ஆண்பாவமும் பொல்லாதது.. ரவி மோகன் நிலைமையை பார்த்தால் கல் நெஞ்சும் கரையும்! பிரபலம் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரவி மோகனின் தனிப்பட்ட வாழ்க்கையை சுற்றிய சர்ச்சைகள் மீண்டும் தீவிரமாக பேசப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக அவரது திருமண வாழ்க்கை பிரச்சனை, விவாகரத்து விவகாரம், குழந்தைகள் தொடர்பான எமோஷனல் போராட்டம், பின்னணி பாடகி கெனிஷாவுடன் இருந்த நெருக்கம் என தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து ரவி மோகன் உணர்ச்சிவசப்பட்டு பேசியது இந்த விவகாரத்தை மீண்டும் பரபரப்பாக்கியுள்ளது.

Ravi Mohan Aarthi Ravi Kenishaa Cheyyaru Balu Tamil Cinema

ரவி மோகனின் மாற்றம்

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் குடும்ப ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஹீரோவாக இருந்த ரவி மோகன், ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்பிரமணியம், உனக்கும் எனக்கும், சம்திங் சம்திங் போன்ற பல வெற்றி படங்களில் நடித்தவர். எப்போதும் சிரித்த முகத்துடன், ஜாலியான இமேஜில் காணப்பட்ட அவர், தற்போது முற்றிலும் வேறொரு மனநிலையில் இருப்பது ரசிகர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ரவி மோகன் விவாகரத்து

சில ஆண்டுகளுக்கு முன்பு தனது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மனைவி ஆர்த்தியிடமிருந்து பிரிய முடிவு செய்திருப்பதாக ரவி மோகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்பிறகு இருவருக்கும் இடையே குற்றச்சாட்டு, பதில் குற்றச்சாட்டு என பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது. ஆர்த்தி ரவி மற்றும் அவரது அம்மா சுஜாதா தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும், ரவி மோகன் தரப்பில் முன்வைக்கப்பட்ட பதில்களுக்கும் இடையே இந்த விவகாரம் நீண்டுகொண்டே வருகிறது.

இதற்கிடையில் பின்னணி பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனின் நெருக்கம் அதிகம் பேசப்பட்டது. பொதுநிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டதும், சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகளும் பல கேள்விகளை எழுப்பின. சமீபத்தில் அந்த உறவும் முறிந்துவிட்டதாக கெனிஷா அறிவித்திருந்தார். இதற்கிடையில்தான் செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன், எமோஷனலாக பேசியது கவனத்தை ஈர்த்தது.

"நான் கிட்டத்தட்ட அடிமை போல வாழ்ந்தேன்", "கெனிஷா என் வாழ்க்கைக்கு வந்த பிறகுதான் கொஞ்சம் நிம்மதி கிடைத்தது", "என் குழந்தைகளை பார்க்க கூட முடியவில்லை", "அவர்களின் படிப்பு செலவுகளை நான்தான் பார்க்கிறேன்" என்று அவர் கூறிய தகவல்கள் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தின. இதுவரை ரவி மோகனை இப்படிப் பார்த்ததில்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.

செய்யாறு பாலு விளக்கம்

இந்த சூழ்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலுவின் கருத்துகளும் விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், " ரவி மோகன் ஸ்டூடியோ என்ற ஒன்றை ரவி ஆரம்பித்தார். ஆனால் ஆரம்பத்தில் தங்குவதற்கே இடமில்லை, காரை பிடுங்கிவிட்டார்கள் என்று சொன்னவருக்கு ஏது இவ்வளவு பணம் என்று தோன்றியது. வெளிநாட்டிலிருந்து பெரிய பணக்காரர் ஒருவர் இன்வெஸ்ட் செய்திருப்பதாகவும்; அரசியல் புள்ளியின் மருமகன் ஒருவர் இன்வெஸ்ட் செய்திருப்பதாகவும் தகவல்கள் வந்தன.

யோகிபாபுவை வைத்துகூட ஒரு படத்தை ஆரம்பித்தார்கள். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் இப்போது திடீரென ஒரு ப்ரஸ் மீட் வைத்திருக்கிறார். அதில் அவர் இருந்ததை இதற்கு முன்பு இப்படி பார்த்ததே இல்லை. ரவி சினிமா பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து இன்டஸ்ட்ரிக்கு வந்தாலும் அதை தக்க வைக்க திறமை வேண்டும்.

இந்த இடம் எவ்வளவு முக்கியமான இடம் என்று அவருக்கும் தெரியும். என்னை தொடர்ந்து டார்கெட் செய்கிறீர்கள் என்கிறார். நான் யாருடன் இருந்தால் என்ன பிரச்னை என கேட்கிறார். அவர் மூன்று எழுத்து இட்லி நடிகையை குறிப்பிட்டிருக்கிறார். அந்த மூன்று எழுத்து இட்லி நடிகை ரவி - ஆர்த்தி திருமணத்துக்கு மையமாக இருந்தவர்.

Ravi Mohan: கெனிஷா எனக்கு நல்ல தோழி.. அவங்களையும் விரட்டிட்டாங்க! என் பசங்க தான் உலகம்! கதறி அழுத ரவி மோகன்
ரவி கதறி அழுததை பார்த்து எனது மனம் கஷ்டப்பட்டுவிட்டது. ஆர்த்தி தரப்பும், ரவி தரப்பும் மாற்றி மாற்றி குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட அடிமையாக இருந்தேன் என ரவி கூறுகிறார். மகன்களிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும். ஒரு மகனை லண்டனுக்கும், ஒரு மகனை மும்பைக்கும் அனுப்பிட வேண்டும் என்றும் கெனிஷா ரவியிடம் கூறியதாக வெளியே பேசிக்கொள்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டதாம். யாருமே குழந்தைகளை விட்டுக்கொடுக்கமாட்டார்கள்.

கெனிஷா போய்விட்டதால் ரவி மோகன் வெறிப்பிடித்த மனிதர் போல் ஆகிவிட்டார் என்று இன்னொரு தரப்பு சொல்கிறார்கள். பெண் பாவம் மட்டுமில்லை. ஆண் பாவமும் பொல்லாதது. பொதுவாக பெண் மனது தைரியமாக இருக்கும். ஆணின் மனது அப்படி இல்லை. ரவி மோகன் கதறி அழுத வீடியோவை பார்க்கையில் கல் நெஞ்சம்கூட கரையும்படித்தான் இருக்கிறது" என்று செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+