காவலரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி.. சுட்டுப்பிடித்த சென்னை போலீஸ்.. திடீர் பரபரப்பு
சென்னை: சென்னை அருகே திருமுடிவாக்கம் பகுதியில் பிரபல ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். அந்த ரவுடி தலைமை காவலரை தாக்கிவிட்டு, தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பதை தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அப்போது சில நேரங்களில் காவலர்களையே ரவுடிகள் தாக்கும்போது, அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

சென்னை அருகே திருமுடிவாக்கம் பகுதியில் ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். தலைமை காவலரை தாக்கிவிட்டு, தப்பி ஓட முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். போலீசார் சுட்டதில் படுகாயம் அடைந்த ரவுடி தமிழழகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதாவது வழக்கு ஒன்றில் ஆயுதங்களை கைப்பற்ற அழைத்து செல்லப்பட்டபோது ரவுடி தமிழழகு திடீரென காவலர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. காவரை தாக்கிவிட்டு ரவுடி தமிழழகு ஓட முயன்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ரவுடி தமிழழகுவை போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவரது காவலில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.
ஏ1 ரவுடி கருப்பு என்ற தமிழழகு மீது கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட 15 வழக்குகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. நேற்றைய தினம் ரவுடி தமிழழகு இன்னொரு ரவுடியை சந்தித்ததாகவும் இருவரும் ஏதோ சதித்திட்டம் தீட்டியதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். அவர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
காவலர்கள் சுட்டதில் படுகாயமடைந்த ரவுடி தமிழழகு இப்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications