வீட்டுலதான் இப்படி செய்றீங்க! ஐசியூவில் ஆக்ஸிஜன் மாஸ்குடன் இதெல்லாம் அவசியமா? நெட்டிசன்கள் விமர்சனம்
சென்னை: உடல்நிலை பாதிக்கப்பட்டு ஐசியூவில் இருக்கும் போது ரவீந்தர் இப்படி செய்யலாமா என கேட்டு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனம் செய்து வருகிறார்கள்.
லிப்ரா எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் ரவீந்தர் சந்திரசேகர். இந்த நிறுவனத்தின் மூலம் கவினின் நட்புனா என்னன்னு தெரியுமா, ஷாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை ரெவ்யூவும் செய்து வருகிறார். ஒரு யூடியூப் சேனலுக்கு தினமும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து வருகிறார். இவர் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர்.
இந்த நிலையில் இவருடைய தயாரிப்பில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி நடித்தார். அப்போது ரவீந்தருக்கு மகாலட்சுமியுடன் காதலாகிவிட்டது. இந்த காதல் ரகசியமாக மெயின்டெய்ன் செய்யப்பட்டு பிறகு இருவரும் திருப்பதியில் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் இவர்களுடைய திருமணம் பெரும் விமர்சனங்களுக்குள்ளானது.
மகாலட்சுமிக்கும் ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் திருமணமான ஒரு ஆண்டில் ரவீந்தர் சிறைக்கு சென்றார். படம் எடுப்பதாக கூறி பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு முதல் வகுப்பு வசதிகள் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து மகாலட்சுமி நீதிபதியிடம் குட்டு வாங்கினார்.
இதையடுத்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை தொடங்கினார். இந்த நிலையில் அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்துக் கொண்டிருந்த போது மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. அவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டதால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர் ஒரு வாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையிலும் அவர் மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்குடன் பிக்பாஸை விமர்சனம் செய்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து தலைவரே முதலில் உடம்பை பாருங்கள், பிறகு விமர்சனம் செய்யலாம் என்கிறார்கள்.
உடல் எடையைக் குறைக்க முயற்சித்தும் ரவீந்தருக்கு பலனளிக்கவில்லை. நான் அவருடன் இருந்த போது என் உணவு முறை மோசமாக இருந்தது. இரவு நான் தூங்கினாலும் என்னை எழுப்பி சாப்பிட வற்புறுத்துவார். என் கணவரால் எனது டயட்டை கூட பின்பற்ற முடியவில்லை என மகாலட்சுமி தெரிவித்திருந்தார். மேலும் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவலை மகாலட்சுமிதான் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications