Ravi Mohan: கெனிஷா எனக்கு நல்ல தோழி.. அவங்களையும் விரட்டிட்டாங்க! என் பசங்க தான் உலகம்! கதறி அழுத ரவி மோகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரவி மோகனின் குடும்ப பிரச்சனை நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை எடுத்து வருகிறது. மனைவி ஆர்த்தி ரவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பாடகி கெனிஷாவுடன் அவரின் நட்பு தொடர்பு சமூக வலைதளங்களில் கடுமையான விவாதத்தை கிளப்பியது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன் கண்கலங்க பேசி இருக்கிறார்.

ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தி ரவியை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிறகு, கெனிஷாவுடன் பல பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இதன் தொடர்ச்சியாக கெனிஷா தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளித்து, பின்னர் ரவி மோகனிடமிருந்தும் சென்னையிலிருந்தும் விலகிச் செல்கிறேன் என்று அறிவித்ததும் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்தது.

Ravi Mohan Kenishaa Francis Aarti Ravi Tamil Cinema

ரவி மோகன் பேட்டி

இந்த சூழ்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன், இதுவரை வெளிப்படையாக பேசாமல் இருந்த பல விஷயங்களை எமோஷனலாக பகிர்ந்துள்ளார். குறிப்பாக கெனிஷா தொடர்பாக எழுந்த விமர்சனங்களைப் பற்றி பேசும்போது, "என்னை சரியாக புரிந்து கொண்ட ஒரே மனிதர் அவர். நான் ஏன் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வர வேண்டிய நிலைக்கு வந்தேன் என்பதை புரிந்து கொண்டு எனக்கு மனிதநேயமாக அன்பு கொடுத்தார். ஆனால் அந்த உறவையே இப்போது கேவலமாக சித்தரித்து, அவரை சென்னையை விட்டு கிளம்பும் நிலைக்கு தள்ளிவிட்டார்கள்.

கெனிஷா பற்றி ரவி மோகன் விளக்கம்

கெனிஷாவை முழுமையாக காலி செய்து அனுப்பிவிட்டார்கள். சாதுவாக இருந்த என்னை சிலர் தொடர்ந்து சீண்டிக் கொண்டே இருக்கிறார்கள். இது நல்லதுக்கு இல்லை," என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

தொடர்ந்து தனது மீது எழும் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய அவர், "எனக்கு 45 வயது ஆகிறது. நான் இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. இந்த வயதில் ஒரு பெண்ணின் அழகைப் பார்த்து பின்னால் போகும் மனநிலை எனக்கு இருக்குமா? அப்படி இருந்தால் அழகான நடிகைகளுடன் தினமும் நடிப்பதே என் வேலை. அப்போதெல்லாம் போகாதவன் இப்போது போகிறேன் என்று பேசுவதை நான் எவ்வளவோ நாள் பொறுத்துக் கொண்டேன்.

ரவி மோகன் எச்சரிக்கை

என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தேன். ஆனால் இனிமேல் அந்த அமைதி இருக்காது," என்று கடுமையாக தெரிவித்தார். அதோடு தனது குழந்தைகள் குறித்து பேசும்போது ரவி மோகன் முற்றிலும் உடைந்து போனார்.

"என்னுடைய பசங்களைக் கூட நான் பார்க்க முடியாத நிலை. போனில் பேச கூட விடவில்லை. அவர்களை பார்க்க வேண்டுமென்றால் ஸ்கூலுக்கு போகணும். அங்கேயும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து என்னை தடுக்கிறார்கள். இதனால் என் குழந்தைகளிடம் நெருங்க கூட முடியவில்லை. எனக்கு உலகமே என் பசங்கதான்.

என் சின்ன பையனுடன் தினமும் விளையாடுவேன். அவனுடன் விளையாடும்போது அவன் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக நான் தோற்றுப் போய்க் கொண்டே இருப்பேன். அந்த தருணங்கள்தான் எனக்கு வாழ்க்கை," என்று கண்கலங்கினார்.

Ravi Mohan Kenishaa Francis Aarti Ravi Tamil Cinema

மகன் மகள் மேல் பாசம்

மேலும், "என் இரண்டு பசங்களுக்காக 50 லட்சம் ரூபாய் கட்டணம் கட்டி படிக்க வைக்கிறேன். அது எதற்காக என்னுடைய பசங்களுக்கு நல்ல வாழ்க்கை கொடுக்க வேண்டும் அவர்கள் நல்லபடியாக வரவேண்டும் என்பதற்காகத்தானே? இதையெல்லாம் நான் என் பசங்கள்மேல் பாசம் இல்லாமல் செய்கிறேனா? நான் என்னுடைய குடும்பத்திற்காக எவ்வளவோ செய்திருக்கிறேன். ஆனால் இன்று நான் ஒரு மோசமான அப்பா போல சித்தரிக்கப்படுகிறேன்," என்று வேதனையுடன் கூறினார்.

தனது திருமண வாழ்க்கை குறித்தும் திறந்த மனதுடன் பேசிய ரவி மோகன், "நான் முன்னாள் வாழ்க்கையிலேயே இருந்தபோது கூட என்னுடைய அருமை புரியவில்லை. அந்த வாழ்க்கையில் என்னால் தொடர முடியாது என்று உணர்ந்ததால்தான் வெளியே வந்தேன். அந்த முடிவு எளிதானது இல்லை. ஆனாலும் இன்று கூட என்னை தொடர்ந்து தொந்தரவு செய்கிறார்கள். ஏன் இவ்வளவு டார்ச்சர் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை," என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

ரவி மோகனின் இந்த உணர்ச்சிபூர்வமான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை அமைதியாக இருந்த அவர் தற்போது தன்னுடைய தரப்பை முழுமையாக வெளிப்படையாக சொல்லத் தொடங்கியிருப்பது இந்த குடும்ப சர்ச்சையில் இன்னும் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர் தரப்பிலிருந்து என்ன பதில் வருகிறது என்பதையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+