கலரா ஆகி என் ஓடிப்போன காதலர் மாமனை வரவழைக்க போறேன்னு சொல்லிட்டு, முகம் நிறைய பவுடரை அப்பிக்கறா

பாக்கியலட்சுமிக்கு

பாக்கியலட்சுமிக்கு

வெளியில வந்து பார்த்த உமா, பொன்னம்மா உன்னை ஒண்ணும் செய்யக் கூடாதுன்னு சொல்லிட்டுத்தானே போனேன்..எதுக்கு உனக்கு இந்த வேலைன்னு கேட்கறாங்க. இல்லைம்மா இந்த பவுடரை பூசிக்கிட்டுத்தான் நீங்க இம்புட்டு வெள்ளையா இருக்கீங்க.. நானும் அதுமாதிரி ஆகலாம்னுதான்னு சொல்ல..முதல்ல நீ போன்னு சொல்லி துரத்தி விடறாங்க உமா. அடுத்து இன்னொரு மாத்திரையை பாக்கியலட்சுமிக்கு கொடுக்க நுணுக்கறாங்க.

 நீங்க அவ்ளோ அழகு

நீங்க அவ்ளோ அழகு

அதே முகத்தோடு, பாக்கியலட்சுமிகிட்ட போறா பொன்னம்மா. அக்கா என்னக்கா இது.. முகத்துல இவ்ளோ பவுடரையா போடுவீங்கன்னு கேட்டு துடைச்சுவிடப் போறா.பவுடர் பூசினா அந்த டாக்டரம்மா மாதிரி வெள்ளையாகலாம்னுதான் பாப்பான்னு சொல்ல, யார் சொன்னா நீங்க அழகா இல்லைன்னு. பவுடர் பூசலேன்னாலும் நீங்க அவ்ளோ அழகு அக்கான்னு சொல்றா பாக்கியலட்சுமி.

ஜூஸ்

ஜூஸ்

அக்கா... காய்கறி வாங்கிட்டு வந்துட்டேன்.. வெயில் பயங்கரமா இருக்கு.. பழம் வாங்கிட்டு வந்திருக்கேன்.. எல்லாருக்கும் ஜூஸ் போட்டுத் தரேன்க்கான்னு சொல்றா. நீ களைச்சு போயி இருப்ப பாப்பா.. நீ உட்களாரு நான் எல்லாருக்கும் ஜூஸ் போட்டுத் தரேன்னு சொல்றா.

ஜூஸ்

ஜூஸ்

ஜூஸ் போடற இடத்துல உமா வந்து, நான் போடறேன்.. நீ வேற வேலை இருந்தா பாருன்னு சொல்றாங்க. நிஜமாவா டாக்டரம்மா...ஆச்சரியமா இருக்கு. சரி.. மாடியில மாவு காய போட்டு இருக்கேன். எடுத்துட்டு வந்துடறேன்.. நீங்க போட்டு வைங்க டாக்டர் பாப்பான்னு பொன்னம்மா போயிடறா.

ஜர்க்

ஜர்க்

தர்பூசணி பழத்தை வெட்ட தெரியாம வெட்டி, அது நழுவி தரையில் விழுந்து கடக்க...அதில் கால் வச்சுடறா. பொன்னம்மா. தட்டில் மாவு வேற. அந்த பழம் சறுக்கிக்கிட்டே உமாகிட்ட வந்து, உமா தலையில மாவைக் கொட்டிட்டு, வடிவேலு மாதிரி ஒரு ஜர்க் விட்டு நிக்கறா பொன்னமாமா.

நீ போ பொன்ஸ்..

நீ போ பொன்ஸ்..

பார்த்தா டாக்டர் பாப்பாவை அடையாளம் தெரியலை. எல்லாரும் சிரிக்கறாங்க. அவமானத்துல திட்டிட்டு போயிடறாங்க. அப்போ அங்க வந்த ரவி பொன்ஸ்.. நீ போ.. நான் ஜூஸ் போடறேன்னு சொல்றான். ஒரு செகண்ட் வேற உலகத்துக்கு போயிட்து வந்த பொன்னமாமா. எப்படி ஐயா கூப்டீங்க..பொன்ஸ்னு கூப்பிட்டேன்.

பொன்ஸ்னு

பொன்ஸ்னு

ஐயோ என் காதலர் கூட அப்படித்தான் கூப்பிடுவார்.. இன்னொருக்கா கூப்பிடுங்க ஐயான்னு சொல்ல, பொன்ஸ்னு சொல்றான் ரவி. ப்ளீஸ் இன்னொருக்கான்னு சொல்ற பொன்னமா காதலர் கவனவுல மிதக்க ஆரம்பிக்கறா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+