நீ கிடச்சதாலே வாழ்க்கை எவ்ளோ அழகா இருக்கு.. மகாலட்சுமியுடன் ரொமான்ஸ் வீடியோ வெளியிட்ட ரவீந்தர்
சென்னை: வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கு என இப்போதுதான் தெரிஞ்சுகிட்டோம் என மனைவியுடன் ரொமான்ஸ் செய்து ரவீந்தர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
முதலில் ஆங்கராக இருந்த மகாலட்சுமி, பிறகு சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். இவர் சென்னையை சேர்ந்தவர். 32 வயதாகும் இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி சச்சின் என்ற மகன் உள்ளார். ஆனால் முதல் கணவருடன் மகாலட்சுமிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

தற்போது இரண்டாவது முறையாக தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இருவரும் காதலித்து திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர் தனது மகனை தன்னுடனேயே வைத்துக் கொண்டார். மகனின் பெயரான சச்சின் என்பதை கையில் பச்சை குத்தியுள்ளார்.
இவர் 2019 ஆம் ஆண்டு நடிகை ஜெயஸ்ரீ ராவின் கணவர் ரகுநாதனுடன் தேவதையை கண்டேன் சீரியலில் நடித்த போது பழக்கம் ஏற்பட்டதாகவும் தன் கணவருடன் மகாவுக்கு காதல் இருப்பதாகவும் ஜெயஸ்ரீ குற்றம்சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மகாலட்சுமி சன் மியூசிக்கில் பணியாற்றியுள்ளார்.
இவர் ராதிகாவின் அரசி சீரியலில் நடித்திருந்தார். அதன் பிறகு யாமிருக்க பயமேன், செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, அன்பே உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். வாணி ராணியில் பூங்கொடி கதாபாத்திரத்தில் நடித்து நன்கு அறியப்பட்டவர். 2022 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் தயாரித்த முன்னறிவான் படத்தில் நடித்த போதுதான் மகாவுக்கு ரவியுடன் காதல் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 11 மாதங்கள் ஆன நிலையில் இருவரும் அவ்வப்போது சமூகவலைதளங்களில் தங்களை பற்றிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார்கள். இந்த நிலையில் ரவீந்தரும் மகாலட்சுமியும் ரொமான்ஸ் செய்யும் வீடியோவை ரவி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
அதில் இருவரும் வெண்மையான நிற ஆடையை அணிந்திருக்கிறார்கள். அவர் கூறியிருப்பதாவது: நம்ம வாழ்க்கைல நாம திரும்பத் திரும்ப பாக்குற முகங்கள் நமக்கு நிறைய கிடைக்கும். ஆனா நம்ம வாழ்க்கைல திரும்பத் திரும்ப நினைக்க நல்ல குணமுள்ள ஆள் கிடைக்கிறது தான் கஷ்டம். அப்படி ஒரு ஆள் கிடச்ச வாழ்க்கை எவ்ளோ அழகா இருக்கும்னு நாங்க வாழ்றதுலதான் தெரிஞ்சுகிட்டோம்.. என தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications